தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
இவள் அழுகின்றாள் | Alukai
![]() |
Ival Alukindraal |
சிந்தனை விட்டு அகல மறுக்கும்
சிலுவையில் அறையப்பட்ட
குருதி கசிந்த நினைவுகள் அது!
விசா எதுவும் இல்லாமல்
விண்ணோடு உறவு கொண்டு
வீழ்த்த வருகிறது
சொந்த ஊர் சோகங்கள்!
உறவு தேடி வாழ வந்தவளை
வாழும் உறவுகள் சொன்னது
அகதி இவள் என்று!
கருவாய் வந்த நினைவுகள்
மழலையாய் முதிர்ச்சி பெற
அனைத்துக் கொண்டாள் இவள்.
சோகங்களின் அன்னை இவளோ?
கருவிழி சிந்த மறந்த கண்ணீரை
இவள் இதயம் தினம் சிந்தும்.
நித்திரை என்னவென்று அறியா
இவளின் ஆழ்மனது முனகல்கள்
சோகங்களின் தாலாட்டுகள்!
அளவுகோல் கொண்டு அளவிடமுடியா
அளவில்லா சோகங்கள் இவளோடு
நிழற்படம் இவள் எடுக்க
நிஜமாய் தெரிகிறது சோகங்கள்!
ஊனம் இல்லா உள்ளத்தால் அழுது
இரு வரி இதழ்களாள் சிரித்து
மெய்தனை கசியாமல் மறைத்து
சோகம் வெளிக் கொணராதவள்!
நரகம் சென்றது இவள் சந்தோசம்
நடை பிணமாய் இவள் வாழ்க்கை
நான் ஏது செய்வேன்?
இவள் அழுகின்றாள் அழுகின்றாள்!
காதலர் தின கவிதை | Lovers day Valentine day
![]() |
Kaathalar thina kavithai |
சிறகுகள் இல்லா என் தேவதைக்கு,
கற்பனை இல்லா கவியோடு
பொய் பேசா உன் விழியோடு
ராகம் பாடும் உன் இதழோடு
இசை மீட்டும் உன் காதணியோடு
தினமும் ஓர் விளையாட்டு!
அகமும் உணர்வும் அன்போடு
நாட்காட்டி நகர்த்திய நாட்களோடு
நடைபோட்டது நம் காதல் அன்போடு
கலந்து விட்டேன் இன்று உன்னோடு!
கரங்கள் தொட்டு நாம் விளையாட
அதனால் உன் நாணங்கள் கவி பாட
நம் காதல் கவித்துவம் பெற்று விட
ஏங்கினேன் மீண்டும் கவி வந்து விட!
இதயத்தால் உனக்கும் எனக்கும்
இன்று பிறந்த நாள் விழாவாம்!
தகவல் சொல்ல ஒற்றன் வந்தானாம்
சொல்ல வந்தது பிப்ரவரி 14 ம்
அகால மரணம்
அகம் அது சந்திக்காமல்
விழிகள் அது சந்தித்தால்
விளைவுகள் வீபரீதமானது
மரித்து விட்டது என் காதல்!
இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வில்
வழிப்போக்கனாய் வந்திருகிறது
வலி கொடுத்த அந்த காதல்!
விழியின் இறுதித்துளி கண்ணீரில்
வீழ்ந்து கிடக்கும் காதல் சுகத்தால்
நடை பிணமாய் வாழ்வு என்று
பொருத்தம் காணும் எதிர்காலம்!
சுகமாய் வந்த காதல்
சோகமாய் சென்று விட
நினைவுகள் உயிர் இழந்து
இதயம் அது துடித்தே இறக்கும்!
காதலுக்கு அழகு கூட்டி
பொய் கண்ட என் கவிதைகள்
மெய் சொல்ல மறந்தனவே!
காதல் பொய் என்று!
இனியொரு காதல்
இதயம் அது காணாது!
மரித்து போன காதல் உயிர்த்தெழ
காதல் ஒன்றும் இயேசு அல்ல!
அகால மரணம் கண்டது
என் காதல்!
கண் தானம்
நான் ஒரு பார்வை இல்லாதவன்!
இன்றைய சமுதாயத்தில்
ஊமை விழிகளின் உதாரணமாய்
பகலையும் இரவாய் நினைத்து
வாழ்கையை நகர்த்துபவன் நான்!
இரவுகள் ஆடை கழற்றி
பகல் பிறந்தது அந்த காலம்
அது கற்காலம்.
இரவுகளையே பகலாக்க
விழிகளாய் வந்தன
மின் விளக்குகள்!
இது இன்றைய காலம்.
நாகரிகம் வளர்ந்தாலும்
விஞ்ஞானம் செழித்தாலும்
என் விழிகளுக்கு ஒளி கொடுக்க
கண் தானம் ஒன்றே தீர்வு!
நிறங்கள் பல உண்டு
எங்களுக்குத் தெரிந்த
நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
அதுவும் சில நேரங்களில்
இருள் என்று
இதயம் உரைக்கிறது!
விரல் தொட்டு காசு அறியும்
விழி இல்லா விஞ்ஞானி நான்.
நிஜமாக நான் புலம்புகிறேன்
நிழலோடு என் வாழ்க்கை என்று!
இல்லாத விழிகளுக்கு
இமைகள் கொடுத்தான் கடவுள்.
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
இன்னொரு கடவுள் வருவான்
எனக்கு விழி கொடுக்க!
வானத்தின் நுழைவு அலங்காரம்
வானவில்லாம்.
அதன் நிறங்களோ ஏழாம்.
எங்களுக்குத் தெரிந்த நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
மலரும் பூக்களின்
மணத்தை நுகர்ந்தேன்.
நிறத்தை மட்டும்
விழிகள் பார்க்க முடிவதில்லை!
ரோஜா பூ வேறு
மிகவும் அழகாக இருக்குமாம்!
என் போன்றவர்கள்
இனியாவது பார்ப்பார்களா?
அந்த சிவந்த ரோஜாக்களையும்
விழி தானம் செய்ய போகும்
உங்களை போன்ற கடவுளையும்!
உங்களது தியாகத்தில்
உங்களது சிந்தனையில்
எங்கள் இமைகள்
இருள் மறக்கும்!
எங்களுக்கு ஒளி பிறக்கும்!
எங்கள் கருவறை இருள்
கடைசி வரை தொடர வேண்டாம்!
கண் தானம் செய்வீர்கள் தோழர்களே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)