ஏழை குடிசை அழகானது
சிட்டு குருவியின் குடிலாலே!
இறக்கை முளைத்த மழலையாய்
இலக்கு தெரியாமல் வீட்டினுள்
இங்கும் அங்கும் பறந்தாயே!

கிராமத்து வீதிகளுக்கு அழகாய்
மின் கம்பியில் வரிசையாய்
மின்னொளியாய் தெரிந்தனவே!
இனி எங்கு சென்று தேடுவேன்
சிறுவயதில் நான் கண்ட சிட்டுதனை!

இரை தேடி ஏமாந்த சிட்டுக்கள்
மானுடனால் ஏமாற்றப்பட்டனவே!
வேதி உரங்கள் கலந்த மண்ணாலே!
புழு பூச்சி ஏதும் இல்லா
பூமித்தாய் அநாதை ஆனாளே!சிட்டு பறக்கும் இடத்தில்
சிறகுகள் இல்லாமல்
புகை தூசு பறந்தனவே!
சிட்டு பறக்கும் உயரம் தாண்டி
செல்போன் டவர் வளர்ந்தனவே!

நொடிமுள் வேகமாய் மணிமுள் நகர
அலைபேசியில் பேசும் மானுடர்கள்
சிட்டுகளின் உயிரை சிதைத்தனரே!
மலர்ந்து விட்ட மொட்டு சிட்டுகளை
மலடிப் பெண்ணாய் மாற்றினரே!

ஊடகங்களே ஊக்குவியுங்கள்
சிட்டுகளைக் காணவில்லை யென்று!
மானுட விழிகளே சபதமெடுங்கள்
சிட்டுகளின் இனம் காப்போம் யென்று!2 comments:

  1. சிறுவயது இனிய நாட்கள் ஞாபகம் வந்தது...

    ReplyDelete
  2. சிட்டுகளை பார்த்து ரொம்ப நாளாயிற்று.

    ReplyDelete

 
Top