சோகங்கள் | Sokam

சோகங்கள் | Sokam

Sokam
Sokam


உதித்தவன் மறைந்து இரவுகள் மலர 
உதயமாகிறது என் இதயத்தின் புலம்பல்கள்!
சில துளி பெருவெள்ளமாய் கண்ணீர் துளிகள்
சிறப்புரை ஆற்றுகிறது விழியோரங்களில்!

நிம்மதியை  இதயமருகே வர விடாது 
நித்தமும் காவல் புரிகிறது தனிமைகள்!
படுக்கை அறை போர்வைக்குள் ஒழிந்து
படாத பாடு படுத்துகிறது சோகங்கள்!

என்றாவது ஒரு நாள் முடிவுரை காணுமா?
ஏக்கத்தோடு படுக்கையறை நான் செல்ல 
எட்டும் தூரத்தில் எள்ளி நகையாடுது 
என் தூக்கம் தொலைக்கும் சோகங்கள்!

பிறப்பு என்றால் இறப்பு ஒன்று இருக்க 
சோகம் என்றால் இன்பம் மட்டும் இல்லை!
ஆகாயத்தில் பொலிவாய் கோட்டை கட்டி 
அடிமண்ணில் அஸ்திவாரமாய் சோகங்கள்!

ஆண்மகன் என்றால் அழக கூடாதாம் 
அழகாய் இருக்கிறது கலியுக பழமொழி!
அடக்கிய சோகங்கள் ஆயுள் குறைக்க 
அடி மண் இன்றே கண்டால் சந்தோசம்தான்!

ஆறடி மண்ணுக்குள் நான் சென்றாலும் 
அடக்கம் செய்யாதீர்கள் என் சோகங்களை!
அங்கும் சோகங்கள் நுழைந்து விட்டால் 
அகிலமே ! எங்கு நான் செல்வேன் ?






1 கருத்து: