அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க 
ஆரம்பமாகிறது 
இணையதள  உறவுகள் !

நிழற்படங்களின் 
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென 
நினைக்கின்ற மனது இது!

விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள் 
இங்கு ஏராளம்!

உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!

அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும் 
அகம் மகிழ்வு கொள்ளும்.

உண்மை அன்புகள் 
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!

மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும் 
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!

உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை 
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!

முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!

உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா 
வன்முறை உண்டு பண்ணா 
நல்ல சிந்தனை 
நமக்கு வேண்டும்!

சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!

5 comments:

 1. மூழ்கடித்து விடும் என்பது உண்மை... (எனது உறவினரின் அனுபவத்தால்)

  ஒவ்வொரு வரியும் உண்மைகள்...

  // நல்ல சிந்தனை நமக்கு வேண்டும்... // வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் கொண்டவர் நீங்கள், அதனால்தான் ஒவ்வொரு முறையும் நன்றி மற்றும் அன்புடன் என்ற வாரத்தைகளை சேர்த்துக் கொள்கிறீர்கள்.

   தொடர்ந்து ஆதரவு தருக!

   மிக்க நன்றி!

   Delete

 
Top