புத்தாண்டு கவிதை | New year kavithai
வெண்மேகங்கள் கருமேகமாய் உருமாறி
வெண்மழையை பூமிக்கு அனுப்பட்டும்!

மொட்டுக்கள் மலர்ந்து மணமாய் மலர 
வண்டுகள் அங்கே வல்லமை பெறட்டும்!

நெருங்க முடியா விண்மீன் தொலைவை 
நெல் விளைச்சல் தொட்டு விடட்டும்!

அன்னை மடியில் குழந்தை சிரிப்பாய்
இயற்கை அன்னை வளம் பெறட்டும்!

விவசாயமும் இயற்கையும் அழகாக 
விவசாய கரங்களில் பணம் புரளட்டும்!

கடல் சில காலம் ஓய்வெடுக்க 
ஆறுகள் அணைகளில் அடங்கட்டும்!

கடவுள் ஒன்றே வழிபாடு வித விதம் 
மதச்சார்பின்மை மனதில் பதியட்டும்!

உடல் வேறு குருதி நிறம் ஒன்றே 
சாதி வெறிகள் காணாமல் போகட்டும்!

மனக் கசப்பை தீயிலிட்டு எரித்து 
மனங்கள் மல்லிகை மணமாகட்டும்!

சிவந்த இதழ்கள் தீயது பேசாது 
ரோஜா இதழ்களாய் சிரிக்கட்டும்!

அரசியலில் ஊழல் முற்றிலும் அழிந்து
கர்ம வீரராய் தலைவர்கள் மாறட்டும்!

இளைய சிங்கங்கள் பிடரி சிலிர்த்தெழுந்து 
இந்தியாவை வல்லரசாக மாற்றட்டும்!

எல்லோரும் எல்லா வளமும் பெற
புத்தாண்டு புன்னகை புரியட்டும்!

வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!
வாழ்த்தி வரவேற்போம் புத்தாண்டை!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

என் இணையதள உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!No comments:

Post a Comment