அலுவலக பிரிவுவிடை | Farewell kavithai

அலுவலக பிரிவுவிடை | Farewell kavithai

Aluvalaka
Office Farewell

சாலையோரம் நான் பயணிக்கையில் 
காற்றைக் கிழித்து கைவீசி நடக்கையிலே 
நினைவுகளால் நீ என் விரல் பிடித்து நடைபோடுவாய்!

ஆர்பரிக்கும் அகம் அது துடித்ததால்
என் இதழ் அது வேண்டுகோள் விடுக்காமல் 
நிழற்படம் நீ அனுப்பினாய்!

இரவு நேரத்து படுக்கை அறையில் 
மேல் இமை கீழ் இமை தொடும் முன்
நினைவின் கனவுகளாய் வந்து விடுவாய்!

அகத்தாலும்  தேகத்தாலும் அழகு நீயாதலால்
உயிர் பெற்று நிற்கிறது என் அலைபேசி!
என் அலைபேசிக்கு அழகு நீயாவாய்!

வானலை சுமது வரும் Whatspp வரிகளில் 
ஒட்டிக் கொண்டது இளந்தளிர் தென்றல்கள்!
உன் Whatspp வரிகள் எனது கவிதைகளாய்!

நண்பர்களோடு அரட்டை அடிக்கையிலே 
நகர்ந்து விடும் நொடி நிமிட முட்களிலே 
உனது நினைவுகளே எனது காலமாய்!

அலுவலகம் பிரிவுவிடை நமக்கு தந்தாலும் 
விடுமுறையே காணாத நமது நினைவுகள் 
வரும் காலத்திலும் விழி திறந்து கவி எழுதட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக