கிருஷ்ண ஜெயந்தி கவிதை

கிருஷ்ண ஜெயந்தி கவிதை

Krishnar
Krishna Jeyanthi Kavithai


கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!

புல்லாங்குழல் காற்றில் இசையாய் 
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!

மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்  
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!

உடலைத் தாண்டிய ஆன்மாவாய் 
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!

நீல நிறத்தில் ஓர் குழந்தையாய் 
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய் 
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!

ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!

மரணம் எட்டாத என் ஆன்மாவாய் 
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!

ஸ்ரீ ராம ஜெயம்!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக