டிசம்பர் 2013

இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

nammalvaar

nammaalvaar

இயற்கையின் வேதனை 
இயல்பாக இல்லாமல் 
செயற்கையினால் வந்த 
செயற்கை என நீ அறிந்து
செயற்கையை கருவறுத்த
இயற்கையின் புதல்வனே !

இயற்கையை சிரிக்க வைத்து 
சிரிப்பின் சிதறல்களாய் - ஆங்காங்கே
இயற்கை விவசாயம் 
நலம் பெறச் செய்த நல்லவரே!

இயற்கை உரங்களின்
தவறான இலக்கணமாம்
செயற்கை உரங்களை 
வீழ்த்தச் செய்தவரே!

இயற்கையோடு இயற்கையாய் 
இரண்டற நீ கலந்ததால் 
உன் இயற்கை ஆர்வம் 
இறைவனும் அறிந்து
அழைத்து விட்டான் உன்னை!

நீ இல்லா இயற்கை 
இனி இடர் கண்டு விட
எங்கு சென்று தேடுவோம் உன்னை!

உங்களது ஆன்மா
சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறேன்!

https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878






new year kavithai in tamil | புது வருட கவிதை





கிழித்தெறியும் நாட்காட்டியில்
கடைசி நேர உயிராய்
வருடத்தின் இறுதி நாள்!

இறுதி நாளின் 
தொப்புள் கொடி உறவாய்
உலகில் நாளை உதயம்!
புது வருடம் 2016!

புது வருட வாழ்த்துக்கள்!


மற்றுமொரு புத்தாண்டு கவிதை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://nellaibaskar.blogspot.com/2014/12/blog-post_26.html




சேமிப்பு ஹைக்கூ


இழந்து விட்ட பேனா மையில் 
இப்படியும் ஓர் சேமிப்பு!
காகிதம் கண்ட கவிதைகள்.

எனக்கான இதயங்கள்



துன்பங்கள் அவலமாய் கோர்த்து
துயர் கொண்ட மாலையாய்
வாழ்கையில் தினம்  விழ
விதியால் வந்த துன்பம் தனை
வீதியில் எரியச் செய்த நட்பு
எனக்கான இதயம் என் நண்பன்!

விழிமூடி இரவுகள் இருள் காட்ட
விழிதிறந்து பகலையும் காட்ட
இரவும் பகலும் ஓய்வு எடுக்காது
சுகம் காணும் கனவில் உலா வந்து
தினம் ஒரு கவிதைப் பரிசு
தந்து செல்லும் என் காதல்.
எனக்கான இதயம் என் காதலி!

அன்பு எனும் அளவுகோலின்
அகரமும் சிகரமுமா யிருந்து
உலகத்திலும் உறவுகளிலும்
உன்னதமும் புனிதமுமா யிருந்து
கற்பனை தீண்டா கவிதை யாய்
சொந்தங்களில் முதன்மையாய்
மெய்யான தத்துவம் என் அம்மா!
எனக்கான இதயம் என் அம்மா!




christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas
christmas in tamil

கருணையின் சிகரமாய் 
கடவுளாய் பிறந்தவன்
கடவுளின் ஒளி!

வருந்தும் உள்ளங்களின் 
வாழ்க்கை வழி காட்டியாய்
வாழ்வு கொடுத்த ஒளி!

வாயில்தோறும் மின்னொளியில்
ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
வீடு தேடி வந்த ஒளி!

சுக்குநாறிப் புல்லில்
வளர்ந்து விட்ட குடிலில்
அவதரித்த புனித ஒளி!

கேட்டதும் கொடுத்து 
தட்டியதும் திறந்து 
தேடியே கண்ட ஒளி!

மானுடர்களை இரட்சிக்க 
மாட்டு தொழுவத்திலே
புனிதனாய் பிறந்த ஒளி!

ஒளி தந்த வெளிச்சத்திலே
துயர் கொண்ட இருள் நீங்கி
வாழ்வை செழுமையாக்கிய  ஒளி!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!






விரலின் மகுடம்


தாமரை இதழின் நகலாய்
நான் கண்ட உன் நகங்கள்!

மின்னொளி பட்டு
ஒளிவீசும் வைரமாய்
கண்சிமிட்டும் உன் நகங்கள்!

வளர்பிறை உண்டு
தேய்பிறை இல்லை
ஆதலால் வீதிக்கும்
செல்லவில்லை!

