![]() |
Happy Fools day! |
கலியுக அரசியல்வாதிகளால்
சிந்திக்க மறந்த முட்டாளாகினோம்!
கற்பனை இல்லா உதாரணம் நாம்
நிச்சயம் கலப்படம் இல்லா உண்மை!
இலவச பொருட்கள் எல்லாம்
இலவசமாய் இன்று இல்லத்தில்!
இலவசத்தோடு இலவசமாய்
இலவச முட்டாள் இணைப்பிதழ் ஆனோம்!
ஊடகங்களின் அகோர பசிக்கு
உணவாக தினமொரு பொய்கள்!
குப்பை உணவான உண்மைகள்
உப்பில்லா உணவாய் முட்டாள் மக்கள்!
கார்ப்பரேட் எல்லாம்
சரியாய் சிந்திக்கும்
சரியாய் சிந்திக்கா மக்களை
சரியாக பயன்படுத்தும்!
சரி எது ? தவறு எது ?
அறிவாளியா ? முட்டாளா ?
தவறாய் சொல்வார்கள்
முட்டாள்தான் சரி என்று!
மணல் திருட்டெல்லாம்
கண் முன் கொள்ளை!
தினம் அறிந்து இதழ் திறக்கா
நாம் எல்லாம் முட்டாளின் எல்லை!
கட்சியின் கொள்கை எல்லாம்
கண்ட ---------ம் சொல்லும்!
பயணம் என்னவோ
ஊழலை நோக்கியே செல்லும்!
நாளும் ஏமாறுவதை
மூளைக்கு நினைவுபடுத்தவே
ஏமாற்றத்தை எடுத்துரைக்கவே
நமக்கென்று ஒரு நாள்!
முட்டாள் தினத்தை
கொண்டாடுங்கள்!
தலை கவிழ்ந்து நாணம் மறந்து
கொண்டாடுங்கள்!
முட்டாள் தின வாழ்த்துக்கள்!