செப்டம்பர் 2015

பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum

panbaadu
Panbaadu


உலகம் முன்னேறியதாய் 
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு 
மானம் என்னவென்று அறியாது 
பண்பாடு என்னவென்று புரியாது!

தலைவனைக் கண்ட தலைவியவள் 
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!

தேகம் மறைக்கா ஆடைகள் 
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன் 
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!  

அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும் 
பண்பு கொண்ட முதிர்ந்த மனது 
பண்பாடோடு உன்னை பாராட்டும்!

இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்  
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா? 

செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும் 
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும் 
பண்பாடு ஒலி வேகத்திலாவது 
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!




உவரி சுயம்புலிங்க சுவாமி | uvari suyambulinga swamy

Oovari
Oovari Suyambulinga temple


அமைதியும் அருளும் தரும் சுயம்புவே!
அலைகடல் உவரியின் அருள் நாயகனே!

அள்ளித் தந்து உலகை வாழச் செய்து
அழகாய் பொலிவாய் வீற்றிருப்பவனே!
பக்தர்கள் வாழ்வுகளின் துயர் துடைத்து
பல மடங்கு இன்பம் பெருக்கியவனே!

மணி ஓசை பக்தர்கள் தூண்டினதால்
மகிமைகள் பல நீ செய்தவனே!
விரதங்கள் பக்தர்கள் மேற்கொள்ள 
விரைந்து அருள் பாலித்தவனே! 

தூயரம் கொண்டு உன்னை நாடியவர்களின்
துயரங்களை துடைத்து எறிந்தவனே!
அலைச்சல் கொண்ட பக்தர்களை 
அதிசயம் காண செய்தவனே!

உன் மணமான சந்தனமும் விபூதியும் 
பக்தர் வெற்றித் திலகமாய் கொடுத்தவனே!
உன் அருள் உலகம் அறிந்ததினால் 
உலகமே உன்னை நாடச்  செய்தவனே!