Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்

மழை குழந்தையை தா


ஏ மேகமே !

பகலவனின் பார்வை
கொடூரத்தால் பலனின்றி போனாய் !

தன் குளிர் காதலியோடு 
சண்டையிட்டு வெப்பத்தை தழுவி 
வியர்வையை பரிசளிக்கும் 
தென்றல் காற்றிடம் 
நேரம் கடன் வாங்கி 
தேசம் எங்கும் பயணித்து பார் !

வெள்ளை கூந்தலாய் 
அருவி வழிந்தோடிய மலைகள் ...
கூந்தல் இழந்த பருவபெண்ணாய்..
அழகு இழந்து இருப்பதை பார் !

மாலை வான நட்சதிரமாய் 
பூக்கள் குலுங்கிய சோலைகள்..
பாலை தேசமாய் படர்ந்திருக்கும் 
நிலையை பார் !

நீராடிய பெண்ணின் 
முகத்தில் நீர்த்துளியாய் 
பனி படர்ந்த புல்வெளிகள் 
பாழ் பட்டிருக்கும் சோகம் பார் ...

நஞ்சையும் புஞ்சையும் 
விளைந்த நிலங்கள் எல்லாம் 
செருப்பின்றி நடந்த பாதமாய் 
வெடித்து கிடப்பதை பார் !

மீன்கள் துள்ளிய நீர்நிலைகள் 
தன் தாகம் தீர்க்க நீரின்றி 
தவிப்பதை பார்...

நிலைமை பார்த்த பின் ...

உன் கடல் காதலியோடு 
வான வீதியில் சரசமாடி 
மழை குழந்தையை தா !


மண்ணின் மகிழ்ச்சிக்காக !





சினிமாவின் மறுபக்கம் | cinema marupakkam


பல பாடல் வரிகளில் 
கவிதை இல்லை 
கற்பனையும் இல்லை 
கலாச்சார சீரழிவு 
தெளிவாகத் தெரிகிறது.

சில நகைச்சுவை வசனங்களில்
சிந்தனை இல்லை.
இரட்டை அர்த்தங்களுக்கு 
விதி விலக்கு  இல்லை.
இங்கே அவமானம் 
பெண்மைக்கு சமர்ப்பணம்.

ஒவ்வொரு பாடலும் 
பிரதிபலிக்கிறது
வாலிப பருவத்தின் 
புட்டி பால் மது என்று!

ஒளியும் ஒலியும் 
ஒழுங்காய் அமையவில்லை
ஒழுக்கம் கெட்டுப் போகிறது.
எங்கள் சினிமாவில்....






பருவக் கோளாறு...


படிப்பை முடிக்காமல்
சிந்தனை தெளிவில்லாமல் 
பண்பாடு அறியாமல் 
பணம் சம்பாதிக்காமல் 
செலவழிக்க தவறாமல் 
சரியான வயதை எட்டாமல் 
இவர்களுக்கு மட்டும்
வந்து விடுகிறது காதல்!

பிஞ்சிலே சில காய்கள்
வெம்பி பழுப்பது உண்டு.
இவர்களுக்கு எப்பொழுதுமே 
அக்கினி கோடை காலம்தான்!

தாகம் தணிந்த மயக்கம்


குப்பைத் தொட்டியில்
Kuppai thotti
குப்பைத் தொட்டியில்
குழந்தையாய்...

சதை கொண்ட ஏக்கங்கள்
கட்டிலில்
தாகம் தணிந்த மயக்கம்
குப்பைத் தொட்டியில்!

பத்து மாத பாரம் தாங்காமல்
தூக்கி எறிந்தாயோ
சுமைகள் உனக்கு சுகம் தானே!

என் அழுகை குரல்
கண்காட்சி ஒன்றை ஏற்படுத்த
மாந்தர்கள் கூடி நின்று
உன்னை அழுக்காய் விமர்சிப்பார்களே!

ஐயோ அம்மா
நான் என்ன செய்வேன்
குப்பையில் கிடந்ததால்
அறிவில்லா மாந்தர் என்னை
அழுக்காய் பார்ப்பார்களே!

குப்பைத் தொட்டியில் குமுறல்கள்
என் தேசத்து கீதங்கள்
என் நினைவுச் சின்னமாய்
என் அகத்தினிலே பதிந்திருக்கும்
என் தேசத்து குப்பைத் தொட்டி!

என் தேசத்து ஒரு நாள் தொட்டில்!

காலை நாளிதழ் பார்த்து
உன் வேதனை நிம்மதி அடைகிறது
குப்பைத் தொட்டியில்
பச்சிளங் குழந்தை மீட்பு!






பேசிய கண்கள்



நீ பேசும் வார்த்தைகள் 
என் செவிகளுக்கு  எட்டவில்லை 
கண்களுக்கு எட்டியது.
நீ கண்களால் பேசுவதால்!

வறுமையின் விலை...


Varumai
Varumai kavithai
வறுமை  சில நேரங்களில்
வீதியில் விலை போகிறது
விபச்சாரி

பூக்களின் ராணி மல்லிகை | jasmine flower kavithai --

malli
Mallikai


மல்லிகைப் பூவின் 
மணத்தை தென்றலும் 
இரவல் வாங்கி உலா வருகிறது.
மல்லிகைப் பூவிடம் கடன் பட்ட தென்றல்!

வாலிப வயதில்தான் புரிந்தது
காலை வேளையில் மலராமல் 
அந்தி வேலை ஏன் மலருகிறாய் என்று!

உன் மணம் கண்டுதான் 
இரவுகள் உனக்கு பட்டம் அளித்திருக்கிறது
காமத்தின் தலைவன் மல்லிகை என்று!

ஆடை அணியாமல் 
அளவற்ற்ற பூக்கள் இருந்தாலும் - என்
அகம் ரசிப்பது என்னவோ உன்னைத்தான்!

உன் அழகினை ரசிக்க 
மாலை நேர சூரியன் 
மேற்கில் உதிக்க ஆசைபடுகிறான்.

உன்னை காதல் செய்ய 
ரோஜாவும் ஆசை கொண்டதால் 
உன்னோடு சேர்ந்து 
நூலில் கோர்க்கப்படுகிறான்.

பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் 
பழமொழி இது 
பழமை மாறவில்லை - மல்லிகையினால்!
பொறாமையில் சிவந்தது ரோஜாக்கள்.

உன் அழகை ரசிக்க 
இரவெல்லாம் விழித்துக் கொண்டே 
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றான் 
விண்ணுலக நிலவு.

மல்லிகைப் பூவை ரசிக்க
மணம் நுகர 
விண்ணைத் தாண்டி 
வந்தாலும் வரும் - இந்த 
விண்ணுலக நிலவு!

நிலவிடமிருந்து ஒளி வாங்கி 
நிகரில்லா பெருமை சேர்க்கிறாய்.
உன்னை வீழ்த்த ஒரு பூ 
உலகினில் இல்லை.
பூக்களின் ராணி மல்லிகையே!





காதல் கடிதம் | kaathal kaditham


பெயர் தெரியாத
என் சிறகுகள் இல்லா தேவதைக்கு...

அழகின் எல்லை எதுவரை என்று 
நான் ஆராய்ந்த பொழுதுதான் 
உன்னை முதலில் கண்டேன்!

அழகு என்னும் அளவுகோலின் 
ஆரம்பமும் சரி!
உச்சமும் சரி!
நீயே! நீ மட்டும்தான் பெண்ணே!

மன நிம்மதி தேடி 
ஆலயம் செல்கிறேன் - உன்னை 
முதலில் சந்தித்த பூங்காவிற்கு.
முதல் சந்திப்பு 
அத்தனை புனிதமானது.

உனது வெள்ளிக் கொலுசுகள் 
என்றைக்குப்  பேசும் என்று 
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
அனால் உனது நினைவுகள் 
பேசாத அழகிய சிலையாய்!
மௌனம் களைவாய் அன்பே!

பசுமை சோலைத் தேடும் 
பாலைவன மணல்களாய் - உனது 
பதிலைத் தேடும் என் காதல் ஆசைகள்!

கானல் நீராய் வர வேண்டாம்.
மலைச் சாரலாய் வந்து விடு.
என் தாகம் தனித்து விடு அன்பே!

எட்டா தூரத்தில் அமைந்த 
விண்வெளி கூட 
பூமியை காதல் செய்கிறது.
பூங்காவில்  எட்டிய தூரத்தில் 
நீயும்  நானும்.

