உவரி சுயம்புலிங்க சுவாமி | uvari suyambulinga swamyஅமைதியும் அருளும் தரும் சுயம்புவே!
அலைகடல் உவரியின் அருள் நாயகனே!

அள்ளித் தந்து உலகை வாழச் செய்து
அழகாய் பொலிவாய் வீற்றிருப்பவனே!
பக்தர்கள் வாழ்வுகளின் துயர் துடைத்து
பல மடங்கு இன்பம் பெருக்கியவனே!

மணி ஓசை பக்தர்கள் தூண்டினதால்
மகிமைகள் பல நீ செய்தவனே!
விரதங்கள் பக்தர்கள் மேற்கொள்ள 
விரைந்து அருள் பாலித்தவனே! 

தூயரம் கொண்டு உன்னை நாடியவர்களின்
துயரங்களை துடைத்து எறிந்தவனே!
அலைச்சல் கொண்ட பக்தர்களை 
அதிசயம் காண செய்தவனே!

உன் மணமான சந்தனமும் விபூதியும் 
பக்தர் வெற்றித் திலகமாய் கொடுத்தவனே!
உன் அருள் உலகம் அறிந்ததினால் 
உலகமே உன்னை நாடச்  செய்தவனே!

No comments:

Post a Comment