என்னைப் பற்றி...
பெயர் பாஸ்கர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரு சிறு கிராமம் என் சொந்த ஊர். மேற்படிப்புக்காக சென்னை வந்தேன். பிறகு தொழில் நிமித்தம் (சாப்ட்வேர்)  காரணமாக சென்னையே வாழ்க்கை என்று ஆகி விட்டது.

கணனிக்கு
கருவிழி காட்டி 
விசைப்பலகைக்கு 
விரல்களால் விசை தள்ளி
நகம் கடித்து சிந்தனை ஏற்றி 
எனது காலமும் நகர்கிறது 
சாப்ட்வேர் இஞ்சினீயராக!

செல்லப் பிராணி வளர்ப்பது மிகவும் பிடிக்கும். நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறேன். மைனாவும் வளர்த்து வந்தேன். பறவைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம் என்று கருதியதால் அதை நிறுத்தி விட்டேன்.

சிறு வயது முதலே தோட்டம், வயல் வரப்பு என்று துள்ளித் திரிந்ததால் இயற்கை மீது அளவு கடந்த பாசம் உண்டு. இயற்கையை மிகவும் ரசிப்பேன். என் தோட்டத்தில் பல வகையான மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிராமத்திற்குச் செல்வேன்.

வாழ்க்கையில் பல நேரங்களில் விழுந்து இருக்கிறேன், ஆனால் வீழ்ந்து விடவில்லை.நான் படித்த பகவத் கீதை , அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற நூல்கள் வாழ்கையின் அர்த்தத்தை எனக்கு விளக்கியது. கடவுள் நம்பிக்கை உண்டு. இந்த உலகில் மிகவும் புனிதமானது பெண்மை. அதனால் பெண்மைக்கு மரியாதை அதிகமாகவே கொடுப்பேன்.

நான் நேசித்த ஒரு உறவு என்னை விட்டு விலகி சொர்க்கம் சென்ற போது என் இதயம் உடைந்து போனது. உடைந்த கண்ணாடி கூட ஒட்டி விடும் போல,...

கிடைக்கின்ற நேரம் எல்லாம் கவிதை எழுதுவேன். என் மனதை தாக்கிய உணர்வுகளைத்தான் பெரும்பாலும் கவிதைகளாக எழுதுவேன். சிலர் தலைப்பு கொடுத்து கவிதை எழுதச் சொன்னால் அதையும் எழுதுவேன்.ஒரு பாட்டாவது சினிமாவில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.

நம்பிக்கையை சக்கரமாக வைத்து என் வாழ்கையும் நகர்ந்து கொண்டு இருக்கிறது...பெரும்பாலான இடங்களில் எதை எழுதினாலும் முற்றுப் புள்ளி வைப்பது இல்லை. முடிந்து விடுமோ என்ற பயத்தினால்.
எனவே இங்கும் வேண்டாம் முற்றுப் புள்ளி

தொடர்புக்கு : 90879 13380
எனது பேஸ்புக் முகவரி


No comments:

Post a Comment