![]() |
அன்னையர் தின கவிதை |
உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!
உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!
உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!
நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!
பத்து மாதம் அல்ல
முடிவிலி சுமையாய் இருந்தாலும்
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே
முடிவிலி எண்ணிக்கையில்
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!
அன்பை அளவிட நினைத்தேன்
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!
முதல் கவிதை எழுத முயற்சித்தால்
உன் அன்னையை நினைத்து விடு
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால்
கவிதையில் கற்பனை கலப்படம்
துளி அளவும் கலந்திருக்காது!
அன்னையின் முன்னே
சொல்லக் கூடாத உண்மை
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய்
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள்
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!
இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி
என் இதழ் மட்டும் அல்ல
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது
இதயமும் சிரிக்கிறது!
வான் உச்சிக்கு வந்த சூரியன்
கதிர் மூலம் என்ன சொல்லியதோ
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும்
இவள் பாசம் அறியும்!
மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில்
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன்
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !
இவளுக்கான உணவை
இரவுகள் எடுத்து வைக்கிறது
எஞ்சிய உணவுகள்
அன்னையர் தின கவிதை >>>>> Download Now
பதிலளிநீக்கு>>>>> Download Full
அன்னையர் தின கவிதை >>>>> Download LINK
>>>>> Download Now
அன்னையர் தின கவிதை >>>>> Download Full
>>>>> Download LINK