நீ ஒருமுறை கூட 
பூச்சூடி பார்த்ததில்லை.
நாம் தினமும் 
வந்து போகும் பூங்காவில் 
உன் கூந்தலேற 
ஒற்றைக் காலில் 
தவம் செய்யும் 
பூக்களைப் பார்த்தாயா?

ஒரே ஒரு முறை மட்டுமாவது
பூச்சூடி விடு.
பிறந்த பூக்களுக்கு வாழ்வு அளித்து 
சிறகுகள் இல்லா தேவதை 
என்பதை நிருபித்து விடு.

உன் பெயர் கூட தெரியாமல் 
உன்னை காதல் செய்யும் நான் 
உனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?
சிறகுகள் இல்லா தேவதை.

உன் பெயர் மட்டும் தெரிந்து  இருந்தால்
எனது கவிதையின் அனைத்து வரிகளிலும் 
எதுகை மோனையாக  
உனது பெயரே அமைந்திருக்கும்.

உன் இதழ்கள் பேசும் வார்த்தையை விட 
உன் காதணிகள் பேசும் கவிதை 
மிக மிக அருமை.
ரசிக்க முடியாமல் 
உன் பாதழகில் மயங்கிக் கிடக்கிறது
வெள்ளிக் கொலுசுகள்.

வானத்தில் ஆயிரம் ஆயிரமாய் 
நட்சத்திரங்கள் பூத்திருந்தாலும் 
நட்சத்திரங்களின் ராணியாக இருக்கும் 
ஒற்றை நிலா நீதான் பெண்ணே!

தேய்பிறை என்பதையே அறியாத 
உன் அழகைக் கண்டு 
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்!

பல அதிசயங்கள் உன்னில் அடக்கம்.
உன்னை அழகாக்கிய பத்து மாதங்கள்
பூமியிலே தங்கிய நிலா
சிறகுகள் இல்லா தேவதை
இன்னும் பல.....

வலியை தாங்கிய உளியாக நானும் 
செதுக்கப்பட்ட சிற்பமாக நீயும் 
செதுக்கிய சிற்பியாக 
நாம் வந்து அமரும் பூங்கா!

என் இதயம் துடிக்க வேண்டும் 
அதுவும் உனக்காக மட்டும்.
உன் இதயதில் இடம் ஒன்றை 
கொடுத்து விடு பெண்ணே!

எழுதி முடிக்கவும் மை தீர்ந்தது.
முற்றுப்புள்ளி இடவில்லை.
காற்புள்ளியோ(,)
அரைபுள்ளியோ (;)
உனது விழியோரம் 
மை தேடி வைத்து விடு!

புள்ளி வைத்தக் கோலங்களாய்
ஒவ்வொரு வரியும் மாறி விடும்.
தொடர வேண்டும் - இனி 
இது நமது புனிதப் பயணமாக!

நீ சம்மதம் தெரிவித்தால் 
காதல் தூதுவனாக
சிகப்பு ரோஜாவை அனுப்புகிறேன்.

என்றும் உன் அன்புடன் 

வெளி நாடு வாழ் "இந்தியனாக"...


nri
Velinaadu val indian
திரை கடல் ஓடி திரவியம் தேடும் இவன் 
வரும் முன் மறப்பதில்லை 
வாசனை திரவியம் வாங்குவதற்கு!

பாஸ்போட் விசா எதுவும் இல்லாமல் 
இவன் கனவும் கடல் தாண்டி வருகிறது
பிறந்த மண் தேடி!

மண் வாசனை என்றால்
என்னவென்று இவனிடம் கேட்டுப் பார்.
மனம் திறந்து மணமாக பேசுவான்!

தமிழ் நாட்டின் விழாக்கள் 
இவன் அறைத் தொலைக்காட்சியில்  
தெளிவாகத்தான் தெரிகிறது!

கைபேசியின் அலைகளுக்குள் 
இவன் சொந்தங்களின் குரல்கள்
முகம் காட்டி மறைகின்றன!

கடல் தாண்டி இருப்பதால் 
இவன் சிந்தும் வேதனைக் கண்ணீர் 
இந்திய எல்லையைக் கூட
தொடுவதில்லை.

சொர்க்கமே என்றாலும் 
அது நம் ஊரைப் போல் வருமா
பாடலை பல முறை கேட்டிருப்பான்.
பரவசம் அடைந்திருப்பான்.
பாட்டு முடியும் வரை 
பகல் கனவும் கண்டிருப்பான்!

வியர்வைத் துளியாய் மாறிய 
தினாரும் ரியாலும்
இந்திய ரூபாயாக மாறும் போது
மணம் வீசத்தான் செய்கிறது.

தோற்றுப்போன மல்லிகை  மணம் 
துயரம் தாங்கி 
ஒற்றை காலில்
மௌனம் சாதிக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை
துணைக் கண்டமாக
இவன் தங்கும் அறை.
கடல் நாடு தாண்டி வாழ்ந்தாலும்
வெளி நாடு வாழ் "இந்தியனாக".






தென்றல்...


Thendral
Thendral
தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை 
தட்டி எழுப்பிச் செல்கிறது
இந்த தென்றல்!

கழனியில் உழைத்த 
உழவனின் வியர்வை 
சூரியனைக் கண்ட பனித்துளியாய்!
கரைந்து விடச் செய்கிறது
இந்த தென்றல்!

இன்று மலர்ந்தப் பூக்களுக்கும் 
நாளை மலரப்   போகும் மொட்டுகளுக்கும்
வாழ்த்துச் சொல்லி 
வருடிச் செல்கிறது.
இந்த தென்றல்!

சாதி மதம் கடந்து 
நானும் வருகிறேன்
தேகங்களை வருடுகிறேன் 
இதயங்களைத் திருடுகிறேன்.

பல இதயங்களைத் திருடிய 
இவன் இயற்கையின்
செல்லக் குழந்தை!





பிரசவ வலிக்குப் பயந்த நான்...


பெண்மையை உயர்த்திப் பேச 
என்னை நானே 
தாழ்த்திக் கொண்டதும் உண்டு.
பிரசவ வலிக்குப் பயந்த நான் 
ஆண் மகனாக பிறந்தேன்.


கவிதை பேசும் காதணிகள்...




ஒற்றைக் கால் பூக்கள் 
தலையாட்டி கவிதை பேசுகிறது.
என்னவளின் காதணிகள்!


பெண்மை என்ற பெயர்.........


பெண்மை மென்மேலும் 
பெருமை அடைகிறது.
தாய்மை அடையும் பொழுது.

ஓரப் பார்வை........


Paarvai
Oorap paarvai

எந்த அகராதியில் தேடியும் 
கிடைக்காத அர்த்தம் அது.
ஒரே ஒரு 
ஓரப் பார்வை 
ஓராயிரம் பதிலைச் சொல்கிறது.

அதோ ! 
திரும்பி பார்த்து விட்டுச் செல்லும் 
என் காதலி 
என்னிடம் விட்டுச் சென்றது!

நிலவு...



அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது
அந்த எழுதப்படாத   வெள்ளைக் காகிதம்
தலைப்பு மட்டும் கொடுத்து விட்டார்கள் 
நிலவு என்று.

தமிழீழம்....

EElam
Tamil eelam

கற்பனையின் அன்னையாம் 
கவிதை தலைக் குனிய 
எனது எழுத்தில்
உண்மை வரிகள் வெளிப்படுகிறது.
கற்பனைக்கு வேலை இல்லை
தமிழீழத்தை  நினைத்து
கவிதை எழுதும் பொழுது.

இது எங்கள் சென்னை...

Chennai
Enkal Chennai

காற்றில் பறக்க விட்ட விதிகள்
பேருந்துப் புகையோடு பறந்த
சிகரெட் புகை 
இது எங்கள் சென்னை.

அலுவலகத்தை நோக்கி 
ஊதியத்தை எதிர்பார்த்து 
பழுதடைந்த பேருந்தில் 
எங்கள் பயணம்.
இது எங்கள் சென்னை.

சென்னைக்கே உரித்தான 
கெட்ட வார்த்தை அது
இது வாய்மொழி இலக்கியமா?
இல்லை செவிவழி இலக்கியமா?
சந்தோசம் கோபம் 
இந்த இரண்டின் முழக்கம் அது!
இது எங்கள் சென்னை.

மஞ்சள் பை அது 
மாடிகள் பல கட்டும்
உழைப்புக்கு உயர்வு
இது எங்கள் சென்னை.

