என்னுள் பாதியானவளுக்கு | To my beloved one

என்னுள் பாதியானவளுக்கு | To my beloved one


பட்டுச் சேலை நீ உடுத்தி 
பக்குவமாய் பாதங்கள் நகர்த்த
உன் தோழியரோடு சேர்ந்து 
உன் நாணமும் தலைமை தாங்கும்!

நாணத்தால் அன்ன நடை நீ இட 
காதோரம் எட்டா கொலுசொலி 
உறைந்த வெள்ளை பனிகட்டியாய்
உன் பாத வெள்ளிக் கொலுசுகள்!

தலை சாய்த்த ஒற்றை நெற்கதிராய் 
முகம் தாழ்த்தி நடை நீ இட 
பூமிப் பந்தின் இதயம் அது 
ரப்பர் பந்தாய் துள்ளல் கொள்ளும்!

ஆடி விடும் காதணிகள் 
ஆடி காற்றையும் எதிர்க்கும்
அறிவியல் விசையையும் தகர்க்கும்
நடை இது அன்ன நடை!

காலணிகள் பாரம் உணராது 
காதணிகள் ஆட்டம் கொள்ளாது 
 வளையல்கள் கோணம் மாறாது
கால் கொலுசுகள் ஓசை எழுப்பாது 
அனைத்தும் இதயத்தின் கட்டுக்குள்!
இல்லை இல்லை! நாணத்தின் கட்டுக்குள்!!

மணமேடையில் உன் பாதம் பதித்து 
மலர் மாலைகளுக்கு மணம் கொடுத்து 
எனக்கு மட்டும் உன் மனம் கொடுத்து 
மலர் மாலைகள் இட்டுக் கொள்வோம்!

அகம் கொடுத்து அருகில் அமர்வாய் 
அரவணைக்க  துடிக்கும் விரல்கள் 
அன்று மட்டும் மவுன விரதம் கொண்டு 
அய்யரின் மந்திரத்தில் மரியாதை கொள்ளும்!

நல் நேரம் நகர்கிறதென்று 
கை கடிகாரம் சொல்லி விட 
மூகூர்த்த நேரமோ அதை முத்தமிட 
சிறகுகள் முளைத்து அக்கினி பறக்க 
நாதஸ்வரங்களின்  வாழ்த்து ஒலியில்
விரல்களில் தாலி பற்றி கழுத்தில் இட 
என்னுள் பாதியாய் என் மனைவியாவாய்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக