நவம்பர் 2014

நியுட்டன் காதல் விதி | newton love poet

Kathal
Kaathal Vithi


ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டு!
உன் கருவிழிகளுக்கு சொல்லி விடு!

சுயநல இதயம் | Suyanala Ithayam

Selfish
Suyanala Ithayam


உன் பாதம் பதித்த  என் இல்லம் 
கங்கை நதி துளிகள் காண துடிக்குது 
செய்த பாவம் தனை தொலைக்க நினைக்குது!

உன் காமம் கண்ட தினசரி காகித நாட்கள் 
மண்ணோடு மண்ணாக மக்கி போகாது 
மனதை விட்டு நீங்கியும் தொலையாது !

வாலிப வயது உந்துதல் காம உணர்ச்சியால் 
காமத்தை காதலாய் பயன்படுத்தினாய் 
காதலில் காமத்தை கலப்படமாக்கினாய்!

உனக்காகவே உயிர் சுமந்த என்னிடம் 
பணமும் பொருளையும் பரிசாக்கிக் கொண்டாய்!
என் உயிரை மட்டும் நேசிக்காமல் விட்டு விட்டாய்!

என் இதழ் உதிர்த்த காதல் வார்த்தைகள் 
உன் இதயம் சென்று அடையவில்லை
உன் இதயம் கல்லென்று நான் அறியவுமில்லை!

நான் இல்லா  உன் சுயநல தனிமையில் 
உன் மூளைக்கு வேலை கொடுத்திருப்பாய்
வார விடுமுறை திட்டம் தீட்டி இருப்பாய்!

மல்லிகை மனமாய் ரோஜா இதழ்களாய் 
மண வாழ்கையில் வசந்தம் வேண்டினேன்
வாழும் வயதில் புலம்பியவன்  ஆனேன்!

மனது என்று உன்னிடம் இருந்திருந்தால் 
என் உண்மை காதலை அறிந்திருப்பாய் 
காதல் புனிதமென உணர்ந்திருப்பாய்!

காதல் இதயம் அல்லா 
சுயநல இதயம் கொண்டவள் நீ!





ஸ்டிக்கர் பொட்டு | Stikker pottu

Stikker kavithai
Stikker pottu Kavithai


சந்தனனமும் விபூதியும்
சங்கமம் கண்ட நெற்றிக்கு
சலித்து விட்டது.

ஒட்டிக் கொண்டது
ஸ்டிக்கர் பொட்டு.