2017

பொய்மையின் உச்சம் | poimaiyin ucham



கெட்டே போகாத தேனுக்கு
காலாவதி நாள் குறிப்பு 
பொய்மையின் உச்சம்!

Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி

pillaiyaar
Vinaayagar Chudarthi


அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே பாடல் சாயலில்....


முதன்மை கடவுள் உன்னை நாங்கள் போற்றிடுவோமே!
உன் அருளும் கொண்டு நாங்களும்தான் வாழ்ந்திடுவோமே!
ஐங்கரம் கொண்டு நீயும் அருளிடுவாயே !
அருகம்புல் மகத்துவமும் புரிந்து கொண்டோமே!

உ எழுத்தை பிள்ளையார் சுழி ஆக்கியவன்
கஜம் முகம் கொண்டு கஜமுகன் ஆனவன்
அரச மரம் பலன் அறிந்து கொண்டவன்
அதையே இருப்பிடமாய் ஏற்றுக் கொண்டவன்!

தோப்புக்கரணம் அறிவியலை தொடங்கி வைத்தவன்
வழிபாட்டில் விஞ்ஞானத்தையே சேர்த்து வைத்தவன்!
தாய் தந்தை உலகம் என்று சொல்லி வைத்தவன்
ஓம் கார ரூபத்தின் இருப்பிடம் ஆனவன்!





உயிர்த் தோழிக்கு | to my best friend

tholikku kavithai
En Yuir Tholikku


என் உணர்வுக்கு உயிர் கொடுக்க 
உள்ளத்து துள்ளல்களை சுகமாக்க
வாழ்நாள் கனவு சுக நிஜமாக்க 
என் உள்ளத்து விழி காட்டிய வழி நீ !

கருமேக மழை குளிர் காற்றாய் 
மனதோடு ஒட்டிக் கொண்டு 
நிதமும் என் மனம் வருடும் 
மதுரை மல்லித் தென்றல்  நீ !

உன் குரல் என் செவி அறிந்து 
உன்னதக் குரல் இதுவென்று 
என் அகம் அது தினம் உணர்த்திற்று
தரணியில் சிறகில்லா தமிழ் குயில் நீ !

என் இதயத்திற்கு விழி கொடுத்து 
அதற்கு இமை கொடுக்க நீ மறந்து 
காலம் முழுதும் உன் உள்ளம் பார்க்க
இதய விழி கொடுத்த பிரம்மா நீ !

வாழை மடல் மென்மை நீ கொண்டு 
வானுயர நற்குணம் அதில் விதைத்து
இன்முக நட்பை எனக்கு பரிசாக்கி 
கண்ணீர் ஊற்றை நிறுத்தியவள் நீ !

வலியும் சுகமும் வாழ்வோடு நடை போட
வலியை நிரந்தரமாய் புறந்தள்ளி 
சுகத்தை நிரந்தரமாய் எனதாக்கி 
என் உள்ளத்துக்கு வரம் கொடுத்தவள் நீ !

முகம் பார்க்கும் காதலுக்கு 
உலகத்தை உதாரணம் சொல்லி
உள்ளம் பார்க்கும் நட்புக்கு
உலகமாய் நம்மை உதாரணமாக்கியவள் நீ !




நரை தொடா கவிதை | white hair poem ||

kaathalikku oru kavithai
Narai thodaa kavithai

என்றோ அவளுக்காக 
எழுதிய கவிதைகள் 
இன்று வரை இளமையாய்!