![]() |
Kaalkalil Or Kaathal |
அழகில் சில வகைகள் உண்டு
தேக நிறத்தை சிலர் அழகென்பர் !
உள்ளத்தை சிலர் அழகென்பர்
முக அமைப்பை சிலர் அழகென்பர்!
கருவிழிகள் ரசித்த எல்லாமே
படைப்பு எல்லாமே சிலர் அழகென்பர்!
சிந்தனை கோளாறோ வசியக் கோளாறோ
அவள் பாதங்கள் மட்டும் அழகென்றேன்!
காரணம் என்னவோ புரியாத கவிதை
கருங்கூந்தல் ரோஜா பூச்சூட மறந்து
பாத விரல் சூட நினைவூட்டியது போல
கனா சொன்ன காரணம் சற்றே ஏற்புடையது!
காற்றின் ஈரப்பதத்தை கவர்ந்திழுத்து
அதை பாத விரல் நுனியில் கீரிடமிட்டு
சிவந்த முகமாய் சிரிக்கிறது
பாத விரல் நகங்கள் எனும் கண்ணாடிகள்!
நாணம் கொண்டு தலை கவிழும் நேரம்
பாத விரல் நகம் கொண்டு
உன் முகம் நீ பார்ப்பாய்!
பத்து விரல்கள் ஜொலிக்கும் கண்ணாடிகள்!
நேரத்தை வீணடிக்கும் கவிதைகள்
உனது பாதங்களில் பிறப்பதில்லை
பாதத்தில் பிறந்து விட்ட கவிதைகள்
இதயத்தை வசியம் செய்ய மறப்பதில்லை!
தலையணை தலை சுமப்பதை விடுத்து
உன் பாத போதையை சுமக்கட்டும்!
ஆடை இல்லா பாத விரலில்
கவர்ச்சியும் இல்லை ஆபாசமும் இல்லை !
ஒரே இதயத்தை பாதம் தொட்டு
பத்து விரலுக்கும் காணிக்கையாக்கி
பாத அழகில் முழுவதும் மயங்கி
உன் பாதத்தில் சரணடைந்தேன்!