உதடுகளில் உறவாடி
எச்சிலில் விளையாட
வாய்ப்பு இங்கு இல்லை
நகம் கடிக்க மாட்டாயே?

உன் விரல் பிடித்து
உலா வர ஆசை படுவேன்!
உண்மைதான்!

நகம் தொடவும்
மறவ மாட்டேன்!
அதுவும் உண்மைதான்!

ரோஜா மலர் பறிக்க
உன் விரல் ஏங்கும்!
ரோஜா என்னவோ
உன் நகம் தொட ஏங்கும்!

பழமொழி உருமாறும்
புது மொழி உருவாகும்.
இனி உன் நகம் கண்டு
கவிஞனும் சொல்லுவான்!

அகத்தின் அழகு
முகத்தில் மட்டுமல்ல!
நகத்திலும் என்று!




அன்புள்ள அம்மாவுக்கு



வெள்ளைக் காகிதத்தில் 
அம்மா என்று எழுதிட 
அங்கே கவிதை ஒன்று 
பிரசவ வலி கண்டுவிட 
கற்பனைகள் வலுவிழக்கும் 
கவிதை அது உயிர்ப் பெறும்! 

உயிர்ப் பெற்ற அந்த 
வெள்ளைக் காகிதத்தில் 
நான் கண்ட கவிதைகள் இதோ!

சுமைகளை சுகமாய் 
மொழி பெயர்க்கும் அகராதி!
கடவுள் அளித்த அகராதி
கடவுளாய் என் அம்மா!

மழலையாய் தவழ்ந்தேன்
விரல்பிடித்து  நடை பழகினேன்
அம்மா எனும் கவிதையை 
அடிக்கடி தவறுதல் இல்லாமல் 
ஒப்புவித்தேன்!

இரு கை விரித்து 
நீ என்னை அழைக்க 
தவழ்ந்து நானும் வந்தேன்.

நான் தவழ்ந்து வந்ததில் 
மின்னல் வேகம் இல்லை.
அதனால் நானும் வஞ்சித்தேன்
கடவுளை தினம் தினம்!
நடை பழகும் நாள் வரை!

கன்னத்தைக் கிள்ளி
நீ சிரிக்க 
கை கால் அசைத்து 
களிப்பை வெளிப்படுத்தினேன்!
கடவுளை இங்கும் 
வஞ்சித்தேன்!

உணவு ஊட்டும் வேளையில் 
உதடுகளால் வண்டி ஒட்டி 
உலகச் சாதனை படைத்தேன்!

நெஞ்சத்தில் வஞ்சம் இல்லை
சிந்தனையில் சுயநலம் இல்லை
இன்றுவரை சொல்லவில்லை 
நான் கேட்டு எதுவும் 
இல்லை என்று!

சீரும் சிறப்புமாய் 
வளர்ந்து வந்தேன்!
இரவுகள் வந்தாலும் 
விழி மூடாமல் 
தவம் செய்து 
நீ தொட்டில் ஆட்டியதால்!

அம்மா!
உன் புகழ் பெருமை 
நான் அறிந்ததினால் 
தெய்வம் இல்லை என்று 
பொய்யுரைக்கும் நாத்திகனிடம்  
நினைவுபடுத்தி விடுகிறேன்
அவனது அம்மாவை!




கவிதைக்கு விடுமுறை


குளிருட்டப்பட்ட அலுவலகத்தில் 
அனல் காற்று வீச 
அறிந்து கொண்டேன்!
அலுவலகத்திற்கு நீ விடுப்பு என்று.

இன்று கவிதைக்கு விடுமுறை!

காதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen done

Kaathal
Kaathalil vilunthen

காட்சி கண்ட விழிகள் 
கவிதை சொல்லும் !
கவிஞனாய் நீ இல்லாவிட்டாலும்!

மௌனம் தாங்கும் பூக்கள் 
மெல்லிசை பாடும்!
மெட்டுக்கள் இல்லா பொழுதும்!

மலராத ரோஜா மொட்டும் 
மலர்ந்து விடும்!
மலர்வது நாளையென அறிந்தும்!

தவமிருக்கும் சாலையோர மரங்களும் 
தவழ்ந்து உன்னைத்தொடும்!
தவழ முடியாதென்று தெரிந்தும்!

தேவதை அவள் கடந்து செல்ல 
தேகங்கள் மெய் சிலிர்க்க 
நான் மட்டும் என்ன விதிவிலக்கு?

காதலில் விழுந்தேன்!