காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்உன் அழகை செதுக்க
உன் அன்னைக்கு தேவைப்பட்டது
பத்து மாதங்களாம்!

நீ பிறந்த அன்றே
விண்வெளியில்
 இரண்டாம் நிலவுக்கு
இடமில்லை என்று 
பிரபஞ்சமும் சொல்லி விட்டது
நீயும் பூமியிலே தங்கி விட்டாய்!

தேய் பிறை என்பதை அறியாத
உன் வயதின் அழகை கண்டு
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்.

கவிதை என்றால்
 பொய் அல்ல என்று மாற்றிய
உன் அழகுக்கும் வயதுக்கும்
எனது நெஞ்சார்ந்த 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment