மார்ச் 2014

காதலின் எதிர்பார்ப்பு | Love expectation

Lover expect
Love Expectation

கவிதையோடு காலம் தள்ளி
கண்ணீர் சிந்தி விழிகள் பழுது
இருவிழிகள் இயல்பு நிலை திரும்புமா?

என் அகம் அறிந்த அலைபேசி
வேலை நிறுத்தம் செய்யுது 
உன் குரல் கேக்க துடிக்குது!

உணர்வுகளையும் வலிகளையும்
உன்னோடு பகிர்ந்தேன்.
இதழ் திறந்து நீ பேசாமல் இருக்க
என் அன்பே! நான் இனி என்ன செய்வேன்?

கண்ணீரோடு உன் நினைவுகள் தீண்ட 
என் கரம் தொட்ட உன் நிழற்படம் 
விழி சிந்தும் கண்ணீரில் கரையுதே!

இறைவனே இறங்கி வந்து 
அன்பாய் ஓர் வரம் தந்தாலும் 
என் அன்பே! என் காதலே!
உன்னைப் போல் எவர் அன்பு தருவர்?

எழுதிய கவிதைகளை உன்னிடம் சமர்ப்பித்து 
உன் இதழ் கொண்டு நீ வாசிக்க
சிந்திய உன் இதழ் காற்றை 
இயற்கையது தழுவாமல் 
நான் அதை சுவாசித்தேன்.
என் அன்பே! 
இனி எவர் இதழ் காற்றை சுவாசிப்பது?

உன் விரல் தொடா என் விரல்கள் 
கைரேகை அது தேய்மானம் கொள்ளாமல் 
ஆறடி நிலம் தன்னில் மறையுமோ?

விதியும் வீதியும் மானுடர்க்கு உரியது
இதில் நீ யென்ன நானென்ன?

என்றாவது ஒரு நாள் 
விதி வென்று சென்று விட 
வீதியில் நான் வீழ்ந்தேன் என்றால் 
ஆறடி நிலம் மட்டும் எனதென்று 
நிறைவேறா ஆசையோடு நான் சென்றால் 
என் அன்பே நீ என்ன செய்வாய்?

இரு விழியும் பார்வை யிழந்து 
இருள் சூழ்ந்த உலகில் நான் நிற்க 
என் காதல் அது என்னா யிற்று?
இறைவனுக்கும் உனக்கும் தான் வெளிச்சம்!




நந்தவன நாட்கள் | Nandavana Naatkal




புழுதியோடு புரண்டு
அழுக்கு ஆடையோடு
அமாவிடம் வீரம் பேச
வாரியலை ஆயுதமாய்
அம்மா எடுத்து விட
வீதியில் ஓட்டப்பந்தய வீரனாய்
புறமுதுகிட்டு ஓடிய நாட்கள்!

ஆடை அணிந்துவிட
அன்னை என்னை தேடி வர
கால் மடக்கி  ஒளிந்து கொண்டேன்
கட்டிலின் கால்களுக்கு இடையில்!
அன்னை என்னை கண்டுபிடித்தாள்
ஆடைதனை அணிவித்தாள்.
மணிச்சத்தம் கேட்டிருக்கும் போல!

கழனியில் காளைகள் சேறடிக்க
தந்தையங்கே வியர்வை சிந்த
தந்தை வேதனை நானறியாது
சேறு அடித்த கழனியில்
நான் போய் சேறடிக்க
சேற்றால் அடி வாங்கினேன்.
பாசம் கொண்ட தந்தையிடம்!
பாசம் சற்று அதிகம்....

நண்பர்களோடு திருட்டுத்தனமாய் 
ஆனந்தக்குளியல் நாங்கள் போட
சுதந்திரக்குளியல் சிந்தனையில் தோன்ற
கரையோரம் ஓய்வெடுத்தன ஆடைகள்.
உலா  வந்த பண்ணையாரு
ஆடையோடு சென்றுவிட
காட்டுவாசியாய் வந்தோம் இல்லத்திற்கு!

காபித்தண்ணி பாட்டி குடிக்க
சர்க்கரை இல்லை என்று விட
ஒற்றை சர்க்கரையை
கையிலெடுத்து கொடுத்தேன்!
கர்ணனாய் மாறினேன்!
ஊரெல்லாம் பாட்டியாதலாள்!

ஒற்றை நடைபாதை தனிமையிலே
பாதங்கள் மெதுவாய் நடைபோட
நானும் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னை மடியில் குழந்தையாய்
இதயம் களிப்புற்ற நந்தவன நாட்களது!




சிட்டு குருவி தினம் | Sittu kuruvi day



Kuruvi
Chittu kuruvi Day

ஏழை குடிசை அழகானது
சிட்டு குருவியின் குடிலாலே!
இறக்கை முளைத்த மழலையாய்
இலக்கு தெரியாமல் வீட்டினுள்
இங்கும் அங்கும் பறந்தாயே!

கிராமத்து வீதிகளுக்கு அழகாய்
மின் கம்பியில் வரிசையாய்
மின்னொளியாய் தெரிந்தனவே!
இனி எங்கு சென்று தேடுவேன்
சிறுவயதில் நான் கண்ட சிட்டுதனை!

இரை தேடி ஏமாந்த சிட்டுக்கள்
மானுடனால் ஏமாற்றப்பட்டனவே!
வேதி உரங்கள் கலந்த மண்ணாலே!
புழு பூச்சி ஏதும் இல்லா
பூமித்தாய் அநாதை ஆனாளே!



சிட்டு பறக்கும் இடத்தில்
சிறகுகள் இல்லாமல்
புகை தூசு பறந்தனவே!
சிட்டு பறக்கும் உயரம் தாண்டி
செல்போன் டவர் வளர்ந்தனவே!

நொடிமுள் வேகமாய் மணிமுள் நகர
அலைபேசியில் பேசும் மானுடர்கள்
சிட்டுகளின் உயிரை சிதைத்தனரே!
மலர்ந்து விட்ட மொட்டு சிட்டுகளை
மலடிப் பெண்ணாய் மாற்றினரே!

ஊடகங்களே ஊக்குவியுங்கள்
சிட்டுகளைக் காணவில்லை யென்று!
மானுட விழிகளே சபதமெடுங்கள்
சிட்டுகளின் இனம் காப்போம் யென்று!





நெனைச்சபடி நெனைச்சபடி | ninaichapadi ninaichapadi

நெனைச்சபடி நெனைச்சபடி மணப்பொன்னு அமைஞ்சதடி என்ற பாடலைப் போல , இந்த உயிர்சிந்தி உயிர்சிந்தி பாடல். பாடிப் பாருங்கள்..


உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!

உன் இதயத் துடிப்பாய் நானும் 
என் உயிரில் உறவாய் நீயும்
உண்மைக் காதலாய் உலகிற்கு இருப்போம்!
வான் நிலவு உனை வரவேற்க
என்னவென்று அதை நான் கேட்க
இனி நிலவின் தேவதை நீ என்று
விண்ணுலகு அதிர்வலை எழுப்ப
மெய் உணர்ந்து மெய் மறந்தேன்!

ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை
ஹை ஹை ஹை ஹைஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை

தூசு கொண்ட காற்று உந்தன் முகம் தீண்ட
மார்போடு உன்னை அணைத்தேன் உந்தன் கவசமாக
மோத வந்த தூசு என்னை தண்டித்து செல்ல
உந்தன் இதழ்கள் சிந்திய காற்று என் விழியோடு உறவாட 
உன் இதயத் துடிப்பு  இனி என்னோடு 
என் வாழ்க்கையே இனி உன்னோடு ! (2)
என் பிறவி பலன் அது இனிக்கும்
கோவில் குளம் செல்லாமலே!

என்னுயிரே...! கண்மணியே...!
என்னுயிரே...! கண்மணியே...!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

சூரியக்கதிர் என்னை சுட்டு விடும் என்று
சேலை நுனி நீயும் கொண்டு குடை பிடித்தாயே
பூமி கொண்ட காதல் அதை
உன் நிழலோடு சொல்லியது!
உந்தன் உள்ளம் புரியாமலே!
என்னோடு நீயும் காதல் கொள்ள
புரிந்து விட்ட பூமி அது தாடி வளர்த்தது(2)

பூமியெங்கும் பச்சை புற்கள்
புற்களே பூமியின் தாடியாய்
என் காதல் நீ!  என் காதலி நீ!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!






தேவதை அவள் எங்கே | Where is my Angel




தேகத்தால் அவள் நல்ல நிறமாம்
மனத்தால் அவள் நல்ல அழகாம்
கிரகங்களை கட்டத்தில் அடைத்து
ஜாதகம் சொன்ன கருத்துக்கணிப்பு இது!

சிந்தனையில் சிக்கிய கவிதை வரி
காகிதத்தில் வந்து அமராததைப் போல
அகத்தால் அழகானவளைக் கண்டு
அவளைக் காணா புறவிழி  இது
நிதமும் ஏக்கத்தில் சிக்கித் தவிக்கிறது!

வானவில் வளைவை மிதமாய் மிஞ்சும்
புருவங்கள் அதன் அழகின் இடையில்
இடையழகை மிஞ்சும் நெற்றிப் பொட்டென
நிலவதன் தங்கை இவளென சொல்லலாமாம்!

முகம் அது வெண்மை ஒளியாய்
கருகூந்தல் அது இருள் நிலவாய்
எந்த பெண்ணும் இவளருகே வராது
அழகின் சிகரமாய் இவள் இருப்பாளாம்!         

பூக்களின் மணம் கொண்டு மணமுடித்து
அவள் மனம் தனை காதல் கொள்ள
நான் மலர் சுடப் போகும் மங்கை
அவளை காணும் நாள் எந்நாளோ?





உயிர் பெற்ற சிலை | Uyir pettra silai




மாலை சூடிய கற்சிலைகள்
கடவுளே என்றாலும்
தோற்றுப் போனது
மலர் சுடி நங்கை இவள்
உயிர் பெற்ற சிலையாய்
வீதியில் வந்த பொழுது!