நவம்பர் 2020

விழிகள் (இரண்டு) போதை




 நித்திரை போதையோடு 
நம் காதல் போதை சேர 
இரு விழிகளுக்கு எல்லாமே
இரண்டாய் தெரிந்தது
இரு விழியோடு 
இரு போதையோடு 
இன்று உனக்காய் எழுதியது!

இரண்டு என்று உச்சரித்தால் 
கடினம் திண்மை உணர்ந்தேன் 
இரண்டை பார்த்தாலும்
மென்மை உணர்ந்தேன் 
விரல் தொட்டாலும்
மென்மை உணர்ந்தேன்! 

சுற்றிலும் வெண்மை 
வெண்மையின் நடுவினில் 
வெண்மையின் எதிர்பதம் 
இல்லை இல்லை 
பூக்களின் நுனியில் மொட்டு
மேட்டின் உச்சியில் கட்டெறும்பு!

உச்ச கட்ட  அழகை மறைக்க
இயற்கை இயல்பாய் 
அரண் அமைக்குமே!
மறந்தேன்...
இங்கே செயற்கை அரண் 
திரை சீலை அழகின் அரணாய்!
இல்லை இல்லை இங்கே 
இமைகள் இயற்கை அரண்
திரை சீலையை நினைத்து  
இமைகளை மறந்தேன்!

நம் கவிதையை உன் இதழால்
சுவைத்துக்கொண்டே 
உன் இரு விழிகள் என்னை நோக்க 
பார்வையின் அர்த்தம் நான் அறிந்தேன் 
இரண்டு விழியால் முறைக்கிறாய் 
ஏன் என்று நான் வினவ 
எண்(ன்) இரண்டு ராசி எண்ணா?
இரண்டு விழியின் மேல் 
என் இவ்வளவு ஏக்கம் ?
சரியாய் ஒரு காதல் சூடு இட்டாய்!

காதல் சூடு எப்படி என்று நீ சீண்ட 
பதில் சூடு நீ வேண்டுகிறாய்
ஆதலால் இன்னும் ஓர் கவி உனக்கு 
இரண்டு மட்டும் அல்ல 
எண் ஒன்றும் எனக்கு ராசிதான்! 

இயல்பாய் எழுதுவதை - உன் 
இதழால் இயல்பாய் வாசிப்பாய்
இரு அர்த்தம் புரிந்து கொள்வாய்!
இறுதியில் நாணம் 
இதழ் திறக்காமல் இதழ் சிரிப்பு 
இதுவே கவியின் முடிவுரை!