முதிர் கன்னிநீ கிழித்தெறியும் நாட்காட்டி 
உனக்கு உணர்த்தியிருக்கும் 
காலம் என்றால் என்னவென்று!

யாரும் இல்லா நேரம் 
உன் வீட்டு கண்ணாடி
உனக்கு உணர்த்தியிருக்கும் 
நெற்றி பொட்டில் இருக்கும் 
குங்குமத்தின் மகிமையை!

நீ தாண்டி செல்லும் 
கல்யாண மண்டபங்கள் 
உனக்கு எட்டா கனியாக 
தெரிந்திருக்கும்!

முதிர் கன்னியே!
உனக்கு ஆறுதல் சொல்ல 
தமிழில் வார்த்தைகளும் உண்டு!

காலம் கடந்தும் 
வாடாத பூவாக !


No comments:

Post a Comment