Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி

pillaiyaar
Vinaayagar Chudarthi


அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே பாடல் சாயலில்....


முதன்மை கடவுள் உன்னை நாங்கள் போற்றிடுவோமே!
உன் அருளும் கொண்டு நாங்களும்தான் வாழ்ந்திடுவோமே!
ஐங்கரம் கொண்டு நீயும் அருளிடுவாயே !
அருகம்புல் மகத்துவமும் புரிந்து கொண்டோமே!

உ எழுத்தை பிள்ளையார் சுழி ஆக்கியவன்
கஜம் முகம் கொண்டு கஜமுகன் ஆனவன்
அரச மரம் பலன் அறிந்து கொண்டவன்
அதையே இருப்பிடமாய் ஏற்றுக் கொண்டவன்!

தோப்புக்கரணம் அறிவியலை தொடங்கி வைத்தவன்
வழிபாட்டில் விஞ்ஞானத்தையே சேர்த்து வைத்தவன்!
தாய் தந்தை உலகம் என்று சொல்லி வைத்தவன்
ஓம் கார ரூபத்தின் இருப்பிடம் ஆனவன்!





உவரி சுயம்புலிங்க சுவாமி | uvari suyambulinga swamy

Oovari
Oovari Suyambulinga temple


அமைதியும் அருளும் தரும் சுயம்புவே!
அலைகடல் உவரியின் அருள் நாயகனே!

அள்ளித் தந்து உலகை வாழச் செய்து
அழகாய் பொலிவாய் வீற்றிருப்பவனே!
பக்தர்கள் வாழ்வுகளின் துயர் துடைத்து
பல மடங்கு இன்பம் பெருக்கியவனே!

மணி ஓசை பக்தர்கள் தூண்டினதால்
மகிமைகள் பல நீ செய்தவனே!
விரதங்கள் பக்தர்கள் மேற்கொள்ள 
விரைந்து அருள் பாலித்தவனே! 

தூயரம் கொண்டு உன்னை நாடியவர்களின்
துயரங்களை துடைத்து எறிந்தவனே!
அலைச்சல் கொண்ட பக்தர்களை 
அதிசயம் காண செய்தவனே!

உன் மணமான சந்தனமும் விபூதியும் 
பக்தர் வெற்றித் திலகமாய் கொடுத்தவனே!
உன் அருள் உலகம் அறிந்ததினால் 
உலகமே உன்னை நாடச்  செய்தவனே!






christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas
christmas in tamil

கருணையின் சிகரமாய் 
கடவுளாய் பிறந்தவன்
கடவுளின் ஒளி!

வருந்தும் உள்ளங்களின் 
வாழ்க்கை வழி காட்டியாய்
வாழ்வு கொடுத்த ஒளி!

வாயில்தோறும் மின்னொளியில்
ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
வீடு தேடி வந்த ஒளி!

சுக்குநாறிப் புல்லில்
வளர்ந்து விட்ட குடிலில்
அவதரித்த புனித ஒளி!

கேட்டதும் கொடுத்து 
தட்டியதும் திறந்து 
தேடியே கண்ட ஒளி!

மானுடர்களை இரட்சிக்க 
மாட்டு தொழுவத்திலே
புனிதனாய் பிறந்த ஒளி!

ஒளி தந்த வெளிச்சத்திலே
துயர் கொண்ட இருள் நீங்கி
வாழ்வை செழுமையாக்கிய  ஒளி!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!






Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்


Hindu
Arthamulla Indhu matham


காலம் கடந்து 
நான் தொட்ட பகவத் கீதை.
உண்மைதனை உணர்ந்தேன்
விதியும் மதியும் என்னவென்று.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

என் காதலுக்குக் கண்ணில்லை
காதலை பொறுத்தவரை
நான் குருடன்தான்- ஆனாலும் 
பள்ளம் மேடு அறிந்து 
பாதையில் பயணிப்பேன்.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

ஒரு கோப்பையிலே 
உன் குடியிருப்பு - இனி
உன் அர்த்தமுள்ள இந்து மதத்திலே
என் குடியிருப்பு.

கவிதை உலகிற்கும் 
கற்பனை உலகிற்கும்
தத்துவ உலகிற்கும் 
மறையா சூரியனே!
கவிஞர் கண்ணாதாசனே!

அர்த்தமுள்ள இந்து மதம் 
அருளியமைக்கு நன்றி!