காதல் நடிகை | Kaathal Nadigaiவிளக்கு ஒளி பொலிவாய் 
விழியது காதலில் மின்னும்!
இருந்தும் இல்லவே இல்லை 
இன்று வரை சொல்லிக் கொள்கிறாய்!

உன் இதயத்தின் காதல் வார்த்தையை
உதடுகளால் தவறாய் உச்சரிப்பாய்!
ஒரு முறை சரியாய் உச்சரித்தால் 
ஓராயிரம் கவிதை எழுதிடுவேன்!

உன் இருவிழி ஓரப்பார்வையை 
தினம் தினம் நான் அறிவேன்!
அந்நேரம் நம் காதலோடு 
நான் படும் பாடையும் நீ அறிவாய்!

காதலைக் கட்டுக்குள் கொண்டு வர 
சிறு மூளையைத் தூண்டி விடுவாய்!
அந்நேரம் இதயத்தில் கசியும் காதலை 
இதழ் வெளிப்படுத்தாமல் நீ தடுப்பாய்!

எட்டும் தூரத்தில் நான் நிற்க
எட்டாக் கனியாய் நீ நினைப்பாய்! 
எட்டுகின்ற கனியாம் நம் காதலை
எட்டிப் பிடிக்காமல் நீ நடிப்பாய்!

உன் சுய நினைவு நீ இழந்தாலும் 
உன் விழியில் நம் காதல் மின்னும்!
சுய நினைவு இழக்கா காதலோடு
அந்நேரமும் சுயநினைவாய் நீ நடிப்பாய்!

No comments:

Post a Comment