நந்தவன நாட்கள் | Nandavana Naatkal

நந்தவன நாட்கள் | Nandavana Naatkal
புழுதியோடு புரண்டு
அழுக்கு ஆடையோடு
அமாவிடம் வீரம் பேச
வாரியலை ஆயுதமாய்
அம்மா எடுத்து விட
வீதியில் ஓட்டப்பந்தய வீரனாய்
புறமுதுகிட்டு ஓடிய நாட்கள்!

ஆடை அணிந்துவிட
அன்னை என்னை தேடி வர
கால் மடக்கி  ஒளிந்து கொண்டேன்
கட்டிலின் கால்களுக்கு இடையில்!
அன்னை என்னை கண்டுபிடித்தாள்
ஆடைதனை அணிவித்தாள்.
மணிச்சத்தம் கேட்டிருக்கும் போல!

கழனியில் காளைகள் சேறடிக்க
தந்தையங்கே வியர்வை சிந்த
தந்தை வேதனை நானறியாது
சேறு அடித்த கழனியில்
நான் போய் சேறடிக்க
சேற்றால் அடி வாங்கினேன்.
பாசம் கொண்ட தந்தையிடம்!
பாசம் சற்று அதிகம்....

நண்பர்களோடு திருட்டுத்தனமாய் 
ஆனந்தக்குளியல் நாங்கள் போட
சுதந்திரக்குளியல் சிந்தனையில் தோன்ற
கரையோரம் ஓய்வெடுத்தன ஆடைகள்.
உலா  வந்த பண்ணையாரு
ஆடையோடு சென்றுவிட
காட்டுவாசியாய் வந்தோம் இல்லத்திற்கு!

காபித்தண்ணி பாட்டி குடிக்க
சர்க்கரை இல்லை என்று விட
ஒற்றை சர்க்கரையை
கையிலெடுத்து கொடுத்தேன்!
கர்ணனாய் மாறினேன்!
ஊரெல்லாம் பாட்டியாதலாள்!

ஒற்றை நடைபாதை தனிமையிலே
பாதங்கள் மெதுவாய் நடைபோட
நானும் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னை மடியில் குழந்தையாய்
இதயம் களிப்புற்ற நந்தவன நாட்களது!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக