விரலின் மகுடம்

விரலின் மகுடம்


தாமரை இதழின் நகலாய்
நான் கண்ட உன் நகங்கள்!

மின்னொளி பட்டு
ஒளிவீசும் வைரமாய்
கண்சிமிட்டும் உன் நகங்கள்!

வளர்பிறை உண்டு
தேய்பிறை இல்லை
ஆதலால் வீதிக்கும்
செல்லவில்லை!

உதடுகளில் உறவாடி
எச்சிலில் விளையாட
வாய்ப்பு இங்கு இல்லை
நகம் கடிக்க மாட்டாயே?

உன் விரல் பிடித்து
உலா வர ஆசை படுவேன்!
உண்மைதான்!

நகம் தொடவும்
மறவ மாட்டேன்!
அதுவும் உண்மைதான்!

ரோஜா மலர் பறிக்க
உன் விரல் ஏங்கும்!
ரோஜா என்னவோ
உன் நகம் தொட ஏங்கும்!

பழமொழி உருமாறும்
புது மொழி உருவாகும்.
இனி உன் நகம் கண்டு
கவிஞனும் சொல்லுவான்!

அகத்தின் அழகு
முகத்தில் மட்டுமல்ல!
நகத்திலும் என்று!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக