இந்த நாள் இனிய நாள்

இந்த நாள் இனிய நாள்

இந்த நாள் இனிய நாள்
இந்த நாள் இனிய நாள்


பாதங்கள் இல்லா இரவுகள் 
மெதுவாய் நடை போட
மேகத்தை விலக்கி 
நிலவை அடைந்தேன்!
உன்னால் - இந்த நாள் இனிய நாள்!

கடந்து போன நேரங்களை 
கடக்க போகும் நேரங்களை 
அருகே பிடித்து அமர வைத்து 
ஆணி அடித்து இருக்கச் செய்தாய்!
உன் நினைவுகளை மலர செய்தாய்!

இதழ் திறந்து இடை விடாமல் நீ பேச 
இதயம் திறந்து  இடை விடாமல் நான் பேச 
உன் மொழி நான் புரிந்தேன் 
என் மொழி பேச்சு மெதுவாய் நீ புரிவாய்!

இரு சக்கர வாகனத்தில் பயணித்து 
இரண்டு துருவத்தையும் தொட்ட உணர்வு 
இருந்தும் கேட்டுக் கொண்டேன் 
இவ்வளவு நேரம் வாகனத்திலா பயணித்தோம்?

அருகே அமர்ந்து இலக்குகள் இல்லா 
இடைவிடா பயணம் உன்னோடு!
எதிர் காற்று முகத்தில் மோத 
உன் இதயத்தின் அரணாய் என் இதயம்!
உன் இதயம் பின்னே ! என் இதயம் முன்னே!

நியாபக மறதி நான் அறிவேன் 
மயக்க நிலையும் நான் அறிவேன் 
காதல் நட்பு நிலையும் அறிவேன் - ஆனால் 
நம் நிலை நான் அறியேன்!

களங்கமில்லா இதயத்தோடும் பேசுகிறாய் 
சிந்தித்து மூளையோடும் பேசுகிறாய் 
உன் முழு குழப்பமாய் நான் இருக்க 
உன் இதயம் பேசினால் உன் இதழுக்கு தண்டனை!

எதிர்பார்த்து தேடிய முடிவிலி அன்பு 
கரம் தொட்டதாய் உணர்ந்தேன் 
கரம் தொட வேண்டும் என்றேன் 
இதயமும் இதழும் சேர்த்து முறைத்தாய்!

எங்கு சென்று முறையிடுவேன்
உன்னைத் தவிர எவர் உண்டு 
தவறுதலாய் வேண்டுகோள் இட்டேன் 
வந்த கவிதைகள் எல்லாம் ஓடி விட்டன 
கவிதை இல்லா வெற்றுக் காகிதமாய் நான்!

எதில்தான் கவிதை இல்லை 
உன் மூச்சிலும் உண்டு பேச்சிலும் உண்டு
என் இதயம் நிரம்ப கவிதையாய் நீ இருக்க 
வெற்று காகிதமாய் நான் இல்லை 
என் இதயம் முழுக்க கனத்த கவிதையாய் நீ!

நம் அகமும் முகமும் சந்தித்து 
கடந்து போன அந்த நாள், என் இனிய நாள்!
இல்லை! இல்லை! நம் இனிய நாள்!




1 கருத்து: