உலகம் முன்னேறியதாய் 
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு 
மானம் என்னவென்று அறியாது 
பண்பாடு என்னவென்று புரியாது!

தலைவனைக் கண்ட தலைவியவள் 
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!

தேகம் மறைக்கா ஆடைகள் 
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன் 
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!  

அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும் 
பண்பு கொண்ட முதிர்ந்த மனது 
பண்பாடோடு உன்னை பாராட்டும்!

இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்  
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா? 

செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும் 
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும் 
பண்பாடு ஒலி வேகத்திலாவது 
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!

7 comments:

 1. வகை (4) என்று எடுத்துக்கொள்கிறோம்....

  நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :)

   Delete
 2. இலக்கணம் மறந்த கவிதைகளை.... வரி மிகச்சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கர் :)

   Delete
 3. அருமையான கவிதை

  வாழ்த்துக்கள் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கரூர் பூபகீதன் :)

   Delete

 
Top