என் உணர்வுக்கு உயிர் கொடுக்க
உள்ளத்து துள்ளல்களை சுகமாக்க
வாழ்நாள் கனவு சுக நிஜமாக்க
என் உள்ளத்து விழி காட்டிய வழி நீ !
கருமேக மழை குளிர் காற்றாய்
மனதோடு ஒட்டிக் கொண்டு
நிதமும் என் மனம் வருடும்
மதுரை மல்லித் தென்றல் நீ !
உன் குரல் என் செவி அறிந்து
உன்னதக் குரல் இதுவென்று
என் அகம் அது தினம் உணர்த்திற்று
தரணியில் சிறகில்லா தமிழ் குயில் நீ !
என் இதயத்திற்கு விழி கொடுத்து
அதற்கு இமை கொடுக்க நீ மறந்து
காலம் முழுதும் உன் உள்ளம் பார்க்க
இதய விழி கொடுத்த பிரம்மா நீ !
வாழை மடல் மென்மை நீ கொண்டு
வானுயர நற்குணம் அதில் விதைத்து
இன்முக நட்பை எனக்கு பரிசாக்கி
கண்ணீர் ஊற்றை நிறுத்தியவள் நீ !
வலியும் சுகமும் வாழ்வோடு நடை போட
வலியை நிரந்தரமாய் புறந்தள்ளி
சுகத்தை நிரந்தரமாய் எனதாக்கி
என் உள்ளத்துக்கு வரம் கொடுத்தவள் நீ !
முகம் பார்க்கும் காதலுக்கு
உலகத்தை உதாரணம் சொல்லி
உள்ளம் பார்க்கும் நட்புக்கு
உலகமாய் நம்மை உதாரணமாக்கியவள் நீ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக