கிடைத்தே தீரும்

கிடைத்தே தீரும்

Kidaithal
Kidaithe Theerum

உதவி இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் நேராது 
நம்பிக்கை இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் வாராது!

செய்து விட்ட புண்ணியங்கள் 
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள் 
கை விட்டுப் போவது இல்லை!

கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!

விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!

நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!

அறிவாளி என்று தன்னை  உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!