எனக்கான இதயங்கள்

எனக்கான இதயங்கள்துன்பங்கள் அவலமாய் கோர்த்து
துயர் கொண்ட மாலையாய்
வாழ்கையில் தினம்  விழ
விதியால் வந்த துன்பம் தனை
வீதியில் எரியச் செய்த நட்பு
எனக்கான இதயம் என் நண்பன்!

விழிமூடி இரவுகள் இருள் காட்ட
விழிதிறந்து பகலையும் காட்ட
இரவும் பகலும் ஓய்வு எடுக்காது
சுகம் காணும் கனவில் உலா வந்து
தினம் ஒரு கவிதைப் பரிசு
தந்து செல்லும் என் காதல்.
எனக்கான இதயம் என் காதலி!

அன்பு எனும் அளவுகோலின்
அகரமும் சிகரமுமா யிருந்து
உலகத்திலும் உறவுகளிலும்
உன்னதமும் புனிதமுமா யிருந்து
கற்பனை தீண்டா கவிதை யாய்
சொந்தங்களில் முதன்மையாய்
மெய்யான தத்துவம் என் அம்மா!
எனக்கான இதயம் என் அம்மா!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக