பிப்ரவரி 2019

வானத்து நிலா

வானத்து நிலா
வானத்து நிலா

மழை முத்தமிட்டோ 
வெயில் கோபப்பட்டோ  
வானத்து வீட்டில் 
தொங்கும் வெள்ளியொன்று 
கருத்து விட்டது!


காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்டன  கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

தனிமை சற்று கிடைத்தால் 
தானியங்கி ஒலி பெருக்கியாய் 
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக 
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!


மாலை மயங்கும் சூரியன் 
காலையில் விழிக்கும் 
பொழுது மறைந்தாலும் 
பொழுது மலர்ந்தாலும் 
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!

மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி 
சில மனது கவிதை தேடி 
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது 
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும் 
காதலின் இரு கண்கள்!

முழு நிலவு வானில் தொங்கும் 
எதிரொளி நிலவு கடல் அலையில் 
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு 
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!

தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட 
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும் 
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்! 


வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...