அன்புள்ள அம்மாவுக்கு

அன்புள்ள அம்மாவுக்கு



வெள்ளைக் காகிதத்தில் 
அம்மா என்று எழுதிட 
அங்கே கவிதை ஒன்று 
பிரசவ வலி கண்டுவிட 
கற்பனைகள் வலுவிழக்கும் 
கவிதை அது உயிர்ப் பெறும்! 

உயிர்ப் பெற்ற அந்த 
வெள்ளைக் காகிதத்தில் 
நான் கண்ட கவிதைகள் இதோ!

சுமைகளை சுகமாய் 
மொழி பெயர்க்கும் அகராதி!
கடவுள் அளித்த அகராதி
கடவுளாய் என் அம்மா!

மழலையாய் தவழ்ந்தேன்
விரல்பிடித்து  நடை பழகினேன்
அம்மா எனும் கவிதையை 
அடிக்கடி தவறுதல் இல்லாமல் 
ஒப்புவித்தேன்!

இரு கை விரித்து 
நீ என்னை அழைக்க 
தவழ்ந்து நானும் வந்தேன்.

நான் தவழ்ந்து வந்ததில் 
மின்னல் வேகம் இல்லை.
அதனால் நானும் வஞ்சித்தேன்
கடவுளை தினம் தினம்!
நடை பழகும் நாள் வரை!

கன்னத்தைக் கிள்ளி
நீ சிரிக்க 
கை கால் அசைத்து 
களிப்பை வெளிப்படுத்தினேன்!
கடவுளை இங்கும் 
வஞ்சித்தேன்!

உணவு ஊட்டும் வேளையில் 
உதடுகளால் வண்டி ஒட்டி 
உலகச் சாதனை படைத்தேன்!

நெஞ்சத்தில் வஞ்சம் இல்லை
சிந்தனையில் சுயநலம் இல்லை
இன்றுவரை சொல்லவில்லை 
நான் கேட்டு எதுவும் 
இல்லை என்று!

சீரும் சிறப்புமாய் 
வளர்ந்து வந்தேன்!
இரவுகள் வந்தாலும் 
விழி மூடாமல் 
தவம் செய்து 
நீ தொட்டில் ஆட்டியதால்!

அம்மா!
உன் புகழ் பெருமை 
நான் அறிந்ததினால் 
தெய்வம் இல்லை என்று 
பொய்யுரைக்கும் நாத்திகனிடம்  
நினைவுபடுத்தி விடுகிறேன்
அவனது அம்மாவை!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக