Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கலைஞர் கருணாநிதி கண்ணீர் அஞ்சலி | Karunaanithi Anjali

Anjali
Karunanith



ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு முதல் பட்டதாரி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு இலவச மின்சார விவசாயி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு வள்ளுவன் சிலை!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு மாற்றுத் திறனாளி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு திருநங்கை!

இன்னும் எத்தனை புள்ளிகளோ 
அத்தனை புள்ளிகளும் முத்தமிடுகிறது
உன் கையொப்பம் இட்ட எழுதுகோலில்!

எழுதுகோலுக்கு மரணம் இருக்கலாம் 
எழுதிய எழுத்துக்களுக்கு மரணம் இல்லை!

எனது இனிய உடன் பிறப்புகளே!










அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam

Kalaam kavi
Kalaam Kavithai


இளைஞர்களை கனவு காண சொல்லி 
இந்தியாவையும் உற்சாகபடுத்தி
இரு துருவ முனைகளிலும் 
இந்திய பெருமையை எடுத்துரைத்து 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
பாரினில் நம் பெருமை எடுத்துரைத்து 
இரு வரி தமிழ் திருக்குறள்களை 
இளைஞர் இதயத்தில் விதைத்து

குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி 
குதூகலத்தோடு  நீயும் உரையாடி 
கேள்விக்கனை தொடுக்கச் செய்து 
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி 

பிறந்த ஒரு நாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து 
எம்மை விட்டுப் பிரிந்த  எம் கலாமே!

வருந்துகிறது! நீங்கள் இல்லா இந்தியா!





இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

nammalvaar

nammaalvaar

இயற்கையின் வேதனை 
இயல்பாக இல்லாமல் 
செயற்கையினால் வந்த 
செயற்கை என நீ அறிந்து
செயற்கையை கருவறுத்த
இயற்கையின் புதல்வனே !

இயற்கையை சிரிக்க வைத்து 
சிரிப்பின் சிதறல்களாய் - ஆங்காங்கே
இயற்கை விவசாயம் 
நலம் பெறச் செய்த நல்லவரே!

இயற்கை உரங்களின்
தவறான இலக்கணமாம்
செயற்கை உரங்களை 
வீழ்த்தச் செய்தவரே!

இயற்கையோடு இயற்கையாய் 
இரண்டற நீ கலந்ததால் 
உன் இயற்கை ஆர்வம் 
இறைவனும் அறிந்து
அழைத்து விட்டான் உன்னை!

நீ இல்லா இயற்கை 
இனி இடர் கண்டு விட
எங்கு சென்று தேடுவோம் உன்னை!

உங்களது ஆன்மா
சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறேன்!

https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878






காமராஜர் | Kamarajar

Kavithai kamarajar
Kaamarajar kavithai

ஏழைகளின் கல்விக் கனவு
விடியும் முன்னே பலிக்கிறது
கற்கண்டாய் இனிக்கிறது - உன் 
கல்வித்திட்டம்.
ஆரவாரம் கொள்கிறது 
மதிய உணவுத் திட்டம்.

மக்களுக்கு மகுடம் சுட்டி 
படிக்காத மேதையாக 
பண்பாளன் நீ ஆட்சி செலுத்த 
எளிமையும் நேர்மையும்
எட்டிப் பிடித்து
உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்
உயிர்த் தோழனாயாய் அமர 
நேர்மைக்கும் எளிமைக்கும் 
வாய்ப்பு கொடுத்தாய்!

இறக்கும் வரை 
இறங்க வில்லை - அவைகள் 
உன் தோளை விட்டு!

உனது எளிமையும் நேர்மையும் 
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
பள்ளி கல்லூரி பொது இடங்களில்
உருவச் சிலையாய்!

உன் சிந்தனையில் உதித்து 
உயிர் பெற்று 
கம்பீரமாய் காட்சி தருகிறது
பல தொழிற்சாலைகளும்
பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்
உன் உருவச்சிலை 
உயிர் பெற்று நிற்கிறது
பட்டி தொட்டி எல்லாம்!

மண்ணில் பிறந்து 
மனதை விட்டு நீங்காமல் 
சரித்திரம் படைத்த கர்ம வீரரே !
கிங் மேக்கரே!
ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!
இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!