மகிழூந்து வைத்து 
சுட்டெரிக்கும் வெயிலை 
மேலும் சூடாக்குவோம்.
இது எங்கள் சென்னை!

பாதங்கள் இரண்டும் 
சாலையில் பதியாமல் 
இரு சக்கர வாகனத்தில்
நான் வீடு சென்றால்
பெரிய சாதனை.
வாகன நெரிசல்
எங்கள் சாலையின் தனித்துவம்.
இது எங்கள் சென்னை!

அகத்தின் அழகு 
முகத்தில் தெரியுமாம்.
எங்கள் சென்னையின் அழகு 
கூவம் ஆற்றில் தெரியும்.
இது எங்கள் சென்னை!

அழகான மெரினா மணல் அது 
உருண்டாலும்
புரண்டாலும் 
அழுக்கு ஒட்டாது.
காதல் பெயரைச் சொல்லி 
அழுக்கு இதயங்கள் 
அதன் மேல் அமர்ந்து இருக்கும்.
சுற்றுலா வந்த கிராமத்துப் பறவை
அதிசயமாய் பார்க்கும்.
இது எங்கள் சென்னை!

நிறைகள் சில 
குறைகள் பல
இருந்தாலும் கூறிக் கொள்வோம்.
இது எங்கள் சிங்காரச் சென்னை!
சிங்காரச் சென்னை
உங்களை அன்புடன் வரவேற்கிறது!





காகிதத்தைச் சேமிப்போம்!....


Kaakitham
Kaakitham
பணத்தை வெளியேத் தள்ளிய 
தானியங்கி காசாளும் இயந்திரம் 
என்னிடம் சொன்னது
காகிதத்தைச்  சேமிப்போம்!

வீழ்ந்து விடுவதில்லை..

Veelnthu
Veelnthu Viduvathillai
விழுந்துவிட்ட என் காதல்
வீழ்ந்து விடுவதில்லை.
விட்டுக் கொடுத்துப் போகும்
என் காதலியால்!

அசை போடும் உன் நினைவுகள்..........


Ninaivukal
Ninaivukal
அசை போடும் உன் நினைவுகள் 
இன்று வரை ஜீரணம் ஆகவில்லை
ஆறடி குழியில் சேர்ந்த பின்னும்.

தாய்மை...


Thaaimai
Thaaimai


ஆண் மகனும் 
தாய்மை அடைகிறான்.
அவன் நட்ட விதைகள்
மண்ணைத் துளைத்து
வெளி வரும் பொழுது!

கோடை கால பறவை


Paravai
Paravai kavithai

நீர் தேடி அலையும்
பறவையின் மனக் குமுறல் இதோ...

வீதி  உலா நானும் வருகிறேன்

வானின் வழியாக
தாகம் தணிக்க
நீர் தேடி அலைகிறேன்...
கானல் நீரைக் கண்டு
ஏமாற்றம் அடைகிறேன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
பசுமை தெரியவில்லை.
பண முதலைகளின்
நில அளவுக் கல்.
சாரை சாரையாய்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

பறி போன விளை நிலம் அது.
வில்லங்கச் சான்றிதழ் கேட்டு
வீதியில் போராடுகிறான்
விவசாயி ஒருவன்.
நேற்று வரை
என் தாகம் தணித்த
கடவுள் அவன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

இதயத் துடிப்பு அதிகமாக
இளைப்பார இடம் தேடுகிறேன்.
புல்வெளி கூட இல்லாத இடத்தில்
மரங்களை நான் எங்கே தேடுவது ?

வீதி  உலா நானும் வருகிறேன்...

எனது சிறகுகள்
வலிக்க மட்டுமா செய்கிறது
கனக்கவும் செய்கிறது.
இருந்தாலும் தொடர்கிறேன்
தாகம் தணிக்கும் நீர் தேடி.

வீதி  உலா நானும் வருகிறேன்...

உடலில் உயிர் இருக்க வேண்டி
உங்கள் வீட்டு மாடி தேடி வருகிறேன்..
குவளையில் தண்ணீர் வைத்திடு தாயே!

எனது வீதி உலாவை
இனிதாய் நிறைவு செய்(தாயே)!!!.





காலண்டர்...

