நம்பிக்கையூன்றி நட

நம்பிக்கையூன்றி நட

nambikkai
Nambikkai

விழியினாலும் வலியினாலும் 
விழுந்து விட்டாலும் 
வீழ்ந்து விடாதே!

விதியை தூரத்தி
வீதியில் நிறுத்தும் 
வல்லமை கொண்டவன் நீ!

வீறு கொண்டு நீ எழுந்தால் 
இன்றைய முயற்சி 
நாளைய வெற்றியென
வீர நடை நீ போடுவாய்!

தேடுகின்ற வாய்ப்புகள் 
தூரத்து கானல் நீர்கள்!
உருவாக்கும் வாய்ப்புகள் 
உன்னத அமிர்தங்கள்!

உன்னுள் இருக்கும்
ஒப்பற்ற  திறமையை
நீ கண்டு கொண்டால்
முயற்சியின் உதாரணம் நீயென 
உலகம் உன்னை அறியும்!

உலகை விட்டுச் செல்லும் முன்
சொல்லி விட்டுச் செல்ல வேண்டாம்!
செய்து விட்டுச் சொல்லுவோம்!
முயற்சிக்கு வேண்டும் வேகம் 
வெற்றிக்கு வேண்டும் விவேகம் 

தெரிந்தோ தெரியாமலோ 
விழுந்து விடுவது 
எழுந்து நடக்கத்தான்!

நம்பிக்கையூன்றி நட!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக