2019

எட்டாத காதல் இனிக்கிறது

Kaathal
Ettatha Kaathal


எட்டாத காதல் 
எள்ளவும் திகட்டுவதில்லை 
ஏனோ தெரியவில்லை 
எட்டாத காதல் 
என்றுமே இனிக்கிறது !
ஏனோ தெரியவில்லை

என்றென்றும் சொல்லும்
எல்லா பொய்யினிலே 
எல்லாமே தெரிகிறது
எட்டாத காதல் 
ஏன் இனிக்கிறது என்று! 

வியர்வையும் கண்ணீரும்

வியர்வையும்  கண்ணீரும்


கவலைகள் எல்லாம் வியர்வையாக!
காதல் நினைவு கண்ணீராக!
அவளை மறக்க நினைக்கையில் 
இடைவேளை எடுக்க வில்லை 
வியர்வையும்  கண்ணீரும்!

சின்ன வீடு

Chinna Veedu
Chinna Veedu


மலர் மாலை மாற்றாமல் 
மண வாழ்க்கை காண துடிக்குது  
எழுதிய கவிதைகள் எல்லாம்! 

இரவு நேரத்து இசைகள்

இரவு நேரத்து இசைகள்
இரவு நேரத்து இசைகள்


இரவில் எழுப்பி விடும் 
இசைகள் சுகமாய் செய்கிறது 
கணக்கில்லா இம்சைகளை !

பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !

மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!

வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!

சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!

இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!




இந்த நாள் இனிய நாள்

இந்த நாள் இனிய நாள்
இந்த நாள் இனிய நாள்


பாதங்கள் இல்லா இரவுகள் 
மெதுவாய் நடை போட
மேகத்தை விலக்கி 
நிலவை அடைந்தேன்!
உன்னால் - இந்த நாள் இனிய நாள்!

கடந்து போன நேரங்களை 
கடக்க போகும் நேரங்களை 
அருகே பிடித்து அமர வைத்து 
ஆணி அடித்து இருக்கச் செய்தாய்!
உன் நினைவுகளை மலர செய்தாய்!

இதழ் திறந்து இடை விடாமல் நீ பேச 
இதயம் திறந்து  இடை விடாமல் நான் பேச 
உன் மொழி நான் புரிந்தேன் 
என் மொழி பேச்சு மெதுவாய் நீ புரிவாய்!

இரு சக்கர வாகனத்தில் பயணித்து 
இரண்டு துருவத்தையும் தொட்ட உணர்வு 
இருந்தும் கேட்டுக் கொண்டேன் 
இவ்வளவு நேரம் வாகனத்திலா பயணித்தோம்?

அருகே அமர்ந்து இலக்குகள் இல்லா 
இடைவிடா பயணம் உன்னோடு!
எதிர் காற்று முகத்தில் மோத 
உன் இதயத்தின் அரணாய் என் இதயம்!
உன் இதயம் பின்னே ! என் இதயம் முன்னே!

நியாபக மறதி நான் அறிவேன் 
மயக்க நிலையும் நான் அறிவேன் 
காதல் நட்பு நிலையும் அறிவேன் - ஆனால் 
நம் நிலை நான் அறியேன்!

களங்கமில்லா இதயத்தோடும் பேசுகிறாய் 
சிந்தித்து மூளையோடும் பேசுகிறாய் 
உன் முழு குழப்பமாய் நான் இருக்க 
உன் இதயம் பேசினால் உன் இதழுக்கு தண்டனை!

எதிர்பார்த்து தேடிய முடிவிலி அன்பு 
கரம் தொட்டதாய் உணர்ந்தேன் 
கரம் தொட வேண்டும் என்றேன் 
இதயமும் இதழும் சேர்த்து முறைத்தாய்!

எங்கு சென்று முறையிடுவேன்
உன்னைத் தவிர எவர் உண்டு 
தவறுதலாய் வேண்டுகோள் இட்டேன் 
வந்த கவிதைகள் எல்லாம் ஓடி விட்டன 
கவிதை இல்லா வெற்றுக் காகிதமாய் நான்!

எதில்தான் கவிதை இல்லை 
உன் மூச்சிலும் உண்டு பேச்சிலும் உண்டு
என் இதயம் நிரம்ப கவிதையாய் நீ இருக்க 
வெற்று காகிதமாய் நான் இல்லை 
என் இதயம் முழுக்க கனத்த கவிதையாய் நீ!

நம் அகமும் முகமும் சந்தித்து 
கடந்து போன அந்த நாள், என் இனிய நாள்!
இல்லை! இல்லை! நம் இனிய நாள்!




இதழ் திறந்த பூக்கள்

இதழ் திறந்த பூக்கள்
இதழ் திறந்த பூக்கள்


இதழ் கண்ட மொட்டுக்கள் 
இதழ் திறந்து 
பூவிதழாய் மலர்ந்தனவோ ?

அன்னையர் தின கவிதை

அன்னையர் தின கவிதை
அன்னையர் தின கவிதை


உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!

உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!

உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!

நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!

பத்து மாதம் அல்ல 
முடிவிலி சுமையாய் இருந்தாலும் 
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே 
முடிவிலி எண்ணிக்கையில் 
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!

அன்பை அளவிட நினைத்தேன் 
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி 
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே 
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே 
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!

முதல் கவிதை எழுத முயற்சித்தால் 
உன் அன்னையை நினைத்து விடு 
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால் 
கவிதையில் கற்பனை கலப்படம் 
துளி அளவும் கலந்திருக்காது!

அன்னையின்  முன்னே 
சொல்லக் கூடாத உண்மை 
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய் 
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள் 
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!

இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி 
என் இதழ் மட்டும் அல்ல 
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது 
இதயமும் சிரிக்கிறது!

வான் உச்சிக்கு வந்த சூரியன் 
கதிர் மூலம் என்ன சொல்லியதோ 
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை 
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும் 
இவள் பாசம் அறியும்!

மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில் 
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன் 
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !

இவளுக்கான உணவை 
இரவுகள் எடுத்து வைக்கிறது 
எஞ்சிய உணவுகள் 


உயிர் பெற்ற பூக்கள்

உயிர் பெற்ற பூக்கள்
உயிர் பெற்ற பூக்கள்


மாலையில் உயிர் விட்ட பூக்கள் 
பூமாலையில் உயிர் பெற்றன 
கோயில் சிலையில் பூமாலைகள்!

எல்லை அது இல்லை | pookkal kavithai --

எல்லை அது இல்லை
எல்லை அது இல்லை


மொட்டுக்களை இதழ் உறிஞ்ச
மொட்டுகளுக்கு இனிக்கிறது 
இதழுக்கு வலிக்கிறது!

முனகல்களில்  சுக வலி அறிந்து 
முறித்து விட முயற்சிக்க 
கரங்களோ தலை கோதுகிறது!

இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!

உணர்ச்சி உள்ள பூவிது - ஆதலால் 
கசங்கல்களை புறக்கணிக்கிறது 
கனவுகள் நினைவு ஆகுவதால்! 

பூக்களில் இது 
சற்று வித்தியாசம்தான் 
பறித்திடவே ஏங்குகிறது!

மெலியாத இயல்பான சிறிய இடையை
விரல் நுனி விழி கொண்டு
உற்று நோக்கி தழுவுகிறது!

வியர்வை ஈரத்தில் இதழ் நழுவ
இன்னும் சுக தேடுதல்
அவள் ஒரு தொடர் கதையாய்!

பூக்களின் நுனியில் மொட்டுக்கள் 
பூமேனியில் இது அதிசயம் - ஆதலால் 
எல்லை தவுறுதல் சாத்தியம்!

எல்லை அது இல்லை!...!..!




வானத்து நிலா

வானத்து நிலா
வானத்து நிலா

மழை முத்தமிட்டோ 
வெயில் கோபப்பட்டோ  
வானத்து வீட்டில் 
தொங்கும் வெள்ளியொன்று 
கருத்து விட்டது!


காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்டன  கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

தனிமை சற்று கிடைத்தால் 
தானியங்கி ஒலி பெருக்கியாய் 
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக 
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!


மாலை மயங்கும் சூரியன் 
காலையில் விழிக்கும் 
பொழுது மறைந்தாலும் 
பொழுது மலர்ந்தாலும் 
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!

மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி 
சில மனது கவிதை தேடி 
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது 
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும் 
காதலின் இரு கண்கள்!

முழு நிலவு வானில் தொங்கும் 
எதிரொளி நிலவு கடல் அலையில் 
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு 
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!

தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட 
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும் 
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்! 


வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...





குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai

Kudiyarsu thinam
Kudiyarsu thina kavithai


இடைவெளி இல்லா காற்றாய் 
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர 
நகருகின்ற தனி ஊசலாய் 
சம உரிமை தொடர்ந்து நீடிக்க 
காலம் காட்டும் கடிகாரமாய் 
அனைவருக்கும் ஒரே சட்டம்!


அன்று முதல் இன்று வரை 
முடிவை எட்டா தீப ஒளியாய் 
வேற்றுமையில் ஒற்றுமை 
நம்மோடும் நம் உணர்வோடும் 
தினமும் பயணம் செய்ய 
வழி வகுத்த அரசியல் அமைப்போடு 
அனைவரும் பயணிப்போம்!

இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!







இழப்பில் மகிழ்ச்சி | சிகரெட் கவிதை

நழுவிய சிகரெட்
நழுவிய சிகரெட் 

விரல் நழுவிய சிகரெட் 
விரக்தியில் விழிகள் 
மகிழ்ச்சியில் நுரையீரல்!