Calendar kavithai
Calendar kavithai

காலம் என்னும் காலண்டர்
தினமும் ஒரு கிழமையை 
உதிர்க்கிறது.
காகிதப் பூக்கள் என்பதால் 
வண்டுகளும் சீண்டவில்லை.
தென்றலும் வருடவில்லை.

மானுடனின் வியாபாரப் புத்தி 
உன்னையும் விட்டு வைக்கவில்லை.
விளம்பரத்தை உன்னில் பதித்தான்.
விளம்பரம் மட்டும் தானா?
சாதி, மதம் , கட்சி ........

உழைப்பும் 
உணர்வுகளும் 
சிந்தனைகளும் 
தீர்மானிக்கதக் காலத்தை 
ராசி பலன் சொல்லிற்று.
கன்னி ராசிக்கு 
இன்று உற்சாகமாம் !

மூடப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள் 
மூடப்படாமல் இருக்கிறது உன்னுள்.
எமகண்டம் முதல் சூலம் வரை.
நீ என்ன செய்வாய் ?
சாஸ்திரங்கள் உன் தோழன் ஆயிற்றே!
சூலம் - கிழக்கு ....
உனக்கு மட்டும் 
இது விதி விலக்கு.

கடிகாரம் என்ற பெயரில் 
உன் தமையனும் அங்கே
தொங்க விடப்பட்டிருக்கிறான்.

சுவரில் தொங்கிக் கொண்டே 
மானுடர்களின் வாழ்க்கையை 
நொடிக் கணக்கிலும் 
நாள் கணக்கிலும்
ஆட்டுவிப்பது 
உங்களுக்குக் கை வந்த கலை.

அமைதியாக மின் விசிறி காற்றில் 
முனு முனுக்கும் நீ
என் காதலியின் 
முனு முனுக்குக்கு இணைதான்.

காலத்தை உணர்த்துபவன் 
என்பதால்தான் என்னவோ
உனக்கு மட்டும் விதி விலக்கு.
காலம் தாழ்த்திக்
காலையில் கிழிக்கப்படுகிறாய்.

இழந்த காலமும் 
இழந்த உயிரும் 
திரும்ப வராது
வருடத்தின் முதல் இதழிலும் 
காலம் பொன் போன்றது 
கடமை கண் போன்றது
உன் கடைசி இதழிலும் 
எழுதப்பட வேண்டிய 
மானுட வாசகங்கள்!





இழப்பீடு ஹைக்கூ


Ilapeedu
Ilappeedu

இறந்த காதலும் 
கேட்கிறது இழப்பீடாக
ஆறடி நிலம்.

இதயம் வலிக்கிறது...


Vali
Ithayam valikkirathu

எனது பேனாவில் 
மை மட்டும்தான்
சுரந்தது.
கவிதை எழுத 
என் கற்பனை அல்லவா
கசிந்தது.

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

எவர் முன்பும் 
நான் மண்டியிடவில்லை!
கற்பனையைத் தொழுகிறேன்.  
அருளை அவன் புரிகிறான் 
கவிதையாக!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

களவாடப்பட்ட கவிதைக் கண்டு 
கண்ணீர் சுரந்தது
கண்களில் அல்ல!
இதயத்தில்.....

இரக்கம் கொண்ட இதயம் இது!!!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!




விடா முயற்சி


muyarchi
Vidaa muyrachi

இளைஞனே !

இயலாது என்ற
வார்த்தையைக் கூறி 
உன் விழிகளை நீயே 
மூடிக் கொள்ளாதே!

தமிழ் அகராதியில் மட்டும்
இருக்க வேண்டிய வார்த்தை அது!
உன் அகராதியில் அல்ல!

இயலும் என்ற 
வார்த்தையைக் கூறி 
உன் விழிகளை 
நீயே திறந்து கொள்.

விழிகளை விரைவாய் 
திறந்துப் பார்த்து 
வெற்றி எனும் பாதையில் 
பயணத்தைத் தொடர்!

இனிதாய்த்  தொடர்ந்த 
இன்பப்  பயணத்தின் இடையில் 
தோல்வி எனும் 
பாதை வரலாம்!

தடைக் கற்களும் 
உன்னால் செதுக்கப்பட வேண்டும்
வெற்றிப் படிக்கட்டுகளாக!

எப்படியும் வாழலாம் 
என்றில்லாமல் 
இப்படித்தான் வாழ வேண்டும்.
உன் மனதில்
நிறுத்தப்பட வேண்டிய வாசகங்கள்!

லட்சியம் என்னும் எண்ணத்தை
உன்னுள் வை.
அலட்சியம் செய்யாமல் 
அதை நினை.
அரை நொடி கூட
வீணாக்க வேண்டாம்.

உன் முயற்சியின் விளைவு
இறுதியில் மாறும்
இமாலய வெற்றியாக!

விடா முயற்சியுடன் 
முயற்சி செய்தால் 
விடிந்த பிறகு 
உன் வானில் ஜொலிக்கும் 
நட்சத்திரமே நீதான்...

விடா முயற்சிக்கான மற்றுமொரு கவிதை
http://nellaibaskar.blogspot.com/2014/01/blog-post_5.html





இது கலியுகக் காதல்......


Kaliyukam
Kaliyuka kaathal
உண்மை அன்பைப் 
புரிந்து கொள்ளாதக் காதல்
சதைத் தின்னும் 
கழுகிடம் மாட்டி கொள்ளும்.
இது கலியுகக் காதல்.

காமத்துப் பாலில் 
இல்லாதக் காமங்கள் கூட
கலியுகக் காதல் 
கற்றுக் கொடுக்கும்.

நாணலைத் தேடும் 
காதலை விட 
அறைகளைத் தேடும் 
கலியுகக் காதல் அதிகம்.

கலியுகக் காதலின் 
உறைவிடம் இருள்.
ஏனோ தெரியவில்லை.
கலியுகக் காதலுக்கு 
வெளிச்சமே பிடிக்கவில்லை!

காதல் மயக்கம் மாறிப் போய்
காம மயக்கம் ஆனது.
இது கலியுகக் காதலின் அடையாளம்.

காதல் ஓர் உண்மையான அன்பு!
காதல் புனிதமானது!
உண்மை காதல் 
கண்களால் பேசும்! 
உணர்வுகளால் உறவாடும்!
நாணத்தால் விளையாடும்!

காதலைக் களங்கப்படுத்த வேண்டாம்!
கண்ட கண்ட இடங்களில் 
காமத்தை வெளிப்படுத்தி 
தெரு நாயாய் மாற வேண்டாம்!

தெய்வீகக் காதலின் 
தவறான இலக்கணம்
கலியுகக் (காமக்) காதல்!




காதலியைத் தேடி........


Kaathaliyaith Thedi

இது ஏனோ தெரியவில்லை 
என் இதயம் இன்று வரை  
இரத்தத்தை உடல் முழுதும் 
பரப்பும் வேலையை மட்டும் 
செய்து கொண்டிருக்கிறது...

காதலியைத்  தேடி........

marriage kavithai in tamil | திருமண வாழ்த்துக்கள்

Thirumanam
Thirumana Vaalthu Kavithai


நாதஸ்வர சத்தம் கேட்டு
நான்கு திசைகளிலும் இருந்து 
தென்றல் வந்தது...
திருமண வாழ்த்துச்  சொல்ல....
திருமண வாழ்த்துக்கள்..

சந்தனமும் குங்குமமும் 
மாறி மாறி வாழ்த்துச் சொன்னது
திருமண வாழ்த்துக்கள்..

அறம் பொருள் இன்பம் 
உங்களுக்காக படைக்கப்பட்ட 
தமிழ் வார்த்தைகள்.
வார்த்தை சொன்ன வாழ்த்து இது..
திருமண வாழ்த்துக்கள்..

பொருத்தமுள்ள ஜோடிக்கு 
பூமாலையாக அமைந்ததாக
ஆரவாரம் கொண்ட
பூக்களின் மண வாழ்த்துக்களோடு 
என் மன வாழ்த்துக்களும்....

திருமண வாழ்த்துக்கள்..
பதினாறும் பெற்று 

கிளிப் பிள்ளை | Kilippillai

Kili
kili pillai

பிரசவ வலி அறியாத 
மலடியும் இன்று தாய்.

கிளி ஒன்றை வளர்த்து 
அம்மா சொல்லச் சொல்லி 
பறவையையும் மாற்றினாய்
கிளிப் பிள்ளையாக !

இதோ தாயின் குரல் 
கிளிப் பிள்ளையை நோக்கி...

அம்மா சொல்லு செல்லம் 
அம்மா சொல்லு 
அம்மா!!!




காதலர்களின் முதல் சந்திப்பு


Muthal Santhippu
Muthal Santhippu
தலை சாய்த்த 
நெற்கதிரைப் போல்
நாணம் கொண்ட முகம்.

அழகின் எல்லை அது 
அளவோடு சிவந்து சிரித்த 
நாணம் கொண்ட உதடுகள்

புள்ளி வைக்காத கோலம்
அழகாக போட்ட 
நாணம் கொண்ட கால்கள்.

விரல்களுக்கு இடையே 
பரிமாறப்பட்ட கவிதை சொடுக்குகளின் 
நாணம் கொண்ட விரல்கள்.

நேருக்கு நேர் 
முகம் பார்க்க 
நாணம் கொண்ட கண்கள்.

மஞ்சள் தேகத்திற்கு 
சிகப்பு சாயம் 
நாணம் கொண்ட கன்னங்கள்.

அழகு அழகு 
பெண்மைக்கு நாணம் அழகு 
என்னவளுக்கு 
அது இயல்பான அழகு!







பள்ளி தோழனுக்கு .....


School
Schoomate kavithai
அன்று ஒரு நாள் 
பள்ளிக்கூட வேப்ப மர நிழல்
மதிய உணவு இடைவேளை 
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுகள் 
பரிமாறப்பட்ட பாசங்கள்(நட்பு).

ஆம் ! உன் பிறந்த நாளை முன்னிட்டு 
என் ஆழ்மனதில் எழுந்த நினைவுகள்.

நம் நட்புக் கூட்டங்கள் 
ஒன்றாகச் சேர்ந்து 
கேலியும் கிண்டலுமான 
கதை பேசி 
கழிந்த காலங்கள் அவை..
இடை இடையே 
இயற்பியலும் வேதியலும்.

பல சான்றோர்களின் 
நூல்களைப் படித்திருக்கிறேன்
மனித ஜென்மம் பாவம் என்று.
உன்னுடன் பழகிய பின்பு - நான் 
ஏற்றுக் கொள்ளாத வார்த்தைகள் அவை.

கடந்த காலம் திரும்ப வராது
பல முறை பேசிய 
தந்தை பேச்சு உணர்த்தவில்லை.
அன்று ஒரு நாள் 
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது 
நானும் எனது நண்பனும் என்று 
ஆரம்பிக்கும் எனது உதடுகள் 
உள் மனதுக்கு உணர்த்தியது 
கடந்த காலம் என்னவென்று.

உன் நினைவுகள் 
என் ஆழ் மனதில் 
சற்று ஆழமாகத்தான்
புதையலாக 
புதைக்கப்பட்டிருகிறது.

புதையலை தேடி 
எனது பயணம் 
இன்னமும் 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்று நாம் சாப்பிட்ட 
கைகளின் ஈரம் 
இன்னமும் காயவில்லை
என்பதால்தான் என்னவோ 
இன்று வரை 
உன்னைச் சந்தித்து 
கை குலுக்கவில்லை.

நமது பள்ளிக்கூட 
வேப்ப மரத்து நினைவுகளோடு 
உன்னை மனமார வாழ்த்துகிறேன்.

என் உயிர் தோழனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....





Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்


Hindu
Arthamulla Indhu matham


காலம் கடந்து 
நான் தொட்ட பகவத் கீதை.
உண்மைதனை உணர்ந்தேன்
விதியும் மதியும் என்னவென்று.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

என் காதலுக்குக் கண்ணில்லை
காதலை பொறுத்தவரை
நான் குருடன்தான்- ஆனாலும் 
பள்ளம் மேடு அறிந்து 
பாதையில் பயணிப்பேன்.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

ஒரு கோப்பையிலே 
உன் குடியிருப்பு - இனி
உன் அர்த்தமுள்ள இந்து மதத்திலே
என் குடியிருப்பு.

கவிதை உலகிற்கும் 
கற்பனை உலகிற்கும்
தத்துவ உலகிற்கும் 
மறையா சூரியனே!
கவிஞர் கண்ணாதாசனே!

அர்த்தமுள்ள இந்து மதம் 
அருளியமைக்கு நன்றி!