ஜனவரி 2013

நண்பர்கள் தின கவிதை | Friendship day kavithai

Natpu
Natpaa Kaathalaa

காதலுக்கென்று ஒரு சின்னம் 
இதயம்....

நட்புக்கென்று
ஒரு சின்னம் தேடினால்??

அது சரி 
உயிரை சின்னமாக வரையச் சொன்னால் 
என்ன செய்யும் இந்த நட்பு.

அந்தி வானம்



Vaanam
Vaanam


பகலிலே வெள்ளை சீலை அணிந்து
அங்கும் இங்குமாக உலவுகிறாய்.
உன் கணவன் இறந்து விட்டான் போலும்
என்று எண்ணி சிந்தனை உதிக்க 
மாலை வேளை உதிக்கிறது

மாலை வேளை வந்தால் மட்டும்
சிகப்பு பட்டாடை உடுத்தி
முந்தானை விரிக்கிறாய்
உன் தலைவன்தான் யாரோ?

ஹைக்கூ கவிதை

Maranam
Maranam


சிறகுகள் இல்லாமல் பறக்கின்றான்
உடலை விட்டு பிரியும் போது
மரணம் - உயிர்

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Kaathali
Vilzhakkal


உன் அழகை செதுக்க
உன் அன்னைக்கு தேவைப்பட்டது
பத்து மாதங்களாம்!

நீ பிறந்த அன்றே
விண்வெளியில்
 இரண்டாம் நிலவுக்கு
இடமில்லை என்று 
பிரபஞ்சமும் சொல்லி விட்டது
நீயும் பூமியிலே தங்கி விட்டாய்!

தேய் பிறை என்பதை அறியாத
உன் வயதின் அழகை கண்டு
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்.

கவிதை என்றால்
 பொய் அல்ல என்று மாற்றிய
உன் அழகுக்கும் வயதுக்கும்
எனது நெஞ்சார்ந்த 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!





எழுத்து பிழை | Eluthu pizhai

Eluthu
Eluthup pilai



சரி செய்ய முடியாத
எழுத்து பிழையாய்
இன்று வரை 
என் காதல்!

ஹைக்கூ கவிதை

Poi
Poi Haikoo



பொய்யை எழுத
சில நேரம் ஆகிறது!
கவிதை

ஆறுதல்

Aaruthal
Aaruthal Nilavu


நிலவை பார்த்து
ஆறுதல் அடைகிறேன்.
உன்னை பார்த்தது போல

தாகம் தீர்த்த காதலி

Thaagam
Thaagam Kaathali


விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்!!!
மண்ணின் தாகம் தீர்த்த காதலி
மழை!!!!

சிலைகளாய்

Pesaatha
Silai


நீ என்னிடம் பேசுவாய் 
என்ற நினைவுகள்
இன்றுவரை சிலைகளாய்.

பனித்துளி

Panithuli
Suriyan andPanithuli


காலை சூரியனை பார்க்க
ஆசைப்பட்ட பனித்துளி போல,
என் காதல் ..... ஆம்!!!
உனக்காக காத்திருந்து 
சிறகில்லாமல்
பறந்த பனித்துளி நான்!!

நீ ரொம்ப அழகு | Nee romba alaka irukka

Alaku
Nee romba alaku

தோகை விரித்த மயில்
நேற்று கண்டேன்!
என்னவளின் கூந்தல் 
விரிந்த நிலையில்!

கவி வழி

lips
Iru Vari Ithalkal


உன் இரு வரி இதழ்கள் 
இணையிலா முடிவிலி 
ஈடு கட்டா முடியா 
கற்பனை கவி வழி!

நிம்மதியை தேடி

Poonga
Poonga


நிம்மதி இல்லாமல்
கோவிலுக்கு சென்றேன்!
உன்னை முதலில் சந்தித்த 
பூங்காவிற்கு!

கல்லறையாய் எனது டைரி | Kallarai

Dairy
Kallarai Dairy


ஒற்றை காலில் தவம் செய்து 
உன் கூந்தலேறி உதிர்ந்த பூக்கள் 
பிறந்த பலனை அடைந்தது!
உதிர்ந்த பூக்களின் கல்லறைகளாய்
எனது டைரி!