ஜனவரி 2014

பேஸ்புக் | facebook

Kavi
Facebook



அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க 
ஆரம்பமாகிறது 
இணையதள  உறவுகள் !

நிழற்படங்களின் 
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென 
நினைக்கின்ற மனது இது!

விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள் 
இங்கு ஏராளம்!

உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!

அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும் 
அகம் மகிழ்வு கொள்ளும்.

உண்மை அன்புகள் 
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!

மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும் 
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!

உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை 
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!

முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!

உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா 
வன்முறை உண்டு பண்ணா 
நல்ல சிந்தனை 
நமக்கு வேண்டும்!

சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!




புகை

pakai
Pookai


வளரும் சந்ததியினரை
வழுக்கிய சறுக்கள்!
வலிமையிழந்து நீ 
வலுவோடு அவன்!

விரல்களுக்கு இடையில் 
உயிரைத் தின்னும்
விளையாட்டுப் பொருளாக
கலியுக நாகரீகம் இவன்!

தொடர்ந்து வருகிறான்
தூக்கி நீ எறிந்த போதும்!
உதடுகளோடு மட்டுமல்ல 
உயிரோடு உறவாடுகிறான்!

வெள்ளைப் புகையில் 
கருப்பாய் ஒரு விதவை
சிவந்த நுரையீரலில்
சீராக மாற்றம் செய்தான்!

புகையோடு உறவாடி
புதியதாய் ஓர் உறவு 
நுரையீரலை சந்தித்து  
புற்று நோய் வளர்த்தான்!

வளர்ந்து விட்ட அவன் 
எட்டி உதைத்தான்
அந்தோ சாய்ந்தான் 
கல்லறைக் குழியில்!




பொங்கல் கவிதை | pongal kavithaigal

Pongal
pongal kavithaigal


விடியற்காலையில் விடியலாய்
கழனி நோக்கி நீ சென்றாய்!

கால் பதித்த கழனியில்
உன் வெள்ளை உள்ளம் கண்டு 
ஒட்டிக் கொண்ட சேறுகள்! 

வயல் வரப்பு பாதைகளில்
உன் பாதச் சுவடுகள் 
தினம் தினம் அரங்கேற்றம்!

சுட்டெரிக்கும் வெயிலில் 
காந்தி உடையின் பாதியோடு
வியர்வைகள் நீ சிந்துவாய்!

நீயும் நெற்கதிரும் 
உரையாடுவீர்கள் தினம் தினம்.
உனக்கு நீ எனக்கு நான்!

உழவனான உன் உழைப்புக்கு
வளர்ந்து விட்ட நெற்கதிர்
தலை சாய்த்து மரியாதை!

தமிழனாய் மட்டும் அல்ல
தரணியில் நல்லதொரு 
உழவனாகவும் நீ!

தமிழனும் உழவனும் 
தரணியில் வாழ்வாங்கு வாழ 
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்!

பொங்கலோ பொங்கல்!

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!








இரவுகளின் விழி | iravukalin vili


இரவுகளுக்கு பார்வை கொடுத்த
விஞ்ஞானத்தின் விழிகள்
மின் விளக்குகள்

நம்பிக்கையூன்றி நட

nambikkai
Nambikkai

விழியினாலும் வலியினாலும் 
விழுந்து விட்டாலும் 
வீழ்ந்து விடாதே!

விதியை தூரத்தி
வீதியில் நிறுத்தும் 
வல்லமை கொண்டவன் நீ!

வீறு கொண்டு நீ எழுந்தால் 
இன்றைய முயற்சி 
நாளைய வெற்றியென
வீர நடை நீ போடுவாய்!

தேடுகின்ற வாய்ப்புகள் 
தூரத்து கானல் நீர்கள்!
உருவாக்கும் வாய்ப்புகள் 
உன்னத அமிர்தங்கள்!

உன்னுள் இருக்கும்
ஒப்பற்ற  திறமையை
நீ கண்டு கொண்டால்
முயற்சியின் உதாரணம் நீயென 
உலகம் உன்னை அறியும்!

உலகை விட்டுச் செல்லும் முன்
சொல்லி விட்டுச் செல்ல வேண்டாம்!
செய்து விட்டுச் சொல்லுவோம்!
முயற்சிக்கு வேண்டும் வேகம் 
வெற்றிக்கு வேண்டும் விவேகம் 

தெரிந்தோ தெரியாமலோ 
விழுந்து விடுவது 
எழுந்து நடக்கத்தான்!

நம்பிக்கையூன்றி நட!




ஆண்பால் கணணி


கருவிழி கண்ட கணணி திரை 
உன் மேல் காதல் கொள்ள 
உன் விரல் தொட்ட மயக்கத்தில் 
விசைப் பலகையும் மோகம் கொள்ள 
அஃறிணை கணணி 
ஆண்பால் என்று உணர்ந்தேன்!