பூ மொட்டாய்  மழலை  உறவொன்று
என் இனம் தழைக்க வந்ததின்று!

வயிற்றுத் தசை இனி பெரிதாகும் 
மழலை ஒன்று அங்கே உதயமாகும்!

இரவும் பகலும் இனி கவிதையாகும் 
வளரும் மழலையால் நாளும் இனிமையாகும்!

சுரக்கும் உமிழ் நீர் இனி வாந்தியாகும் 
சுவை தந்த உணவுகள் எதிரியாகும்!

இவள் மூச்சு இனி தாய்மை பேசும் 
இவன் மூச்சு இனி தந்தை சொல்லும்!

தமிழுக்கு புனிதம் அம்மா எழுத்தாம்
வாழ்வில் இனி இது இவள்  உயிரெழுத்தாம்!

கடைவீதி பொம்மை மழலையாய் மின்னும் 
பத்து மாதங்கள் இனி பல வருடமாய் நகரும்!

எட்டி எட்டி மழலை பாதம் உதைக்குமாம் 
ஏங்கி நாம் இருக்க  மீண்டும் உதைக்குமாம்!

ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தோம் 
இனி மூவுடல் ஓருயிராய் வாழ்வோம்!

6 comments:

 1. வணக்கம்
  கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி

   Delete
 2. Congrats Baskar. Expressing way also good. Keep ROCK!

  ReplyDelete
 3. கடை வீதி பொம்மை இனி மழலையாய் மின்னும் ......very much nice line baski
  .....

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி

   Delete

 
Top