2015

பூ முகமாய் கவிப் புன்னகை | Kulanthai Sirippu

Child poet
Smile
உன் மழலை முகம் கண்ட பிற முகங்கள்
பிரம்மன் படைத்த அழகோ யென வருணிக்க
நாத்திகனும் ஆத்திகனாய் உரு மாறினான்!

ஏட்டில் எழுத மனம் நினைத்த கவிதைகள்
வீடு வாயில் நுழையும் முன் மறந்து விட
உன் இதழ் சிரிப்பால் நினைவுபடுத்தி விடுவேன்!

உன் போன்ற சிரிப்பு எவரிடமும் இல்லையென
நான் சிந்தித்து தெளிவு முடிவு பெறும் முன்
மீண்டும் ஒருமுறை சிரித்து விடுகிறாய்!

சுழலும் மின் விசிறி உன் சிரிப்பை தூண்டிவிட
சுழலுகின்ற பூமி ஆச்சர்யமாய் தெரியவில்லை
மின்விசிறிதான் ஆச்சர்யமென்று சொல்லி விடுவேன்!

சொந்தங்கள் எல்லாம் உன்னோடு விளையாட
உன்னோடு உன் பொம்மையாய் நான் விளையாட
எண்ணிய எண்ணம் ஈடேராமல் நொந்து விடுவேன்!

தியானம் என்பது மன அமைதி தரும் என்றால்
நித்திரை கொள்ளும் உன் பூ முகம் கண்டு
விழி திறந்தும் நான் தியானம் கொள்வேன்!

கவி எழுத மறுக்கும் பேனாவிற்கு எல்லாம்
உரிமை கொண்ட வார்த்தை இல்லா கவிஞன்
உன் முகம் கண்டால் கவி எழுதி விடுவான்!

அவ்வாறு உன் மழலை முகம் தினம் கண்டு
தினமொரு கவி எழுதும் உன் ரசிகன்
உன் முக அமைப்போடு உன் தந்தை நானானேன்!






ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எனது கவிதையின் வரியில் | Anantha yzhalai meetukiraai



Anantha Yaalai

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டி அறிந்து விட்டேன் 

உன் புன்னகை தாண்டி உலகம் சொல்ல 
உலகிடம் எதுவும் இல்லையடி
சோர்ந்து கிடக்கும் நெஞ்சங்கள் எல்லாம் 
உன்னிடம் சுகங்கள் பெற்று விடும் 
கண்விழி பார்த்து கவிதைகள் படித்தேன் 
கவிதையில் எதுவும் கற்பனை இல்லை
உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டியதை அறிந்து விட்டேன் 

சுற்றிலும் இயற்கை சொல்லுதடி
சுந்தர தமிழில் பாடுதடி 
மீண்டும் கேட்க நாடுதடி 
உன் புகழ் ஏனோ உயர்ந்தபடி 
அடி தாளங்கள் எதற்கு ராகங்கள் எதற்கு 
உனது குரலே போதுமடி 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

ரோஜாவின் இதழ்கள் சின்னதடி 
உன்னை பார்த்தால் நடுங்குதடி 
உந்தன் அழகோ கூடுதடி 
ரோஜாவோ இன்று தோற்றதடி
அதன் முள்ளையும் தொட்டு நறுமணம் கொடுத்து 
உனக்குச் சமமாய் மாற்றி விடு 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி




பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum

panbaadu
Panbaadu


உலகம் முன்னேறியதாய் 
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு 
மானம் என்னவென்று அறியாது 
பண்பாடு என்னவென்று புரியாது!

தலைவனைக் கண்ட தலைவியவள் 
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!

தேகம் மறைக்கா ஆடைகள் 
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன் 
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!  

அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும் 
பண்பு கொண்ட முதிர்ந்த மனது 
பண்பாடோடு உன்னை பாராட்டும்!

இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்  
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா? 

செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும் 
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும் 
பண்பாடு ஒலி வேகத்திலாவது 
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!




உவரி சுயம்புலிங்க சுவாமி | uvari suyambulinga swamy

Oovari
Oovari Suyambulinga temple


அமைதியும் அருளும் தரும் சுயம்புவே!
அலைகடல் உவரியின் அருள் நாயகனே!

அள்ளித் தந்து உலகை வாழச் செய்து
அழகாய் பொலிவாய் வீற்றிருப்பவனே!
பக்தர்கள் வாழ்வுகளின் துயர் துடைத்து
பல மடங்கு இன்பம் பெருக்கியவனே!

மணி ஓசை பக்தர்கள் தூண்டினதால்
மகிமைகள் பல நீ செய்தவனே!
விரதங்கள் பக்தர்கள் மேற்கொள்ள 
விரைந்து அருள் பாலித்தவனே! 

தூயரம் கொண்டு உன்னை நாடியவர்களின்
துயரங்களை துடைத்து எறிந்தவனே!
அலைச்சல் கொண்ட பக்தர்களை 
அதிசயம் காண செய்தவனே!

உன் மணமான சந்தனமும் விபூதியும் 
பக்தர் வெற்றித் திலகமாய் கொடுத்தவனே!
உன் அருள் உலகம் அறிந்ததினால் 
உலகமே உன்னை நாடச்  செய்தவனே!






ஓணம் நல்வாழ்த்துக்கள்| Onam Wishes

Onam
Happy Onam Kavithai


சிதறிய பூக்களை தூவி விட 
சிதறாமல் இருக்கிறது 
அழகு கொண்ட கோலங்கள்!
உளி கொண்டு செதுக்கவில்லை 
விரல் நுனியால்  செதுக்கி இருக்கிறாய்!
சிற்பங்கள் இங்கே கோலங்களாய்!

ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!





ரயில் பயணம் | Rayil payanam

Rayil payanam
Rayil payanam


வெளியூர் பயணம் நான் செல்ல 
தூண்டி விடுவாய் என் நினைவுகளை!
நகராத இரு கோடு தண்டவாளத்தில் 
மைல் வேகத்தில் நீ பறப்பாய்!

முன்பதிவில்லா பெட்டியில் 
முன்பதிவு செய்யபட்டிருக்கும்
எனது கடந்த கால நினைவுகள்
முதல் காதல் முதல் கடைசி காதல் வரை !

உனக்கும் மூதாதையர் உண்டு-அது 
என் சிறு வயது அட்டை ரயில்.
எரிபொருள் சக்கரம் இரண்டும் இல்லா
என் பட்ஜெட் பெரிய ரயில்!

உன்னோடு ஓடி வரும் மரங்களால்
உன்னை வீழ்த்த முடிவதில்லை 
ஆங்கங்கே நின்று செல்லும் நிலையத்தில்
விட்டுப் பிடித்து தொடரச் சொல்வாய்!

அடம் பிடிக்கும் செல்ல குழந்தைகளை
ஜன்னலோர இருக்கையில் அமர்த்தினால் 
அன்னை மடி அதுவென ஆர்பரிப்பர்.
குழந்தைப் புன்னகை ரயிலுக்குச் சமர்ப்பனம்!

பெரிய சத்தம் பெரிய வேகமாய் நீ செல்ல 
சிறய சிகப்பு விளக்கு உன்னை மயக்கும்!
புத்தி மயங்கிய உன்னை எழுப்ப
பச்சை விளக்கு பளிசென்ன ஒளிரும்!

வளைந்து செல்லும் தண்டவாளத்தால் 
வளைவு நெளிவு உனக்கு அழகு  
அதை வடித்து கொடுத்த தண்டவாளம் 
கவிஞனுக்கெல்லாம் தலைவன் ஆனான்!

என் வருகை என் அம்மா எதிர்பார்க்க
என் அன்னைக்கு அன்னை நீயானாய்!
நல்ல படியாய் சேர்ந்து விட்டேன் 
நற்பெயர் எல்லாம் நீ அடைவாய்!

நான் பயணம் செய்தது என்னவோ 
முன்பதிவு இல்லா பெட்டிதான் - ஆனால்
எனக்கும் ரயிலுக்குமான உறவு 
முன் ஜென்மத்தில் பதிவானவை!




அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam

Kalaam kavi
Kalaam Kavithai


இளைஞர்களை கனவு காண சொல்லி 
இந்தியாவையும் உற்சாகபடுத்தி
இரு துருவ முனைகளிலும் 
இந்திய பெருமையை எடுத்துரைத்து 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
பாரினில் நம் பெருமை எடுத்துரைத்து 
இரு வரி தமிழ் திருக்குறள்களை 
இளைஞர் இதயத்தில் விதைத்து

குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி 
குதூகலத்தோடு  நீயும் உரையாடி 
கேள்விக்கனை தொடுக்கச் செய்து 
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி 

பிறந்த ஒரு நாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து 
எம்மை விட்டுப் பிரிந்த  எம் கலாமே!

வருந்துகிறது! நீங்கள் இல்லா இந்தியா!





முதல் காதல் | Muthal Kaathal

Failure
Muthal Kaathal


இதுவும் கடந்து போகும் 
பொருந்தாத வார்த்தை 
என் முதல் காதலுக்கு!

அழகுப் போதை | Alaku pothai

Rose drug
Rose Kavithai


உன் அழகுப் போதையால்
தள்ளாடிய ரோஜா பூவது
உன் கூந்தலேறியும் 
உதிர்ந்து விடுகிறது!

urukum panikatti | உருகும் பனிக்கட்டி | பனி விழிகள்

Kan kavithai
Urukum Kavithai


விழிகளை உறைய வைத்து 
விழிகளை உருக வைத்தாள்.
என்னை கடந்த அந்நேரம்!

ஹைக்கூ - மூச்சு | haikoo breath

Moochu
Moochu


உன் வீடு நான் தாண்ட 
உள்முச்சு வெளிமூச்சு வாங்க 
உணர்ந்து கொண்டேன்!
மருத்துவரின் மகள் நீ என!

காதல் நடிகை | Kaathal Nadigai

Kaathal kavithai
Kaathal Nadikai


விளக்கு ஒளி பொலிவாய் 
விழியது காதலில் மின்னும்!
இருந்தும் இல்லவே இல்லை 
இன்று வரை சொல்லிக் கொள்கிறாய்!

உன் இதயத்தின் காதல் வார்த்தையை
உதடுகளால் தவறாய் உச்சரிப்பாய்!
ஒரு முறை சரியாய் உச்சரித்தால் 
ஓராயிரம் கவிதை எழுதிடுவேன்!

உன் இருவிழி ஓரப்பார்வையை 
தினம் தினம் நான் அறிவேன்!
அந்நேரம் நம் காதலோடு 
நான் படும் பாடையும் நீ அறிவாய்!

காதலைக் கட்டுக்குள் கொண்டு வர 
சிறு மூளையைத் தூண்டி விடுவாய்!
அந்நேரம் இதயத்தில் கசியும் காதலை 
இதழ் வெளிப்படுத்தாமல் நீ தடுப்பாய்!


எட்டும் தூரத்தில் நான் நிற்க
எட்டாக் கனியாய் நீ நினைப்பாய்! 
எட்டுகின்ற கனியாம் நம் காதலை
எட்டிப் பிடிக்காமல் நீ நடிப்பாய்!


உன் சுய நினைவு நீ இழந்தாலும் 
உன் விழியில் நம் காதல் மின்னும்!
சுய நினைவு இழக்கா காதலோடு
அந்நேரமும் சுயநினைவாய் நீ நடிப்பாய்!






வாழ்த்து கவிதை | Vaalthu kavithai

kalyaanam
Marriage Vaalthu

அன்னையை அரவணைக்கும் 
மழலை சிறு குழந்தையாய் !

தமிழை சீராட்டி கவி பாடும் 
சங்க கால புலவனாய்!

ஆடையில்லா மல்லிகை பூக்களின் 
பிரிக்க முடியாத மணமாய்!

தேகத்திற்கு குளிர் கொடுக்கும் 
மார்கழி விடியல் பனியாய் !

இல்லத்தை தினம் அழகுபடுத்தும் 
இல்லத்து குல ராணியாய்!

இல்லத்தை நல்வழி நடத்தும் 
இல்லத்து குல அரசனாய்!

பிறர் வாழ்வுக்கு உதாரணமாய்
அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள் !

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!









விதி வலியது | Vithi valiyathu

vithi
Vithi valiyathu


விதியினால் மதி இழந்தேனா? அல்லது 
மதியினால் விதியை அடைந்தேனா?
முடிவெடுப்பதில் அதி வல்லவன் நீ!
உன் முடிவை நீயே தேடிக் கொள்ள 
மானுடருள் நீ எந்த வகையினன்?
முதல் தோல்வி  கண்டவனா? அல்லது 
முதல் முறை பரிதாபத்துக்கு உள்ளானவனா?

ஒரு தலைக் காதல் | oru thalaik kaathal

One side Love
One Side Love

ஒற்றைக் குடையில் 
ஒருமித்து நாம் நடையிட 
ஒரு தலைக் காதலோடு
ஒற்றைக் குடை!

சோகங்கள் | Sokam

Sokam
Sokam


உதித்தவன் மறைந்து இரவுகள் மலர 
உதயமாகிறது என் இதயத்தின் புலம்பல்கள்!
சில துளி பெருவெள்ளமாய் கண்ணீர் துளிகள்
சிறப்புரை ஆற்றுகிறது விழியோரங்களில்!

நிம்மதியை  இதயமருகே வர விடாது 
நித்தமும் காவல் புரிகிறது தனிமைகள்!
படுக்கை அறை போர்வைக்குள் ஒழிந்து
படாத பாடு படுத்துகிறது சோகங்கள்!

என்றாவது ஒரு நாள் முடிவுரை காணுமா?
ஏக்கத்தோடு படுக்கையறை நான் செல்ல 
எட்டும் தூரத்தில் எள்ளி நகையாடுது 
என் தூக்கம் தொலைக்கும் சோகங்கள்!

பிறப்பு என்றால் இறப்பு ஒன்று இருக்க 
சோகம் என்றால் இன்பம் மட்டும் இல்லை!
ஆகாயத்தில் பொலிவாய் கோட்டை கட்டி 
அடிமண்ணில் அஸ்திவாரமாய் சோகங்கள்!

ஆண்மகன் என்றால் அழக கூடாதாம் 
அழகாய் இருக்கிறது கலியுக பழமொழி!
அடக்கிய சோகங்கள் ஆயுள் குறைக்க 
அடி மண் இன்றே கண்டால் சந்தோசம்தான்!

ஆறடி மண்ணுக்குள் நான் சென்றாலும் 
அடக்கம் செய்யாதீர்கள் என் சோகங்களை!
அங்கும் சோகங்கள் நுழைந்து விட்டால் 
அகிலமே ! எங்கு நான் செல்வேன் ?






நாய் கவிதை | Sella pirani

Dog
Chella Piraani Kavithai


வீட்டு வாயிலில் என் பாதம் பதிய
லொள் லொள் சத்தத்துடன் வரவேற்புரை
அன்பு நன்றி முடிவுரை உன்னோடு!

இரு கால்களை இரு கரங்களாக்கி
என் இடையோடு இறுகத் தழுவி
நன்றியை பகிர்வாய் என்னோடு!

என் விரல் நுனி உன் நெற்றி தொட 
உன் அன்பை எனக்கு உணர்த்திட
வால் ஆட்டிடுவாய் நன்றியோடு!

என் தோட்டத்து வயல்களுக்கு
காவலாய் கள்ளி வேலிகள்
கள்ளி வேலிகள் உன் காவலோடு!

இரவில் மடியில் நான் விழி முடி
கனவோடு கவியோடு நான் பயணிக்க
வாயிலில் நீ என்றென்றும் நன்றியோடு!






உன்னோடு என் உயிர் | unnodu en uyir

unnodu
Unnodu En Uyir


இரவின் புலம்பல் விடியல் வரை 
விடியலில் அலுவலக போலி வாழ்வு 
நீ இல்லா வாழ்வில் புரிகிறது 
காதல் வாழ்வு என்னவென்று!

கண்ணீர் துளிகள் விழியில் ஊற 
கவிதைக்குள் கல்லறை கட்டுகிறேன்!
கவிதை மெய்யன்று பலபேர் வாதம் 
என் கவிதை பொய்யன்று உன் வாதம்!

விளகேற்றும் மாலை வேளையில்
விழியோடு ஒட்டிக் கொள்வாய்!
விழியில் ஒட்டிய உன்னை தேட 
வீணாய் போகிறது என் தேடல்கள்!

உன் நிழற்படம் தினம் வருடி 
விரல் நுனியில் உயிர் வளர்த்தேன்!
விஷம் அருந்தி உயிர் பிரிய
விரல் நுனி உதவுமா? புலம்புகிறேன்!

உன்னோடு பழகிய நாட்களால்
காதல் வாழ்வில் பற்று கொண்டேன்!
எங்கோ நீ தொலைவில் இருக்க 
உலக வாழ்வில் விடை பெறலாம்!

உயிரை திரட்டி உள்ளைங்கையில் 
காதல் ரேகையில் வைக்கின்றேன்!
உன் உள்ளங்கை ரேகை தொட்டு 
உன் மடியில் உயிர் பிரிவேன்!