தொடரும் கவிதை | thodarum kavithai


அவள் முகம் நிலவென்று 
இருள் விழி திறந்து 
இரவுகள் எழுதிய கவிதை 
நீண்டதொரு தொடர் கவிதை!

விடியல் பிறந்தாலும் 
விண்மீன்கள் மறைந்தாலும் 
தொடர் கவிதை நில்லாது
கை மாறியது விடியலோடு!

இது நேற்றோ இன்றோ அல்ல 
என்றும் தொடரும் கவிதை!

No comments:

Post a Comment