மார்ச் 2018

முட்டாள் தினம் கவிதை | April fool

April1st
Happy Fools day!

கலியுக அரசியல்வாதிகளால்
சிந்திக்க மறந்த முட்டாளாகினோம்!
கற்பனை இல்லா உதாரணம் நாம் 
நிச்சயம் கலப்படம் இல்லா உண்மை!

இலவச பொருட்கள் எல்லாம் 
இலவசமாய் இன்று இல்லத்தில்!
இலவசத்தோடு இலவசமாய் 
இலவச முட்டாள் இணைப்பிதழ் ஆனோம்!

ஊடகங்களின் அகோர பசிக்கு 
உணவாக தினமொரு பொய்கள்!
குப்பை உணவான உண்மைகள்
உப்பில்லா உணவாய் முட்டாள் மக்கள்!

கார்ப்பரேட் எல்லாம் 
சரியாய் சிந்திக்கும் 
சரியாய் சிந்திக்கா மக்களை 
சரியாக பயன்படுத்தும்!

சரி எது ? தவறு எது ?
அறிவாளியா ? முட்டாளா ?
தவறாய் சொல்வார்கள் 
முட்டாள்தான் சரி என்று!

மணல் திருட்டெல்லாம் 
கண் முன் கொள்ளை!
தினம் அறிந்து  இதழ் திறக்கா
நாம் எல்லாம் முட்டாளின் எல்லை!

கட்சியின் கொள்கை எல்லாம்
கண்ட ---------ம் சொல்லும்!
பயணம் என்னவோ 
ஊழலை நோக்கியே செல்லும்!

நாளும் ஏமாறுவதை 
மூளைக்கு நினைவுபடுத்தவே
ஏமாற்றத்தை எடுத்துரைக்கவே 
நமக்கென்று ஒரு நாள்!

முட்டாள் தினத்தை 
கொண்டாடுங்கள்!
தலை கவிழ்ந்து நாணம் மறந்து 
கொண்டாடுங்கள்!

முட்டாள் தின வாழ்த்துக்கள்!






நிலவின் அறியாமை | Nilavin Ariyaamai --

cloud
Moon

மதி கெட்ட வெண்மை நிலா 
உன் முக அழகுடன் போட்டி போட்டு
தன முகம் காட்ட துடிக்க 
நிலவின் அறியாமையை 
மறைக்கிறது வெண் மேகங்கள்!







உலக தண்ணீர் தினம் கவிதை | World water day Kavithai


save_water
World Water Day

(இளைய நிலா பொழிகிறதே பாடலின் சாயலில்)

நீர் வரவு குறைகிறதே
உலகமெல்லாம் காய்கிறதே!
விழி முடி செவி அடைத்து அலைகிறமே
மானுடரே அறிவில்லையோ  ! ...(2)

நீர் வரவு குறைகிறதே...

வரும் காலம் அலங்கோலம் 
தலைமுறை இனி தேய்பிறையோ
வரும் மழையில் ஒரு குளியல் 
எண்ணமெல்லாம் இனி மறக்கும்! (2)

கானல் நீரிலே தாகம் தீருமோ
தண்ணீரில் முகம் காண அரிதாகுமோ 
தண்ணீருக்கு வரிசை அமலாகுமோ

தண்ணீருக்கா சண்டை  என்றாய்
சொன்ன சொல்லை நீ  மறப்பாய்
சண்டையிட்டு அறிவிழப்பாய்
தண்ணீரை இழந்து நீ நிற்பாய்!(2)

வான வீதியில் வெண் சேலைகள் 
இழந்த சேலையோ கரு மேகமோ 
வான் மேகங்கள் விதவைக் கோலங்கள்!

நீர் வரவு குறைகிறதே...





கவிதை தேடல் | Kavithai Thedal done


searching kavithai
Kavithai Thedal

எழுதிய கவிதையில் 
ஏன் இல்லை எதுகை மோனை 
என்று யோசித்த பொழுது 
எண்ணம் மறந்து உன்னை நினைத்தேன்
என் தவறுதான் உன்னை நினைக்காதது!

எனது கவிதை தேடல் நீ !...



உலக மகளிர் தின கவிதை | Ulaka makalir thinam kavithai

March 8
Women Day

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மணம் திறக்க இதழ் திறக்க 
மல்லிகைகள் மறப்பதில்லை 
அன்பு காட்ட மறப்பதில்லை 
அன்னை மன பெண் இதயங்கள்!

இதயம் சில நேரம் பேச 
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால் 
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!

விழிகள் இரக்கத்தை பார்வையாகவும் 
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும் 
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!

மகளாய் பிறப்பெடுத்து 
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!

உறவு முறை ஆராய்ந்து பார்த்தால் 
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!

கலியுக அறிவியல் ஆண் மகனையும் 
தாய்மை அடையச் செய்யும் 
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை 
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மகளிர் தின வாழ்த்துக்கள்!.....