தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
முதிர் கன்னி
![]() |
Muthir Kanni |
நீ கிழித்தெறியும் நாட்காட்டி
உனக்கு உணர்த்தியிருக்கும்
காலம் என்றால் என்னவென்று!
யாரும் இல்லா நேரம்
உன் வீட்டு கண்ணாடி
உனக்கு உணர்த்தியிருக்கும்
நெற்றி பொட்டில் இருக்கும்
குங்குமத்தின் மகிமையை!
நீ தாண்டி செல்லும்
கல்யாண மண்டபங்கள்
உனக்கு எட்டா கனியாக
தெரிந்திருக்கும்!
முதிர் கன்னியே!
உனக்கு ஆறுதல் சொல்ல
தமிழில் வார்த்தைகளும் உண்டு!
காலம் கடந்தும்
வாடாத பூவாக !
என்னை காதலித்து பார்!........
கணினி துறையின் பணி சுமை
![]() |
Pani Sumai |
பணி சுமைகள் கூட
சுகங்கள் என்று
உதட்டளவில் உச்சரிக்கும்
கணினி வல்லுநர் நான்!
கணினியை நினைத்து
கழனியை மறந்தேன்.
இன்று அவை தரிசு நிலங்களாய்!
கட்டிலில் படுத்து
கனவு கூட கண்டதில்லை.
கணணியை தொட்ட நாள் முதல்!
கவிதை எழுத வேண்டும் என்று
கற்பனைகளுக்கு நேரம்
ஒதுக்குகிறேன்!
இந்த மாதம்
அரசு விடுமுறை வருமா?
பணி சுமையின் காரணமாக
என் கற்பனைகளுக்கு
பகலில் நேரமில்லை!
சரி, இரவுதான் வருகிறதே என்று
கற்பனை சிறகை பறக்க விட்டால்
மின்னஞ்சல் எனும் தூதுவன்
சிறகில்லாமல் பறந்து வருகிறான்.
அயல் நாட்டிலிருந்து!
சிறகுகள் ஒடிக்கப்பட்டு
எனது கற்பனைகளும்
கால்கள் உடைக்கப்பட்டு
எனது பேனாவும்
கணினி முன்பு மண்டியிட்டன!
இரவு தன் ஆடை கழற்ற
பகல் பிறக்கிறான்.
எனது வாழ்க்கை சுழற்சி
ஆரம்பமானது.
உண்மையை சொல்லுகிறேன்
எனது தலையில் சுமை அல்ல
இருந்தாலும் உணர்கிறேன்.
சுமைகளை சுமந்தது போல
கணணி துறையில்
சேர்ந்த நாள் முதல்!
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன!
அது என்னமோ உண்மைதான்!
எனது திருமணமும்
அங்குதான் நிச்சயிக்கப்படும் போல!
என் இரவுக்கு வெளிச்சம் தர
நான் நிலவை தேடுகிறேன்
எனக்கு வெளிச்சம் தர
முன் வருகிறான்
எனது கணணி திரை!
இரவினிலும் இவன் தொல்லை
தாங்க முடிய வில்லை.
சிறு வயதில்
பள்ளிக்கு செல்ல மறுத்தேன்.
என் அலுவலகமும்
என் சிறு வயது பள்ளி கூடம் தான்.
ஒரே ஒரு வித்தியாசம்
அங்கு எழுத்து பலகை
இங்கு விசை பலகை.
புயலையும் தாங்கும் பூக்கள்
எங்கள் கணணி துறையில் ஏராளம்.
தழுவும் தென்றலில்
தலையாட்ட விரும்பும்
பூவாக நான் இருக்க ஆசை!
நலம் விசாரித்த
அன்பு உள்ளங்கள்
இன்று தூரத்து சொந்தங்களாய்!
நலம் விசாரித்த
அன்பு உள்ளங்கள்
இன்று தூரத்து சொந்தங்களாய்!
காலம் எனும் வேகமும்
கணணி துறை எனும் வளர்ச்சியும்
கண்கள் கூட இமைக்காமல்
வேலை செய்ய கற்று கொடுக்கும்.
முகவரி எழுதாத
என் மூளை எனும் கடிதம்
நிம்மதியை தேடி இன்னமும்
பயணிக்கத்தான் செய்கிறது.
என்னோடு சேர்ந்து
பல கடிதங்கள்.
மழலையும் கடவுளான பின்னனி - done
சிட்டு குருவி | chittu kuruvi
முற்றுப் புள்ளி......
![]() |
Muttrup pulli |
மதம் கொண்ட காம கொடூரர்கள்
மலராத மொட்டுக்களையும்
பிய்த்து எறிந்தனவே!
பயிரை காக்க வேண்டிய வேலி கூட
சில நேரம் பயிரை மேய்ந்து விட்டு
சீரழிக்கவும் செய்திடுகிறது.
சட்டம் எனும் அதிகார பேனா
பாலியல் பலாத்காரம் எனும்
வன்கொடுமைக்கு முற்றுப் புள்ளி
வைக்க மறந்தது போலும்.
என் பாரத தாயே!
உன் விழியோரம் மை தேடி
முற்றுப் புள்ளி வைத்து விடு!
கடிகாரம்
![]() |
Kadikaaram |
பன்னிரண்டு எண்களை வைத்து
மூன்றே மூன்று பேர் மட்டும்
விளையாடும் விளையாட்டிற்கு
மானுடர்கள் வைத்த பெயர்
கடிகாரம்!
ஒன்று முதல்
பன்னிரண்டு வரையிலான எண்கள்
படைக்கப்பட்டது உனக்காகத்தானோ ?
கூண்டுக்குள் அடைபட்ட முட்கள்
முத்தமிட துடித்து முத்தமிடாமல்
விலகிச் செல்கிறது!
முட்கள் என்பதால்
உரசல்கள் கூட
இங்கு நடை பெறவில்லை!
உங்கள் கால்கள்
ஆணியில் அடிக்கபட்டதால்
ஆணித்தரமாக எடுத்துரைகிறாய்!
கடந்த காலம்
திரும்ப வராது என்று!
உன்னை மானுடர்கள்
உள்ளங்கையில் அடக்கினாலும்
நீ காட்டும் காலத்தை மட்டும்
மானுடர்களால் அடக்க முடிவதில்லை!
மானுடர்களின் சிம்ம சொப்பனமடா நீ!
உனது நொடி முள்ளின்
ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
பூங்காவில்
அவளுக்காக காத்திருந்த பொழுது!
நிமிட முள்ளின் ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
தேர்வு அறையின்
இறுதி நேர்த்தில்!
மணி முள்ளின் ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
அவளுடன் மணிக்கணக்கில்
பேசி விட்டு பிரியும் பொழுது!
காலம் எனும் பூவை
சுற்றி வரும் வண்டுகள்
நீங்கள்தானோ?
காலம் எனும் பூ
உதிர்வதற்கு முன்
பறிப்பது
மானுடர்களாகிய
நமது சிந்தனையில் தான் உள்ளது!
காலம் பொன் போன்றது நம்
கடமை கண் போன்றது!
ஒவ்வொரு கடிகாரத்தினுள்ளும்
எழுத பட வேண்டிய
மானுடர்களின்
புதிய திருக்குறள்!
இவள் பூலாக தேவதை
![]() |
Pooloka Thevathai |
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்.
இடப்பக்க மூளை பல முறை
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!
எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள்
தேவதையின் அழகை போல்
அமைந்ததால் - கன்னியே
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!
எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை
கவிதையின் வழியாக
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!
இறுதியாக என் மனமும்
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்தது.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!
இவள் பூலாக தேவதை!!!
பரிசு பெற்ற பேனா
![]() |
Kaathal Parisu |
மையை அம்பாக தொடுத்து
காகிதத்தோடு போர் புரிந்து
எனது பேனா கண்ட வெற்றி - கவிதை !!!
வெற்றி கண்ட களிப்பிலும்
அமைதியாய்
என் சட்டைப்பையில்
நின்று கொண்டிருந்தான்.
கன்னி அவள் பாதங்கள் பட்டு
பாத சுவடுகள் பூ பூத்திட
நடந்து என்னருகே வந்தாள்.
கன்னி அவளின்
வாழ்த்துகளை எதிர்நோக்கி
கம்பீரமாய் காட்சி கொடுத்தான்
என் பேனா!
கவிதையை படித்தாள்
இரு வரி இதழ்களால்
காகிதத்தை முத்தமிட்டாள்.
எழுதியவன் இவன் என்று
பேனாவை சுட்டி காட்டவில்லை
எனது ஆட்காட்டிவிரல்!
எல்லாம் அறிந்த கன்னி
அருகே வந்தாள்
அகம் குளிர்ந்தாள்
இதயம் குளிர்ந்து
இதயமும் கனிந்தது
பேனாவின் வருத்தமும் மறைந்தது!
காதல் கற்பித்த பாடங்கள்
![]() |
Kaathal Paadankal |
நான் ரசிக்க கற்று கொண்டேன்
உன் கண்கள் பூக்கள் ஆனதால்!
இசையின் வலிமையை புரிந்து கொண்டேன்
உன் மௌனங்கள் சங்கீதம் படிப்பதினால்!
நடனம் ஆட கற்று கொண்டேன்
உன் காதணிகள் நடனம் ஆடுவதால்!
படிக்க கற்று கொண்டேன்
உன் இருவரி இதழ்கள் என் திருக்குறள் ஆனதால்!
உன் காதலை புரிந்து கொண்டேன்
நீ விட்டு கொடுக்கும் காதல் தருணத்தால்!
நீர்த்துளிகளின் போராட்டம் | குளியல் கவிதை - -
மரங்களை தின்னும் மானுடன் | மரம் விழிப்புணர்வு பற்றிய கவிதை | maram kavithai in tamil | Tree kavithai
மரம் விழிப்புணர்வு பற்றிய கவிதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)