தேகத்தால் அவள் நல்ல நிறமாம்
மனத்தால் அவள் நல்ல அழகாம்
கிரகங்களை கட்டத்தில் அடைத்து
ஜாதகம் சொன்ன கருத்துக்கணிப்பு இது!

சிந்தனையில் சிக்கிய கவிதை வரி
காகிதத்தில் வந்து அமராததைப் போல
அகத்தால் அழகானவளைக் கண்டு
அவளைக் காணா புறவிழி  இது
நிதமும் ஏக்கத்தில் சிக்கித் தவிக்கிறது!

வானவில் வளைவை மிதமாய் மிஞ்சும்
புருவங்கள் அதன் அழகின் இடையில்
இடையழகை மிஞ்சும் நெற்றிப் பொட்டென
நிலவதன் தங்கை இவளென சொல்லலாமாம்!

முகம் அது வெண்மை ஒளியாய்
கருகூந்தல் அது இருள் நிலவாய்
எந்த பெண்ணும் இவளருகே வராது
அழகின் சிகரமாய் இவள் இருப்பாளாம்!         

பூக்களின் மணம் கொண்டு மணமுடித்து
அவள் மனம் தனை காதல் கொள்ள
நான் மலர் சுடப் போகும் மங்கை
அவளை காணும் நாள் எந்நாளோ?

3 comments:

 1. என்னே ரசனை...!

  விரைவில் நற்செய்தி எதிர்ப்பாக்கிறேன்...!!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! நல்ல செய்தி வந்ததும் சொல்கிறேன்!

   Delete

 
Top