தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai
![]() |
Friendship day kavithai |
உறவுகள் பலவிதம் என்று
உலகம் விதைத்து இருக்கிறது
நட்பு என்ற விதை ஒன்று
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!
ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!
காதலை சல்லடை இட்டால்
வயதைச் சொல்லும்
நட்பை சல்லடை இட்டால்
உயிரை உணர்வை சொல்லும்!
விவரம் அறியும் முன்
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை
நட்பு பிறக்க உயிரே தேவை!
பதில் இல்லா வினாக்கள்
நட்பில் எழுவதில்லை
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை!
குழந்தையின் கிறுக்கல்கள்தான்
ஆனாலும் புரிந்து விடுகிறது
நட்பாக கிறுக்கிப் பார்
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!
இரவின் இடைவெளி பகலா
பகலின் இடைவெளி இரவா
உயிரின் இடைவெளி நட்பா
நட்பின் இடைவெளி உயிரா!
மயில் இறகில் அழகு விழிகள்
குயில் குரலில் ஓர் சங்கீதம்
தூணிலும் துரும்பிலும் இறைவன்
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!
எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
காதல் கனி | Kaathal kani
எட்டாத கனி அது காதல் என்று
சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள்
எட்ட முடியவில்லை ஆதலால்
சிலருக்குப் புளித்து விடுகிறது!
எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன்
முழுவதும் ருசிக்கும் முன்
தவறான முடிவெடுத்து விடுகிறான்
இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!
எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை
எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை
இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை
தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !
சாலை விதிகள் | Saalai Vithikal
![]() |
Saalai Vithak Kavithai |
வீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!
தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!
வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!
விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!
வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!
ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!
முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!
வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!
மகளதிகாரம் - அட்சய பாத்திரங்கள் | Makalathikaaram
![]() |
Thanthai Makal |
விருப்பமில்லா வெயிலோடு
சண்டையிட்டு களைத்து திரும்ப
முகம் பார்த்த என் வீட்டு கண்ணாடி
முகம் அலச உத்தரவிட்டது!
இரு கரங்கள் சிறு குவளையாய்
பொறுக்கிய நீர் தன்னில்
முகம் அலசி தொலைகாட்சி முன்
சம்மனமிட்டு அமர்ந்தாயிற்று!
தொலைக்காட்சி ஒலியை தாண்டி
செவியில் நுழைந்தது அந்த ஒலி
அப்பா சாப்பாடுறீயா ? - திரும்பினேன்
வெற்றுப் பாத்திரம் ஏந்தி என் மகள்!
அம்மா சாப்பாடு தருவாள் என்றேன்
அகம் கடிந்து கொண்டாள்
இன்று என் சமையல்
இப்போ நீ சாப்புடுவீயா ? மாட்டியா ?
மகளதிகாரம் என்பதால் அடங்கி விட்டேன்
பரிமாறு சாப்பிடலாம் என்றேன்
வெற்றுப் பாத்திரங்கள்
அணி வகுப்பெடுத்து முன் அமர்ந்தன!
இங்கே எங்கே சாதம் இருக்கிறது என்றேன்
விழி கொண்டு தேடியவள்
வெற்றுப் பாத்திரம் கையில் ஏந்தி
வெற்றுக் கரண்டியோடு பரிமாறினாள்!
இதழ்கள் திறந்து சிரித்து விட்டேன்
சாப்பிடும் போது என்ன சிரிப்பு ?
ஒழுக்கம் கற்றுக் கொடுத்தாள்
மீண்டும் மகளதிகாரம் அடங்கி விட்டேன்!
உப்பு காரம் எல்லாம் இருக்கா ?
காரம் இல்லா இனிப்பான கேள்வி
ஆம்மாமா! சூப்பரா இருக்கு என்றேன்!
சரி , சாப்பிடும் போது பேசாதே என்றாள்!
இடையிடையே வெற்றுக் கரண்டிகள்
இடைவிடாமல் பரிமாறின.
வேறு ஏதாவது வேணுமா ?
இடைவிடாத கேள்விகளும் தொடர்ந்தன!
வெற்று வயிறு நிரம்பியது
விடை பெறட்டுமா ? என்றேன்
இருப்பா, தண்ணீர் இங்கே இருக்கு என்றாள்
கரம் கழுவி எழுந்து நின்றேன்!
கரை படியா பாத்திரங்கள்
கழுவி கவிழ்த்து வைத்தாள்
விளையாட்டு முடிந்ததா? என்றேன்
சாப்பாடுதாம்ப்பா முடிந்து இருக்கு என்றாள்!
உணவை விளையாட்டு என்றெண்ணிய
உணர்வில்லா என் பெரு மூளையை
உணர்வுள்ள என் இதயம் சுட்டுவிட
உற்று நோக்கினேன் என் மகளையும்
உறங்கிய வெற்றுப் பாத்திரங்களையும்!
வெற்றுப் பாத்திரங்கள் எல்லாம்
பாசத்தின் அட்சய பாத்திரங்கள்
பரிமாறிய உணவுகள் எல்லாம்
பாசத்தின் பசி போக்கிகள்!
மகளதிகாரம் எல்லாம்
மரணம் தாண்டியும்
மரணிக்காமல் நினைவில்
மறவாமல் வர வேண்டும்!
வாழ்ந்து காட்டி விடு | Vaalnthu kaati vidu
![]() |
Vaalnthu Kaatu |
காதலை அறிமுகம் செய்தவளே
வலியை சிறிது ஆற விடு
நாளைய நாளுக்கு வழி விடு!
விழிகளுக்கு ஓய்வு கொடு
கண்ணீருக்கு விடை கொடு
முகத்தை பொலிவாக்கி விடு!
சிரிப்பை எல்லாம் அள்ளி விடு
அதில் இன்பத்தை சற்று சிதற விடு
சிதறியதை என்னோடு பகிர்ந்து விடு!
உன் கனவில் என்னை வர விடு
கட்டியணைத்து ஆறுதல் சொல்ல விடு
உன் கண்ணீரை என்னோடு பகிர்ந்த்து விடு!
வாழ்க்கை கதவை திறந்து விடு
வெற்றி எனும் தென்றலை உலவ விடு
அமைதி வாழ்வை கரம் பிடித்து விடு!
விதி ரேகையை முற்றிலும் மாற்றி விடு
விடாது முயற்சிப்பவள் நிரூபித்து விடு
தோல்விகளை கைது செய்து விடு !
வழக்கம் போல சுழன்று விடு
வாழ்க்கை சுழற்சி நகர விடு
சரித்திரம் எட்டி பிடித்து விடு!
துன்பத்தை எல்லாம் மறந்து விடு
பெண் சிங்கமாய் வேட்டை ஆடி விடு
ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு விடு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)