February 2013

மலடியின் கனவு ஹைகூ

Maladi
Maladiyin kanavu


கனவில் மட்டும்
சுக பிரசவம்.
மலடியின் கனவு


கோயில் புறா


temple
Koyil Puraa


உன் இதயமே
கோயில் என்று 
சுற்றி வரும் 
இந்த கோயில் புறாவிற்கு 
இதயத்தில் இடம் ஒன்று 
கொடுக்க கூடாதா?

எதிரொளி


Ethiroli
Ethiroli

கலங்கிய சேறை
கன்னி அவள்
காண நேர்ந்தால் 
கலங்கிய சேரும் 
எதிரொளிக்கும்
களங்கமில்லாத 
பூலோக நிலவை!


முதிர் கன்னி


Muthir kanni
Muthir Kanni

நீ கிழித்தெறியும் நாட்காட்டி 
உனக்கு உணர்த்தியிருக்கும் 
காலம் என்றால் என்னவென்று!

யாரும் இல்லா நேரம் 
உன் வீட்டு கண்ணாடி
உனக்கு உணர்த்தியிருக்கும் 
நெற்றி பொட்டில் இருக்கும் 
குங்குமத்தின் மகிமையை!

நீ தாண்டி செல்லும் 
கல்யாண மண்டபங்கள் 
உனக்கு எட்டா கனியாக 
தெரிந்திருக்கும்!

முதிர் கன்னியே!
உனக்கு ஆறுதல் சொல்ல 
தமிழில் வார்த்தைகளும் உண்டு!

காலம் கடந்தும் 
வாடாத பூவாக !

என்னை காதலித்து பார்!........


Kaathal
Ennai Kaathali


என் மௌன ராகங்கள் கூட
உன் காதுகளில் சங்கீதமாய்!
என்னை காதலித்து பார்!


கணினி துறையின் பணி சுமை


Computer
Pani Sumai

பணி சுமைகள் கூட 
சுகங்கள் என்று 
உதட்டளவில் உச்சரிக்கும் 
கணினி வல்லுநர் நான்!

கணினியை நினைத்து 
கழனியை மறந்தேன்.
இன்று அவை தரிசு நிலங்களாய்!

கட்டிலில் படுத்து 
கனவு கூட கண்டதில்லை.
கணணியை தொட்ட நாள் முதல்!

கவிதை எழுத வேண்டும் என்று 
கற்பனைகளுக்கு நேரம் 
ஒதுக்குகிறேன்!
இந்த மாதம் 
அரசு விடுமுறை வருமா?

பணி சுமையின் காரணமாக 
என் கற்பனைகளுக்கு 
பகலில் நேரமில்லை!

சரி, இரவுதான் வருகிறதே என்று 
கற்பனை சிறகை பறக்க விட்டால் 
மின்னஞ்சல் எனும் தூதுவன்
சிறகில்லாமல் பறந்து வருகிறான்.
அயல் நாட்டிலிருந்து!

சிறகுகள் ஒடிக்கப்பட்டு 
எனது கற்பனைகளும்
கால்கள் உடைக்கப்பட்டு 
எனது பேனாவும் 
கணினி முன்பு மண்டியிட்டன!

இரவு தன் ஆடை கழற்ற
பகல் பிறக்கிறான்.
எனது வாழ்க்கை சுழற்சி 
ஆரம்பமானது.

உண்மையை சொல்லுகிறேன் 
எனது தலையில் சுமை அல்ல
இருந்தாலும் உணர்கிறேன்.
சுமைகளை சுமந்தது போல
கணணி துறையில்
சேர்ந்த நாள் முதல்!

திருமணங்கள் சொர்க்கத்தில் 
நிச்சயிக்கபடுகின்றன!
அது என்னமோ உண்மைதான்!

எனது திருமணமும் 
அங்குதான் நிச்சயிக்கப்படும் போல!

என் இரவுக்கு வெளிச்சம் தர 
நான் நிலவை தேடுகிறேன் 
எனக்கு வெளிச்சம் தர 
முன் வருகிறான் 
எனது கணணி திரை!
இரவினிலும் இவன் தொல்லை 
தாங்க முடிய வில்லை.

சிறு வயதில் 
பள்ளிக்கு செல்ல மறுத்தேன்.
என் அலுவலகமும் 
என் சிறு வயது பள்ளி கூடம்  தான்.
ஒரே ஒரு வித்தியாசம் 
அங்கு எழுத்து பலகை 
இங்கு விசை பலகை.

புயலையும் தாங்கும் பூக்கள் 
எங்கள் கணணி துறையில் ஏராளம்.
தழுவும் தென்றலில்
தலையாட்ட விரும்பும் 
பூவாக நான் இருக்க ஆசை!

நலம் விசாரித்த
அன்பு உள்ளங்கள்
இன்று தூரத்து சொந்தங்களாய்!

காலம் எனும் வேகமும் 
கணணி துறை எனும் வளர்ச்சியும் 
கண்கள் கூட இமைக்காமல் 
வேலை செய்ய கற்று கொடுக்கும்.

முகவரி எழுதாத
என் மூளை எனும் கடிதம் 
நிம்மதியை தேடி இன்னமும் 
பயணிக்கத்தான் செய்கிறது.

என்னோடு சேர்ந்து 
பல கடிதங்கள்.

அலட்சியம்


Alachiyam
Alachiyam

"அலட்சியம்" அல்லாத வாழ்வை 
நான் வாழ வேண்டும் என்று
தமிழின் முதல் உயிர் எழுத்தாம்
"அ" வை கூட புறக்கணித்தேன்!
என் வாழ்கையின் லட்சியத்திற்காக!

மழலையும் கடவுளான பின்னனி


Malalai
Malalai Kadavul

பத்து மாதம்
  தவமிருந்து பெற்றதால்
பெற்றவளுக்கு
குழந்தைகள் அளிக்கும் 
உலகின் உயர்ந்த வரம் - அன்னை!
மழலையும்
கடவுளான பின்னனி
 இதுதானோ!


சிட்டு குருவி | chittu kuruvi


Kuruvi
Chittu Kuruvi

உங்களது கைபேசியின்
கைபேசியின் கைகளுக்குள் 
மாட்டி கொண்டது 
எங்களது உயிர் அலைகளே!முற்றுப் புள்ளி......


point
Muttrup pulli

மதம் கொண்ட காம கொடூரர்கள்
மலராத மொட்டுக்களையும் 
பிய்த்து எறிந்தனவே!

பயிரை காக்க வேண்டிய வேலி கூட
சில நேரம் பயிரை மேய்ந்து விட்டு 
சீரழிக்கவும் செய்திடுகிறது.

சட்டம் எனும் அதிகார பேனா 
பாலியல் பலாத்காரம் எனும் 
வன்கொடுமைக்கு முற்றுப் புள்ளி 
வைக்க மறந்தது போலும்.

என் பாரத தாயே!
உன் விழியோரம் மை தேடி 
முற்றுப் புள்ளி வைத்து விடு!
ஹைக்கு கவிதை


Haikoo
Paper Haikoo


காகிதத்தை எழுத்தால்
அழகுபடுத்தும் கலை 
காதல் கவிதை!

கடிகாரம்Kadikaaram
Kadikaaram

பன்னிரண்டு எண்களை வைத்து 
மூன்றே மூன்று பேர் மட்டும்
விளையாடும் விளையாட்டிற்கு 
மானுடர்கள் வைத்த பெயர் 
கடிகாரம்!

ஒன்று முதல் 
பன்னிரண்டு வரையிலான எண்கள் 
படைக்கப்பட்டது உனக்காகத்தானோ ?

கூண்டுக்குள் அடைபட்ட முட்கள் 
முத்தமிட துடித்து முத்தமிடாமல் 
விலகிச் செல்கிறது!

முட்கள் என்பதால்
உரசல்கள் கூட 
இங்கு நடை பெறவில்லை!

உங்கள் கால்கள் 
ஆணியில் அடிக்கபட்டதால்
ஆணித்தரமாக எடுத்துரைகிறாய்! 
கடந்த காலம் 
திரும்ப வராது என்று!

உன்னை மானுடர்கள்
உள்ளங்கையில் அடக்கினாலும்
நீ காட்டும் காலத்தை மட்டும் 
மானுடர்களால் அடக்க முடிவதில்லை!
மானுடர்களின் சிம்ம சொப்பனமடா நீ!

உனது நொடி முள்ளின்
ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
பூங்காவில்
அவளுக்காக காத்திருந்த பொழுது!

நிமிட முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
தேர்வு அறையின் 
இறுதி நேர்த்தில்!

மணி முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
அவளுடன் மணிக்கணக்கில்
பேசி விட்டு பிரியும் பொழுது!

காலம் எனும் பூவை 
சுற்றி வரும் வண்டுகள் 
நீங்கள்தானோ?

காலம் எனும் பூ 
உதிர்வதற்கு முன் 
பறிப்பது 
மானுடர்களாகிய 
நமது சிந்தனையில் தான் உள்ளது!

காலம் பொன் போன்றது நம்
கடமை கண் போன்றது!
ஒவ்வொரு கடிகாரத்தினுள்ளும்
எழுத பட வேண்டிய 
மானுடர்களின்
புதிய திருக்குறள்!

அதிசயம்Ragasiyam
Athisayam


தினம் ஒரு ரோஜாவை
சூடி வரும் நீ ஒரு நாள்
அலுவலுகத்துக்கு விடுப்பு எடுத்தாய்!

உன் கூந்தலேறி உதிராமல்
வாழ்க்கை முடியும் என்ற எண்ணத்தில்
மலர்ந்த ரோஜா
மொட்டுக்களாக மாறிய
இந்த அதிசயத்தை
உலகின் எத்தனையாவது
அதிசயம் என்று சொல்வது?


இவள் பூலாக தேவதை

Devathai
Pooloka Thevathai


கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே  மெய்.

இடப்பக்க மூளை பல முறை 
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள் 
தேவதையின் அழகை போல் 
அமைந்ததால் - கன்னியே  
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை 
கவிதையின் வழியாக 
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

இறுதியாக என் மனமும் 
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்தது.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!

இவள் பூலாக தேவதை!!!


என் காதலியின் பரிசுparisu
Kaathal Parisu

மையை அம்பாக தொடுத்து 
காகிதத்தோடு போர் புரிந்து 
எனது பேனா கண்ட வெற்றி - கவிதை !!!

வெற்றி கண்ட களிப்பிலும் 
அமைதியாய் 
என் சட்டைப்பையில் 
நின்று கொண்டிருந்தான்.

கன்னி அவள் பாதங்கள் பட்டு 
பாத சுவடுகள்  பூ பூத்திட 
நடந்து என்னருகே வந்தாள்.

கன்னி அவளின் 
வாழ்த்துகளை எதிர்நோக்கி 
கம்பீரமாய் காட்சி கொடுத்தான் 
என் பேனா!

கவிதையை படித்தாள்
இரு வரி இதழ்களால்
காகிதத்தை முத்தமிட்டாள்.

மார்போடு கன்னி அவள் 
தலை சாய்த்தாள்.
எனது பேனாவின்
வருத்தம் கண்டு!

காதல் தோல்வி ஹைகூTholvi
Kaathal Tholvi


மாது கவிதையில்
இன்று முதல் மது 
காதல் தோல்வி!

காதல் கற்பித்த பாடங்கள்


Lession
Kaathal Paadankal


நான் ரசிக்க கற்று கொண்டேன்
உன் கண்கள் பூக்கள் ஆனதால்!

இசையின் வலிமையை புரிந்து கொண்டேன் 
உன் மௌனங்கள் சங்கீதம் படிப்பதினால்!

நடனம் ஆட கற்று கொண்டேன்
உன் காதணிகள் நடனம் ஆடுவதால்!

படிக்க கற்று கொண்டேன் 
உன் இருவரி இதழ்கள் என் திருக்குறள் ஆனதால்!

உன் காதலை புரிந்து கொண்டேன்
நீ விட்டு கொடுக்கும் தருணத்தால்!


நீர்த்துளிகளின் போராட்டம்


Neer
Neer thulikal


உன் காலை குளியலில்
உன் தேகத்தோடு தீண்டி விளையாடும்
நீர்த்துளிகள்
புவி ஈர்ப்பு விசைக்கெதிராய் 
போராட்டம் நடத்த 
திட்டம் தீட்டி இருக்கிறதாம்.
அவை புவியை நோக்கி
கீழிறங்குவதால்!

சிறகுகள் இல்லா தேவதை!Siraku
Siraku illa Devathai


என் அன்பு காதலியே!

உன் பெயர் மட்டும் 
தெரிந்து இருந்தால் 
எனது கவிதையின்
அனைத்து வரிகளிலும் 
எதுகை மோனையாக 
உனது பெயரின் எழுத்துக்களே
அமைந்திருக்கும்!

பெயர் தெரியாத
என் அழகு செல்லத்திற்கு 
நான் வைத்த பெயர்
என்ன தெரியுமா?


சிறகுகள் இல்லா தேவதை!


நான் காதல் திருடன் அல்ல


Thirudan
Kaathal Thirudan


நான் கொடுத்த ரத்தம்
அவள் உடம்புக்குள் மட்டும் 
ஊடுரவ வில்லை!

அவளின் இதய துடிப்பாய்
லப் டப் எனும் சங்கீதத்துடன் 
அவளுடனே இருப்பேன்!

நான் தானாக ரத்தம் கொடுக்க
முன் வந்ததால் 
இது ரத்த தானமும் அல்ல!

அவள் இதயத்தை திருடியதால் - நான் 
காதல் திருடனும் இல்லை! 

என் காதலியின் பாத அழகு


Kaal Alaku
Paatha Alaku


உன் இதழ்கள்
 பேசும் வார்த்தையை விட 
உன் காதணிகள்
 பேசும் கவிதை மிக அருமை!

ரசிக்க முடியாமல்
உன் பாத அழகில் 
மயங்கி கிடக்கிறது 
உன் வெள்ளி கொலுசுகள்.

காதல் தூதுவன்


Thoothuvan
Kaathal Thoothuvan


நம் காதல் சண்டையில் 
உனக்கும் எனக்கும் 
பல நேரங்களில் 
சமாதன தூதுவனாய்
சிகப்பு ரோஜா!

வினோதமானவளே!


Vinothaa
Vinothamaanaval


என் வினோதமானவளே!
இதயத்தை திருடியது
என்னவோ நீதான்!
உன் இதயத்தில்
சிறை தண்டனை
எனக்கா?

என் வினோதமான செல்லமாட நீ!

மரங்களை தின்னும் மானுடன்


Maanudan
Maram vettuthal


பசுமை பட்டாடை உடுத்தி பழக்கப்பட்டவள்
இன்று அரை குறை ஆடையாய்!
நாகரிகம் வளர்ந்து விட்டதாம் !

அவளாக மாறவில்லை
நாமாக அவளை மாற்றி விட்டோம்
அழிந்து வரும் நிலையில் காடுகள்!

ஓரறிவு கொண்டவள் என்றாலும்
கடமை தவறாத உன் கண்ணியம் கண்டு
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்!

வளர்பிறை மட்டுமே அறிந்த மரங்கள்
இன்று தேய் பிறையை நோக்கி..

இலை மறை காய் எனப்படும் பழமொழி கூட
வருங்கால சந்ததியினர்க்கு
மறக்கும் என்பதில் சிறிதளவு கூட
ஐயம் இல்லை!

பூமிக்கடியில் நீர் எடுத்து
தாகம் தீர்த்த மனிதா
காடுகளை அழித்த பிறகு
கானல் நீரில் தாகம் தணிக்க
முற்படுவாயோ ?

சுட்டெரிக்கும் வெயிலில் நீ நடக்கும் போது
உன் புற கண்கள் நிழல் தேடும்
உன் அக கண்கள் வெட்டி அளித்த
மரங்களை தான் தேடும்.

உன்னால் வெட்டப்பட்ட மரங்களால்
மலரமேலே கருகிய மொட்டுக்கள் ஏராளம்.

பிரசவ வலி என்பது
பெண்மைக்கு மட்டும் தானா?
விதைக்கப்பட்ட விதைகள்
மண்ணை துளைத்து வெளி வரும்
அந்த வலியை என்னவென்று சொல்வது ?

தண்ணீர்க்கு வரி கட்ட ஆரம்பித்து விட்டாய்
சிறகுகள் இல்லாமல் பறக்கும்
ஆக்சிஜனுகு விரைவில் வரி கட்ட போகிறாயா ?

வித விதமாய் விழாக்களை
கொண்டாடுகிறோம்.
மரம் நாடு விழாவை மட்டும்
மறந்து விட்டோம்.

தொட்டில் முதல் சுடுகாடு வரை
மனிதன் புதைக்கப் பட்டாலும் சரி
எரிக்கப்பட்டாலும் சரி
மரத்தின் நன்கொடையை
மறவாமல் நினைவு கூர்வோம்!

விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் ஏற்பட்ட
காதல் வார்த்தை பரிமாற்றம் கூட
தடை பட்டது மானுடனால்!
காதல் தூதுவனாம் மழை
மண்ணில் வர தயங்குகிறான்.

மகரந்த சேர்க்கையின் தூதுவனாம்
தேனியின் வாழ்க்கையும் கெட்டது
உன்னால் இன்னும் எதனை பேர் வாழ்வு
கெட போகிறதோ , தெரியவில்லை
காடுகளை அழித்து கட்டிடங்கள் பல
கட்டுகிறாய் !

கண்ணை விற்று ஓவியம் வாங்கும்
உன் முட்டாள்தனம்
உன் அக கண்களுக்கு புலப்படவில்லையா ?

ஆராய்சிகள் பல செய்யும் மானிடா
பணம் காய்க்கும் மரத்தையும்
உன் ஆராய்ச்சியில் சேர்த்து கொள்ளேன் .

வெட்டப்பட்ட மரங்கள் கூட
இறந்த பிறகுதான் மரத்து போகும்.
உயிரோடு இருக்கும்
உன் இதயம் மட்டும்
மரத்து போனது என்?

எது எப்படியே காடுகளை அழித்தல் எனபது
மானிட சமுகத்தை பொறுத்த வரை
சரி செய்ய முடியாத
எழுத்து பிழை தான்.

மனித குலம் எனும் ஆணி வேர்
விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே
காடுகளை அழியாமல் காக்க முடியும்!
ஏய் மனிதா ?

மரமாகிய நான் உனக்கு எச்சரிக்கிறேன்.
உன் வருங்கால சந்ததிகள் பிறந்தவுடன்
தன் அன்னையை காண
ஆசைபடுவர் !
ஆக்சிஜனை சுவாசிக்க ஆசை பட்டால்
மரம் ஒன்றை வளர்த்திடுக !

மரம் வளப்போம் ! செல்வங்கள் பல பெறுவோம்!