காதலை அறிந்திடு

காதலை அறிந்திடு

Understanding love
Kaathalai Arinthidu

நேசித்தது மெய் என்றால் 
உதடுகள் மட்டும் அல்ல 
உள்ளமும் சொல்லும்!
எங்கிருந்தாலும் வாழ்க !

காலங்கள் மாறும் 
காதல் மாறுவதில்லை 
இரண்டையும் மறுப்பதிற்கில்லை
இதை புரிவதில் தவறில்லை!

மலர் தொட்ட தேகங்களை 
தென்றல் உரசிய தேகங்களை 
கவிதையால் திட்டி 
காதலை தீட்டிய காலம் அது!

கத்தியும் அமிலமும் 
கரம் கோர்த்துக் கொண்டு 
கவி கொடுத்த தேகத்தை 
கந்தலாய் கிழிப்பது ஏனோ ?

காதலை இழந்தாலும் - அதன் 
நினைவையே உணவாய் உண்டு 
நாட்காட்டி காலத்தை 
நகரச் செய்த காலம் அது!

காதலை உணர்ந்து இருந்தால் 
இதயம் இழப்பை ஈடு கட்டும்
நாட்கள் மெதுவாய் நகர 
இழப்பீடு மெதுவாய் கரம் எட்டும்!

எழுதிய கவிதை எல்லாம் 
நிலவில் மோதி எதிரொளியாய் 
பூமியில் மோத செய்த காதல் 
கருப்பு வெள்ளை கால காதலோ ?

வாழ்ந்த காதலை இதயத்தில் வை 
வாழாத காதலை நினைவில் வை 
உண்மை காதலில் எல்லாம் சாத்தியம் 
இது காதல் மேல் சத்தியம்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக