புகை


வளரும் சந்ததியினரை
வழுக்கிய சறுக்கள்!
வலிமையிழந்து நீ 
வலுவோடு அவன்!

விரல்களுக்கு இடையில் 
உயிரைத் தின்னும்
விளையாட்டுப் பொருளாக
கலியுக நாகரீகம் இவன்!

தொடர்ந்து வருகிறான்
தூக்கி நீ எறிந்த போதும்!
உதடுகளோடு மட்டுமல்ல 
உயிரோடு உறவாடுகிறான்!

வெள்ளைப் புகையில் 
கருப்பாய் ஒரு விதவை
சிவந்த நுரையீரலில்
சீராக மாற்றம் செய்தான்!

புகையோடு உறவாடி
புதியதாய் ஓர் உறவு 
நுரையீரலை சந்தித்து  
புற்று நோய் வளர்த்தான்!

வளர்ந்து விட்ட அவன் 
எட்டி உதைத்தான்
அந்தோ சாய்ந்தான் 
கல்லறைக் குழியில்!

No comments:

Post a Comment