நாய் கவிதை | Sella pirani


வீட்டு வாயிலில் என் பாதம் பதிய
லொள் லொள் சத்தத்துடன் வரவேற்புரை
அன்பு நன்றி முடிவுரை உன்னோடு!
இரு கால்களை இரு கரங்களாக்கி
என் இடையோடு இறுகத் தழுவி
நன்றியை பகிர்வாய் என்னோடு!
என் விரல் நுனி உன் நெற்றி தொட 
உன் அன்பை எனக்கு உணர்த்திட
வால் ஆட்டிடுவாய் நன்றியோடு!
என் தோட்டத்து வயல்களுக்கு
காவலாய் கள்ளி வேலிகள்
கள்ளி வேலிகள் உன் காவலோடு!
இரவில் மடியில் நான் விழி முடி
கனவோடு கவியோடு நான் பயணிக்க
வாயிலில் நீ என்றென்றும் நன்றியோடு!

No comments:

Post a Comment