கவிதை தேடல்


searching kavithai
Kavithai Thedal

எதுகை மோனை தேடிய போது
எதிர்ப்பட்ட முட்டுச் சந்தில் 
ஏதேர்ச்சையாக மோதிய போது
என்னை மறந்து உன்னை நினைத்தேன்!
என் தவறுதான் உன்னை நினைக்காதது!

எனது கவிதை தேடல் நீ !...உலக மகளிர் தின கவிதை

March 8
Women Day

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மணம் திறக்க இதழ் திறக்க 
மல்லிகைகள் மறப்பதில்லை 
அன்பு காட்ட மறப்பதில்லை 
அன்னை மன பெண் இதயங்கள்!

இதயம் சில நேரம் பேச 
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால் 
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!

விழிகள் இரக்கத்தை பார்வையாகவும் 
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும் 
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!

மகளாய் பிறப்பெடுத்து 
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!

உறவு முறை ஆராய்ந்து பார்த்தால் 
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!

கலியுக அறிவியல் ஆண் மகனையும் 
தாய்மை அடையச் செய்யும் 
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை 
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மகளிர் தின வாழ்த்துக்கள்!.....

தேசிய அறிவியல் தினம்ராமன் விளைவினால் வந்த விளைவு 
தேசிய அறிவியல் தினமாம்!
அறிவினால் வந்த விளைவு அறிவியலாம்!

சிறீப் பாய்ந்து சிரித்து நிற்கின்றது
சிறகுகள் இல்லா ராக்கெட்கள்
செவ்வாய் கிரக செயற்கை கோள்கள்!

இல்லத்து இயந்திர பொருட்களில் 
எண்ணிய வேலை சுகமாய் முடிக்க
கச்சிதமான அறிவியல் உண்டு!

விளையாட்டிலும் அறிவியல் புகுத்துவோம்
வீதியில் காந்தங்களோடு விளையாடுவோம்
விண்ணை தாண்டியும் தேடல் கொள்வோம்!

விடுமுறை காணாத அறிவினால்
மின் விளக்கினால் இரவும் பகலாயிற்று
பகலவனையும் படித்தாயிற்று!

முடியாது என்ற வார்த்தை எல்லாம் 
விழி முடி பல நாளாயிற்று
அறிவியலுக்கு அடி பணிந்தாயிற்று!

இன்னும் சொல்லிச் செல்லலாம் 
அறிவுக்கு எல்லை இல்லை - ஆதலால் 
அறிவியலுக்கும் எல்லை இல்லை!
சர்வதேச உலக நீதி தினம் கவிதை


உன் இதயத் துடிப்பு போலவே 
என் இதயத் துடிப்பும்
உன்னைப் போலவே 
நீ பிறரையும் என்ன வேண்டும்!

உன் அகம் உன் சுற்றம் போல 
என் அகம் என் சுற்றம்
நல் உறவுக்கும் நல் உணர்வுக்கும் 
நீ கை குலுக்கிடல் வேண்டும்!

உன் உடல் உன் குருதி போல 
என் உடல் என் குருதி
நல் சிந்தனைகள் மனதில் ஏற
சாதிகள் உடன் கட்டை ஏறட்டும்!

உன் மதம் போதிக்கும் அன்பைப் போல
என் மதம் போதிக்கும் அன்பு 
மதங்கள் எல்லாம் ஒன்றே 
மனங்கள் முழுமை பெறட்டும்! 

உரிமைகள் முழு உருவம் பெற 
அதிகாரம் அழிந்து போகட்டும்!
எல்லாமே சில காலம்
குற்றங்கள் மண்டி இடட்டும்!  

தனி மனித ஒழுக்கங்கள் 
முழுமையான ஒழுக்கம் பெறட்டும்!
நீதி தேவதையின் தராசுக்கு
வேலை இல்லாமல் போகட்டும்!சர்வதேச தாய் மொழி தினம் கவிதைமொழியின்றி வாழ்வதில்லை 
இல்லை இல்லை 
தாய் மொழியின்றி வாழ்வதில்லை!

சிந்தனைக்கு கவி சுவை சூட்டவும்
இல்லை இல்லை 
சிந்தனைக்கு கவி சுவை ஊட்டவும்,

நம் கலாச்சாரம் அழிந்து விடாமல் 
இல்லை இல்லை 
நம் கலாச்சாரம் சிதறி விடாமல்,

மொழியில் பிற மொழி புகாமல் 
இல்லை இல்லை 
மொழியில் பிற மொழி கலப்பிடம் ஆகாமல்,

இன்று வரை செம்மொழியாய் 
இல்லை இல்லை 
என்றுமே செம்மொழியாய், 

தாய் மொழியை மனதில் மறவாமல்
இல்லை இல்லை 
தாய் மொழியை மனதில் மறைக்காமல்,

எங்கு நான் நடந்து சென்றாலும் 
எங்கு நான் பறந்து சென்றாலும் 
நிழலாய் பிற மொழி வரட்டும்!

உடலாய் உணர்வாய் உயிர்வாய்
ஆன்மாவாய், ஆம்! ஆன்மாவாய்!
என் தாய் தமிழ் மொழி வரட்டும்!

ஆன்மாவிற்கு அழிவில்லை!
தாய் மொழிக்கு நிகர் ஏதும் இல்லை! இனிய காதலிக்கு | Iniya Kaathalikku


கவிதைகள் எல்லாம்
உன்னை குற்றம் சொல்வதில்லை
மாறாக கடன் மட்டுமே பட்டிருக்கின்றன 
இன்று சற்று அதிகமாகவே
கடன் பட்டிருக்கின்றன!

என் இனிய காதலிக்கு 

உலகத்தோடு உங்களையும் விட்டு விடை பெறுகிறேன்


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க என்ற கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளின் சாயலில்...


உயிர் பிரிந்த உடல் இங்கே 
மன நிம்மதி வேண்டும் இங்கே
வாழ்க்கை புரிதல் வேண்டும் இங்கே 
பிறப்பும் இறப்பும் சமம் இங்கே!

பூமியின் கடைசி உறவு நான் அல்ல 
மலரும் பூக்களுக்கு முடிவே இல்லை 
வாழ்க்கை எல்லை மரணம் இல்லை 
நல் மனிதர் என்பதுதான் எல்லை!

நேற்று வரை உயிருடன் உன்னோடு 
உயிர் இழந்த உடல் மண்ணோடு 
வாழும் போது நல்வாழ்வு வாழ்ந்திடு 
மரணத்தின் தருணம் கடவுளை நினைத்திடு!

நினைவுகள் நிரந்தரமாய் வருத்தம் தரும்
வருத்தம் மறக்க வேண்டும் ஒரு வரம் 
மறப்பது மனித இயல்பு ஆயினும் 
மறக்க நினைக்க மலருது உன் முகம்!

பிறந்தவுடன் இறப்பு நிர்ணயம் 
வாழும்போது உதவுதல் புண்ணியம்
பல மரணங்கள் சிலருக்குப் பாடம் 
சில மரணங்கள் பலருக்குப் பாடம்!

உடலும் உயிரும் உனது இல்லை 
ஆன்மாதான் அதற்கு எல்லை
மரணம் சொல்வது பதிவதில்லை
பதியும் பொழுது மரணம் எல்லை!

நெருங்கியவர் மரணம் தினமும் வருத்தம்
தெரிந்தவர் மரணம் சில நாள் வருத்தம் 
வருத்தம் மறக்க வேண்டும் திருத்தம்
திருத்தம் புரிந்தால் அதுதான் அர்த்தம்!

அதிகாரம் என்ன ஆணவம் என்ன 
ஆறடி நிலம் சொல்வதுதான் என்ன 
மண்ணும் நெருப்பும் சொல்வதென்ன
ஒரு பிடி சாம்பல் ஒரு பிடி மண் !

விழி சிவப்பாக கலங்கிய உறவுகள் 
அன்பு பேசிய பக்குவமுள்ள நாவுகள்
வழி அனுப்ப வந்த சொந்தங்கள் 
வலி மறந்து வழி அனுப்புங்கள்!

உலகத்தோடு உங்களையும் விட்டு விடை பெறுகிறேன்!
சுமை அறியா கர்ப்பப்பை | sumai ariya karppapai

Pain of feelings

அழுது தினமும் புலம்புகிறேன்
கர்ப்ப பை காலியோடு வாடுகிறேன் 
சோகத்தின் வெறுப்பிடமாய் திகழ்கிறேன்
இன்றாவது நற்செய்தியா? வேண்டுகிறேன்!

கர்ப்பபை சுமை நான் அறிய 
சிறிது கல்லையாவது சுமந்திருக்கலாம்!
மலடிப்பட்டம் நான் சுமக்க 
உயிரை பருகுது ஊராரார் வார்த்தை!

தானம் தர்மம் அள்ளிக் கொடுத்தாலும் 
தாயுள்ளம் கொண்டவள் நானென்று 
எவரும் சொல்ல மாட்டார்கள் 
பிரசவம் ஒன்றை நான் காணும் வரை!

கடை வீதி பொம்மைகள் எல்லாம் 
சீவி சிங்காரித்து ஆடை உடுத்தி 
உயிர் பெற்று இருக்கிறது என் வீட்டில்!
தாய் உணர்வறியா பிரம்மா நான் !

ஊமைக்கு உதவாத நாவு போல 
மலடிக்கும் கர்ப்பப்பை உண்டு 
என்றாவது தீர்வு கிட்டும் என்ற 
ஏக்கம் மட்டும் கடைசி வரை உண்டு!

மழலை வேண்டி சென்ற கோயில் எல்லாம்  
என் பாத சுவடை உணர்ந்திருக்கும் 
வந்து விட்டால் மலடி என்று 
கடவுளிடம் வரம் வேண்டி உரைத்திருக்கும்!

அன்னை ஆகும் எண்ணத்தை 
அறிவியலும் தகர்த்து விட்டது
அறிவியலுக்கு அறிவு இருக்கு 
அறிவியலுக்கு உணர்வு இல்லை!

மனம் ஓய்வெடுக்க மரணம் தான் 
முடிவென்று நான் என்னும் வரை 
நானும் வாழ்ந்து பார்ப்பேன் 
மழலை ஒன்றை சுமந்திட!

மகனோ மகளோ உறவொன்று வேண்டும் 
இறந்த பின்பு கட்டி அணைத்து 
இதழ் திறந்து காதோடு சொல்ல வேண்டும்!
என்னைப் பெத்த அம்மா !பொய்மையின் உச்சம் | poimaiyin ucham


கெட்டே போகாத தேனுக்கு
காலாவதி நாள் குறிப்பு 
பொய்மையின் உச்சம்!

Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே பாடல் சாயலில்....


முதன்மை கடவுள் உன்னை நாங்கள் போற்றிடுவோமே!
உன் அருளும் கொண்டு நாங்களும்தான் வாழ்ந்திடுவோமே!
ஐங்கரம் கொண்டு நீயும் அருளிடுவாயே !
அருகம்புல் மகத்துவமும் புரிந்து கொண்டோமே!

உ எழுத்தை பிள்ளையார் சுழி ஆக்கியவன்
கஜம் முகம் கொண்டு கஜமுகன் ஆனவன்
அரச மரம் பலன் அறிந்து கொண்டவன்
அதையே இருப்பிடமாய் ஏற்றுக் கொண்டவன்!

தோப்புக்கரணம் அறிவியலை தொடங்கி வைத்தவன்
வழிபாட்டில் விஞ்ஞானத்தையே சேர்த்து வைத்தவன்!
தாய் தந்தை உலகம் என்று சொல்லி வைத்தவன்
ஓம் கார ரூபத்தின் இருப்பிடம் ஆனவன்!உயிர்த் தோழிக்கு | to my best friend


My Best Friend

என் உணர்வுக்கு உயிர் கொடுக்க 
உள்ளத்து துள்ளல்களை சுகமாக்க
வாழ்நாள் கனவு சுக நிஜமாக்க 
என் உள்ளத்து விழி காட்டிய வழி நீ !

கருமேக மழை குளிர் காற்றாய் 
மனதோடு ஒட்டிக் கொண்டு 
நிதமும் என் மனம் வருடும் 
மதுரை மல்லித் தென்றல்  நீ !

உன் குரல் என் செவி அறிந்து 
உன்னதக் குரல் இதுவென்று 
என் அகம் அது தினம் உணர்த்திற்று
தரணியில் சிறகில்லா தமிழ் குயில் நீ !

என் இதயத்திற்கு விழி கொடுத்து 
அதற்கு இமை கொடுக்க நீ மறந்து 
காலம் முழுதும் உன் உள்ளம் பார்க்க
இதய விழி கொடுத்த பிரம்மா நீ !

வாழை மடல் மென்மை நீ கொண்டு 
வானுயர நற்குணம் அதில் விதைத்து
இன்முக நட்பை எனக்கு பரிசாக்கி 
கண்ணீர் ஊற்றை நிறுத்தியவள் நீ !

வலியும் சுகமும் வாழ்வோடு நடை போட
வலியை நிரந்தரமாய் புறந்தள்ளி 
சுகத்தை நிரந்தரமாய் எனதாக்கி 
என் உள்ளத்துக்கு வரம் கொடுத்தவள் நீ !

முகம் பார்க்கும் காதலுக்கு 
உலகத்தை உதாரணம் சொல்லி
உள்ளம் பார்க்கும் நட்புக்கு
உலகமாய் நம்மை உதாரணமாக்கியவள் நீ !
நரை தொடா கவிதை | white hair poem


என்றோ அவளுக்காக 
எழுதிய கவிதைகள் 
இன்று வரை இளமையாய்!

மனக் கதவு | manak kathavu

மனக் கதவு

தவற விட்ட கடந்த வாழ்க்கையை 
விரல் நுனி கொண்டா தேடுவேன் 
எங்கோ கதவுகள் தாழிடப்பட்டு
எதிர் முனையில் தேடுகிறேன்!

விதை இல்லா வேர் ஏதும் இல்லா
நட்சத்திரம் பூவாய் தெரியுது
என்னோடு நித்தமும் பயணித்த 
வாழ்க்கை மட்டும் தெரியவில்லை!

என் சுவாசக் குழல் புகுந்த காற்றை
அறிவியல் செய்து கூட  அறிந்திடுவேன்
ஆறறிவு கொண்டு அறிய முடியாததை 
எவ்வறிவு கொண்டு அறிந்து கொள்வேன்!

எதிர் காலத்தை கனவுகள் சொல்லுது
கடந்த காலம் சொல்ல களைப்பாகுது
விழி மூடி தூங்கினால்தானே 
கனவுகளும் ஏதேனும் வழி சொல்லும்!

காற்றோடு காற்றாய் கலந்தாலும் 
சல்லடை இட்டு பிரித்திடுவேன்
காயங்களோடு மீட்டு விட்டாலும் 
கண்ணீர் கொண்டு மருந்து இட்டுடுவேன்!

கடந்த வாழ்க்கை தவறவில்லை 
களைப்போடு தேட வேண்டாம் 
கவலை களைந்து விட்டு திறக்கலாம்
கதவுகள் இது மனக் கதவுகளே!
கலைந்த விரதம் | kalaintha virathamவிரதம் காக்கும் விழிகளை 
விரதம் கலைக்க வைத்தாய்!
உன் விழி கண்ட சில நொடிகளால்!

தண்டனை | Thandanai

lip
Biting lip

தண்டனை வேண்டி தவறிழைத்து 
உன் முன்னே நான் நிற்க
தண்டனை கொடுத்து விட்டாய்!
உனக்கு நீயே உதடு கடித்து!

மழை மொட்டுக்கள் | malai mottukkal


காய்ந்த முள்ளின் நுனியில் 
மலர்ந்து விட்டன 
மழைத் துளையின் மொட்டுக்கள்!

உதட்டுச் சாய வேண்டுகோள்


இதழ் உதிர்த்த வார்த்தைகளை 
இதழோடு நீ ஒட்டிச் சென்றால் 
காலி இதயத்தோடு கவி எழுதினால் 
என் கவிதை  எப்படி சுகம் பெறும் ?
உதட்டுச் சாயத்திற்கு வேண்டுகோள் !

முடிவு


முடிவு காணும் முன்
முடிந்து விட்ட கவிதை
முற்று பெற்ற வாழ்க்கை!

எல்லாம் தாண்டி

Thaasi
Vibachaari Kavithai
பசி தீர்க்கும்  எல்லா உணவிலும்
ஏதோ ஒரு முனகல் அறிந்தேன்!
தேக ஆசை கொண்ட ஆடவனின்
பணத்தின் உணர்ச்சி என்று அறிந்தேன்!

தேக ருசி கொண்ட கழுகுகள்
வீடு வாயில் வரை தூரத்தின!
கட்டிலோடு தொலையவில்லை
கடந்து போன கட்டில் உறவுகள்!

பேருந்தில் உரசுபவன் முன்னே
தலை நிமிர்ந்து பேசுகிறேன்
பத்தினி வேஷம் போடுகிறேன்
என் தொழில் அவன் அறியாதலால்!

பல வீட்டு கட்டில் கால்கள்
பழுதடைந்தோ சுகமில்லாமலோ ஆனதால்
பழகிப் போனது பலருக்கு என் கட்டில்
பக்குவப்பட்டு நாசமானது என் மனது!

வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மறைமுகமாக சொல்லி செல்கிறது
ஒவ்வொரு கடந்த இரவுகளும்
சில நாள் என் தேகத்திற்கு விடுமறை!

வளையல் என்றால் உடைகிறது
காப்பு என்றால் வளைகிறது
அணியும் ஆபரணங்கள் உணர்த்துகிறது
கலியுக ஆடவர்களின் காம ஆசையை!

கசங்காமல் உடுத்தி செல்லும் ஆடை
கசங்காமல் திரும்பி வர
கசங்கிய காகித பண கையோடு
கசங்கி இருக்கும் என் தேக மது!

பாதங்கள் படிதாண்டி வெளியேற
வழி மறித்து நிற்கும் மகனிடம்
பதில் எதுவும் சொல்லமுடியவில்லை
எங்கு செல்கிறேன் என்று!

செய்யும் தவறுக்கான காரணத்தோடு
இதழ் சிரித்து இதயம் அழுது
நகர்கிறது என் வாழ்க்கை
கலியுக ராமர்கள் இல்லை - ஆதலால்!